புதன், 28 ஆகஸ்ட், 2013

திருப்பூர் பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தில் (கருத்துக்களத்தில்) சிறப்பு விருந்தினராக.

டாலர் தேசமான திருப்பூரில் இயங்குகிறது பார்க் கலை அறிவியல் கல்லூரி. 1993 இல் ( ஜுலை 14 - என் பிறந்தநாள் இது ) ஆரம்பிக்கப்பட்டுள்ள இது 1600 மாணாக்கர்களைக் கொண்டு இயங்குகிறது. 1,100 இளைஞர்களும், 500 யுவதிகளும் பயில்கிறார்கள்.


சென்ற வருடம் ஏவிசி கல்லூரியில் சுதந்திர தின உரையாற்றிய நிகழ்வை முகநூலில் பகிர்ந்த போது பார்க் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் ஜெயராமன் அவர்கள்  தான் ஏவிசி கல்லூரியின் முன்னாள் மாணாக்கர் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

அப்போதே” உங்களை எங்கள் கல்லூரிக்கும் அழைக்கின்றோம். பேச வரவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். அடிப்படையில் எழுத்தாளர் ஆன நான் ( மிகப் பெரும் பேச்சாளர் அல்ல) என் கருத்துக்களை இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒப்புக் கொண்டேன்.

என் கணவருடன் வருகிறேன் என்று சொன்னதும் ஒப்புக் கொண்ட அவர் சிறப்பான முறையில் வந்து செல்வதற்கும், தங்குதற்கும் குளிர்சாதன வசதி கொண்ட அறை, வந்து செல்ல கார், சிறப்பான உணவு  ஏற்பாடு செய்து  வீட்டில் இருந்து கிளம்பியது முதல் வந்து சேர்ந்தது வரை விசாரித்த அவருடைய ஹாஸ்பிட்டாலிட்டியை மறக்க இயலாது.

மேலும் சுமதி மேடம் ( கணினிப் பேராசிரியை) ஆனந்த் சார் ( கணினித் துறை ஹெச் ஓடி), லெக்சரர் சபரிநாதன், லெக்சரர் ப்ரவீன், லெக்சரர் புவனா ஆகியோரும் எங்களை நன்கு கவனித்துக் கொண்டார்கள். அனைவருக்கும் நன்றிகள்.

திருமாறன் ஜெயராமன் சார் பற்றி நிறைய சொல்லலாம். முகநூலில் கனவுப் பிரியன் எழுதியது ஒன்றே போதும்.அவருடைய பணி மகுடத்தில் மாணிக்கக் கல் போல. அவருடைய முகநூல் பக்கத்தில் பார்த்தால் ஒவ்வொரு மாணவரும் பிரின்சிபாலை  எவ்வளவு மதிக்கின்றார்கள். அன்பு செலுத்துகின்றார்கள் எனக் காண முடிந்தது.

முக நூலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் என் குறிப்பிடத்தக்க நண்பர்களுள் திரு. திருமாறன் சார் அவர்கள் முக்கியமானவர். இதன் மூலம் நிறைய நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைத் தங்கள் கல்லூரிக்கு மாணவர்களுக்கு உரை நிகழ்த்த அழைக்கின்றார்.

சிறப்பான அனைத்தும் தம் மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என அவர் நினைத்து அதைச் செயலாக்கமும் செய்கிறார்.  நான் கலந்து கொண்ட மறுநாள் காம்கேர் புவனேஸ்வரி கலந்து கொண்ட ஒரு ப்ரோகிராமும் நிகழ்ந்திருக்கிறது.

முகநூலில் பொதுவாக திருப்பூர் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளையும் திருமாறன் அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அது போல பெரியார், அண்ணா, அம்பேத்கார் போன்றோரின் சிந்தனைகளையும், பெண் கல்வி, ஜாதி மறுப்பு போன்றவற்றை ஆதரித்தும் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பகிர்ந்தும் வருகிறார்.

இந்தக் கல்லூரியில் மாணவர்களுக்கு சாஃப்ட் ஸ்கில் ட்ரெயினிங்கும் வழங்கப்படுகிறது. பேச்சு மொழி ஆங்கிலத்தைச் சரளமாகப் பயிற்றுவிப்பதற்காக திரு வீரராகவன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒரு கவிதையை வாசித்தார் .நன்றாக இருந்தது.

பார்க் கல்லூரி செயலாளர் திரு ரகுராஜன் அவர்களும் திரு திருமாறன் அவர்களுமே சிறப்பான முன்னுரை ஆற்றினார்கள். திருமாறன் சார் திருப்பூர் குமரன் மனைவியின் வாழ்வில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். இன்னும் கூடப் பெண்களுக்கு கருத்து சுதந்திரம் கிட்டவில்லை என்பதை விவரிக்கும் சம்பவமாக அது இருந்தது.

மேலும் மார்டின் லூதர் கிங் ஜூனியரின் போராட்டத்தையும் அதன் விதையாக விழுந்த ரோசா பார்க்ஸ் அம்மையாரின் எதிர்ப்புணர்வையும் சமத்துவம் வேண்டி நிகழ்ந்த நீண்ட போராட்டத்தையும் பகிர்ந்தார்.

செயலாளர் ரகுராஜன் பெண்கள் அரசியல் பற்றி அறிய வேண்டியதன் அவசியத்தைக் கூறினார்.  தினமும் செய்தித்தாள் படிக்கவும், தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கவும் வேண்டும் என அறிவுறுத்தினார்.

 இறைவணக்கத்துக்குப் பின் குத்து விளக்கை ஏற்றி வைத்தேன். அவர்கள் உரையாற்றியதும்  நானும் என்னுடைய கருத்துக்களைப் பார்க் கல்லூரியின் மகளிரிடம்  பகிர்ந்துகொண்டேன்.  மிகச் சிறப்பாக உள்வாங்கிக் கொண்டார்கள்.

மகளிர் மன்றங்களின் தேவைகள், சேவைகள் பற்றியும் , குழுவாக செயல்படும்போது அதன் வீச்சின் பலம் பற்றியும், தனி மகளிராகப் போராடி குழுவாக இணைந்து கரம் கோர்த்து களப்பணியில் இருந்து கார்ப்பரேட் பணி வரை ஜெயித்த மகளிர்கள் பற்றியும்,  மற்றும் பதின்பருவப் பெண்களுக்கான மனம் உடல் கல்வி சார்ந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது பற்றியும் கூறினேன்.

அவர்கள் பொன்னாடை, பணமுடிப்பு, கிஃப்ட் ஆகியன தந்து கௌரவப்படுத்தினார்கள். என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தை அந்தக் கல்லூரியின் சாதனைப் பெண்கள் மூவருக்கு வழங்கி வந்தேன். “ங்கா “ புத்தகத்தையும் முதல்வர், செயலாளர் ,பேராசிரியைகளுக்கு வழங்கினேன். 

பெண்களின் கலை நிகழ்ச்சிகளோடு சந்தோஷமாக இந்த விழா நிறைவடைந்தது. என்னைப் பற்றியும் நான் வலைத்தளம் எழுத வரக் காரணமான என் தமிழன்னை சுசீலாம்மா பற்றியும் அவர்களின் எழுத்துப் பணி, விருதுகள், ( எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் விருது, கனடா இலக்கிய விருது ) பற்றியும் கூறினேன்.

என் கணவரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக இந்த விழா அமைந்தது. பார்க் கல்லூரிக்கும், மாணவிகளுக்கும் பேராசிரியைகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கும், செயலாளர் திரு. ரகுராஜன். முதல்வர் திரு. திருமாறன் அவர்களுக்கும் என் நன்றிகள்.


3 கருத்துகள்:

  1. திருப்பூரில் எங்களைப் போன்றவர்கள் இருப்பதை மறந்து விட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
  2. திரு.திருமாறன் ஜெயராமன் பற்றி சொல்லி தெரிவதில்லை அவரை பற்றி தெரிந்த என்னை போன்ற அவருடைய மாணவர்களுக்கு......
    அவர் என்னுடைய உயிர் நண்பர் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்....
    எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடிய நல்ல நண்பர்....

    இவன்
    என்றும் ...என்றென்றும்....
    உங்கள் உயிர் நண்பன்...
    சபரி அப்பாச்சி
    கானா,மேற்கு ஆப்ரிக்கா.....

    பதிலளிநீக்கு
  3. அடுத்த முறை வரும்போது சந்திக்கிறேன் ஜோதிஜி

    ஆம் நீங்கள் கூறியது உண்மை சபரி அப்பாச்சி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)