வியாழன், 6 ஜூன், 2013

கடல் பாசியிலிருந்து பெட்ரோல்.:-

கடல் பாசியிலிருந்து பெட்ரோல்.:-

கடல் பாசியை உணவாக உட்கொள்கிறோம். இது மாத்திரை வடிவத்தில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போது இதிலிருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். காரைக்குடியில் அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பாக நடந்த .” பசுமை உயிர் சக்தி “ கருத்தரங்கில் சென்னைப் பல்கலைக் கழகத்தின்  தாவரவியல் உயிர் ஆய்வு மைய இயக்குநர் ரங்கசாமி தெரிவித்தாராம்.

மூலிகைப் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லப்படும்போது அது ஜட்ரோப்பா கார்க்கஸ் என்ற ஆமணக்கு வகைச் செடியிலிருந்து கிடைக்கிறது. ஆனால் இந்த கடல் பாசி பெட்ரோல் இதை விட 3 மடங்கு அதிகம் உற்பத்தி செய்ய முடியுமாம். இதிலிருந்து   “பையோ  டீசல் “ மற்றும் “ பை எத்தனாலாக “ மாற்றி அதிலிருந்தும்  பெட்ரோல், மேலும் கிடைக்கும் புரதம் கோழித்தீவனமாகவும் உபயோகப்படுகிறதாம்.


உப்பளத்தில் / கடல் நீரில் “ நானோ குளோரோப்ஸ்” மற்றும் நன்னீரில் “ போர்ட்ரியோ காக்கஸ் ப்ரவுனி” போன்ற பாசிகளை வளர்த்து  30 சதவிகிதம் பெட்ரோல் எடுக்கலாமாம்.  இந்த பெட்ரோலுடன் 5 சதவிகிதம் எத்தனால் கலந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த எத்தனால் கரும்பு மற்றும் மக்காச் சோளத்திலிருந்து தயாரிக்கப் படுவதால் அதன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைத் தவிர்க்க  கடல் பாசியிலிருந்து பெட்ரோல் தயாரிக்க ” அபான் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் “ என்ற நிறுவனம்  25 கோடி ஒதுக்கி 5 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறது.

இப்படித் தயாரிக்கப்படும் பெட்ரோலை வாங்கிக் கொள்ள பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் முடிவெடுத்துள்ளதாம். இது சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கார்பண்டை ஆக்ஸைடை கிரகிக்கிறதாம். இதனால் ( குளோபல் வார்மிங்) புவி வெப்பமாதல் தடுக்கப்படுகிறதாம்.

சோலார் மற்றும் பாட்டரி வண்டிகள் உபயோகத்தில் உள்ளன. இப்போது ஜட்ரோப்பா கார்க்கஸிலும், கடல் பாசியிலும் பெட்ரோல் தயாரிக்கப்பட்டால் அது இறக்குமதிச் செலவுகளைக் குறைத்துவிடும். பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடலாம். என்ன ஆளுக்கு ஒரு ஏரியா கடல் பகுதியை ஒதுக்கி அவங்க அவங்க வளர்த்துக் கொடுக்குற கடல் பாசிக்கு ஏற்ப பெட்ரோல் வழங்கினாங்கன்னா இன்னும் கூட மிச்சமாகும். மக்களும் ரொம்ப அவசியப்பட்டா மட்டுமே வண்டியை எடுப்பாங்க.

டிஸ்கி:- இந்த இடுகையையும் பாருங்க.

டீசலுக்கு மாற்று ஜட்ரோப்பா கர்க்காஸ்.. ( JATROPHA CORCUS FOR DIESEL)




4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. பதிவு நல்லாருக்கு.

    ஆனா,

    //ஆளுக்கு ஒரு ஏரியா கடல் பகுதியை ஒதுக்கி//

    இதுதான் வில்லங்கமான ஐடியாவாத் தெரியுது!! ஹா.. ஹா.. :-))))))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)