வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சாந்தாம்மாவிடம் பேட்டியும், பரிசும்.

அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டின் சாந்தாம்மாவை 2011 இல் லேடீஸ் ஸ்பெஷலுக்காக மகளிர் தினத்தில் பேட்டி எடுத்தேன். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரையாக அது லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.


அவர்களை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கே சென்று சந்தித்தது மறக்க இயலாத அனுபவம். பலமுறை ஆஸ்பத்ரிக்கு போன் செய்து அவரது  உதவியாளர் பிரியா கணேஷிடம் பல முறை கேட்டு சந்தித்தேன். மிக நெகிழ்ந்த சந்திப்பாக அது அமைந்தது. அன்றே காலையில் சாந்தாம்மாவை சந்தித்து விட்டு மதியம் போர்ட் ட்ரஸ்டில் மகளிர் தின சிறப்பு உரையாற்ற சென்றேன்.

அதற்கு அடுத்த வருடமே மகளிர் தினத்தில் சாந்தாம்மாவுடன் சிறப்பு விருந்தினராக சாஸ்த்ரி பவனில் கலந்து கொள்ள  சந்தர்ப்பம் வாய்த்தது ஆச்சர்யமளிக்கும் விஷயம்.

நானும் என் தோழி விஜயலெக்ஷ்மி விஜியும் சாஸ்த்ரி பவனின் பெண்கள் மருத்துவர் டாக்டர் சத்யாவும்  அவருடன்  அமர்ந்து நிகழ்வுகளில் பங்கேற்று அவர் கையால் விருதும் வாங்கினோம்.

இவற்றை எல்லாம் சாத்தியமாக்கிய என் அன்புத் தோழிகள் கீதா, விஜி, தனா, மணிமேகலை ஆகியோருக்கு நன்றிகள். 


3 கருத்துகள்:

  1. சாந்தாம்மாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலான தகவலைத் தந்திருக்கலாம்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஆம் குமார். அவங்க வாழ்க்கையையே புற்று நோயாளிகளின் நோயைத் தீர்க்க அர்ப்பணிச்சுக்கிட்டவங்க.. அவங்களைப் பத்தி ஒரு புத்தகமே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)