வியாழன், 9 மே, 2013

இறந்த முட்டையிலிருந்து உயிர்பெற்ற கோழிகள்.

பாம்புகள் துரத்துகின்ற
இரவுக்கனவில் விழிக்கவொட்டாது
பள்ளத்தில் தடுமாறுகின்றன
ஓடத்துடிக்கும் கால்கள்.
கழுத்து முறிந்து
கொண்டை திருக
அதிரடித்து எழுப்புகிறது
மதியத் தூக்கம்.


கோழி முட்டை எடுத்துப்
புற்றுக்கு ஊற்றிவிட்டுப்
படுக்கும் சொப்பனங்களில்
மயிர்க்கூச்செரிய
உடம்பதிர நீதிகேட்டு
இறகு அடித்து சிலுப்பி நிற்கின்றன
இறந்த முட்டையிலிருந்து
உயிர்பெற்ற கோழிகள்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 8.10.2012 உயிரோசையில் வெளிவந்தது.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)