திங்கள், 24 ஜூன், 2013

தினமலர் பெண்கள் மலரில் ”தொடரும்” கவிதை..

வாழ்நாள் முழுமையும்..:-
*************************************
பட்டாம்பூச்சி
சுவைக்கச் சுவைக்கத்
தேடிக்கொண்டே
இருக்கிறது தேனை.

சிலந்தி
கலையக் கலையக்
கட்டிக்கொண்டே
இருக்கிறது கூட்டை.


மண்புழு
விழுங்கி விழுங்கி
உழுதுகொண்டே
இருக்கிறது மண்ணை.

செடி
உதிர்க்க உதிர
பூத்துக்கொண்டே
இருக்கிறது பூவை.

கவிதை
எழுத எழுத
தொடர்ந்துகொண்டே
இருக்கிறது என்னை.


டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 23, 2013 தினமலர் ( திருச்சி பதிப்பு) பெண்கள் மலரில் வெளிவந்தது. நன்றி தினமலர்.


7 கருத்துகள்:

  1. அருமை... தினமலரின் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி சாரல்

    நன்றி தனபாலன்

    நன்றி ஹிஷாலீ

    நன்றி மாதேவி

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. தினமலர் இன்னும் முன்னேறவே இல்லை. பெண்கள் மலருக்கு ஈ பேப்பர் கிடையாது. இத்தனை வருஷம் ஆச்சு. இன்னும் ராம சுப்பையர் காலத்திலேயே இருக்கு.

    அதனால் இங்கே எழுதுகிறேன். ஸ்ரீ எழுதிய "முகப்புரை"யில் திருச்சி பானுரேகா மலேசியாவில் உள்ள வசதிகளை எழுதியிருந்தார்கள். அது கொஞ்சம் பேராசைதான். இங்கே வேலையே கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் ஆட்சி மாறும்போது வேலை பறிபோய் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ் நிலை. இந்த நிலையில் குழந்தைகளை அம்மா வேலை பார்க்கும் இடத்திற்கே கொண்டு வந்து விடலாம், குழந்தைகளுக்கு பால் உணவு கொடுக்கலாம் என்பதெல்லாம் நிறைவேறாத கனவுகள்தான். அதேபோல் "எங்கள் பக்க"த்தில் திருச்சி ஆனந்தி இலவசத் திட்டங்களை நிறுத்தி விட்டு பள்ளிகள் கல்லூரிகளை மேம்படுத்தலாம் என்று எழுதியிருந்தார்கள். பதினொன்று படிக்கும் போது சைக்கிள் லாப்டாப் என்று கொடுப்பது கல்லூரிக்கு வந்ததும் அங்கேயே போய் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது என்பதெல்லாம் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதைதான்.



    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)