செவ்வாய், 2 ஜூலை, 2013

நன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.


கேள்வி:தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி சாத்தியமாகிறது? அத்தகைய மனதை தொடர்ந்து தக்க வைப்பது கடினமாயிற்றே?

பதிவர் தேனம்மை லட்சுமணன்

கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.


உணர்வின் வீர்யம் பொறுத்தும்., ஆழம் பொறுத்தும் அது எளிதாய் நிகழ்கிறது.எப்போதோ சில சமயம் நான் கவிதைகளிடமிருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் தாக்கும் போதெல்லாம் அதிகமாக கவிதை எழுதி இருக்கிறேன். சிலசமயம் நான் கவிதைகளைத் துரத்தியும். சில சமயம் அது என்னைத் துரத்தியும் காதல் செய்து கொண்டிருக்கிறோம். என்றென்றும் தீராத அமிர்தமாய் அது தன்னை என்னிடம் கையளித்துக் கொண்டே இருக்கிறது.

மிக ஆழமான உணர்வுகளின் போது கவிதைகளில் அவற்றைப் பகிர்ந்தபின் நிம்மதியாய்த் தூங்கி இருக்கிறேன். கடவுளிடம் என்னை ஒப்புவித்த குழந்தை போல.

எத்தனை காலமாகவோ நானும் அதுவும் தொடர்பில் இல்லை என்றாலும் தொடர்பில் திரும்ப வந்தபின் விட்டுப் பிரிவது என்பது குறுந்தகவல் காதல்களைப் போல எளிதாயில்லை. போகன் வில்லாக்களைப் போலும் குல்மோஹர் போலும் ., டேலியா., கினியா போலும் அவை விதம்விதமான நிறங்களிலும். மல்லி., முல்லை ., வாசனைகளிலும் ஒரு தாயன்பைப் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சிநேகிதியைப் போலும் ., குழந்தையைப்போலும் உணர்கிறேன் கவி்தைகளிடம் என்னை ஒப்புக் கொடுக்கும்போது.

என்னை மேலெடுத்துச் சென்றது, சிம்மாசனம் அளித்ததும் சேவகம் செய்வதும் அதுதானென்றாலும் நானும் அதன் சேவகியாய் இருக்கிறேன். ஓடமும் வண்டியுமாய் நானும் அதுவும் ஒருவரை ஒருவர் சுமந்துகொண்டிருக்கிறோம். ஒன்றிலொன்று உள்ளூரக் கலந்துவிட்டதால் ஓடமும் வண்டியும் என்றும் பிரிவதேயில்லை.. ஒத்த காதலர்களைப் போலிருக்கும் என்னையும் கவிதையையும் போல.

http://veeduthirumbal.blogspot.com/2011/01/blog-post_28.html
நன்றி மோகன்குமார்.

9 கருத்துகள்:

  1. அருமையாகச் சொன்னீர்கள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  2. // கடவுளிடம் என்னை ஒப்புவித்த குழந்தை போல... //

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாரல்

    நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அருமையாக சொன்னீர்கள் அக்காச்சி.

    பதிலளிநீக்கு
  6. கவிதையை போன்றே ரசிக்க வைத்த பதில் !

    குடிகாரக் கணவனின் மனைவிகளுக்காக என் பதிவு ......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
    பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)