புதன், 29 மே, 2013

இன நல்லிணக்கம்.

இன நல்லிணக்கம்:-

மனிதர்கள் தம் சொந்த தேசத்திலேயே ஜாதியால் மதத்தால் மொழியால் வேறுபட்டிருப்பது போல  வாழச் சென்ற தேசங்களில் இனத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளிலே கூட வடநாட்டவர், தென்னாட்டவர் என்று வேற்றுமை கருதப்படுகிறது. ஆனால் இனம், மொழி, மதம் , ஜாதி இவை எவற்றாலும் வேற்றுமை பாராட்டாமல் இன நல்லிணக்கத்தோடு இருக்கும் நாடு சிங்கப்பூர்.


சீனர், தமிழர், மலேய மக்கள் இங்கே இனவேற்றுமை கருதாது ஒற்றுமையாய் வாழ்கின்றார்கள். ஒருவர் இனத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ, மதத்தாலோ, ஜாதியாலோ தங்களை விட ஒரு  மாற்றாவது குறைந்தவர் என்ற எண்ணம் ஏற்படும்போதுதான் இது கலவரங்களையும் , யுத்தங்களையும்  கொண்டு வருகிறது.

கருப்பர் , வெள்ளையர் எனப் பாகுபாடு தற்போதுதான் குறைந்து வருகிறது. மார்ட்டின் லூதர் கிங் தம் மக்கள் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என சாத்வீக முறையில் போராடியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்துள்ளார்கள்.

ரோசா பார்க்ஸ் அம்மையார் தான் முதன் முதலில் ஒரு பேருந்தில் வெள்ளையருக்குச் சமமாக  பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நின்றவர். இன்று பரவலாக எல்லா நாடுகளிலும் இன மத  ஜாதி நிற துவேஷம் இருக்கிறது. 

சிங்கப்பூரில் பல ஜாதி, இன , நிற மக்கள் வாழ்கிறார்கள். வருடம் தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாவுக்கும் கல்விகற்கவும் வேலை தேடியும் வந்து சேர்கிறார்கள். அனைவரையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தாமல் சிங்கப்பூர் அரசு அவர்களை சமமாக நடத்துவதால் அவர்கள் மத, மொழி, இன நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் மொழிக்காக திரு கோ. சா அவர்கள் மிகுந்த முனைப்போடு பாடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களின் பெருமுயற்சியினால் சிங்கைத் தமிழர்கள் தங்கள் தாய் மொழியான தமிழிலேயே பட்டயப் படிப்பும் முனைவர் படிப்பும் பெற இயல்கிறது. திரு கோ. சா. அவர்கள் தமிழர்களுக்காக சீர்திருத்தம், முரசு போன்ற பத்ரிக்கைகளையும் இளையர் முரசு, மாணவர் முரசு போன்ற பத்ரிக்கைகளும் நடத்தி தமிழும் தமிழர்களும் வாழ ஆவன செய்தவர்கள்.

மேலும் ஒருவர் தான் வேலை நிமித்தம் வந்து தங்கியிருக்கும் நாட்டைத் தன் நாடாகக் கருதி அதன் மொழியைக் கற்க வேண்டும் எனவும் அந்த நாட்டின் குடியுரிமை வாங்கி அதைத் தன் சொந்த நாடாகக் கருத வேண்டும் என்பதும் அவர் வலியுறுத்திய கருத்து.

இவ்வாறு தாம் பிழைக்கப் போன ஊரையே தன்னுடைய சொந்த நாடாகக் கருதுவதால் மட்டுமே அங்கே  நிலவக் கூடிய பேதங்களைக் களைய முயற்சி எடுக்க முடியும் என அவர் நம்பினார். அந்த மண்ணின் மீது வாழ்வோருக்கு தம் மண் என்ற நம்பிக்கை பெருகும்போதுதான் அசலான இனத் துவேஷம் மறையும் என அவர் எண்ணினார். அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

இதனால் அங்கே வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் நம் நாடு என்ற எண்ணம் ஏற்பட்டு அங்கே மொழி, இன, நிறத் துவேஷம் இருக்கவில்லை. அதற்கு அங்கே வாழ்ந்த மற்ற மக்களின் எண்ணப் போக்கும் அதேபடி இருந்ததும் ஒரு நல்ல காரணம்.

பொதுவாக இன நல்லிணக்கத்துக்கு  நான்கு செயல்கள் அவசியம்.

ஒன்று மக்கள் அனைவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அவராகவே ஏற்றுக் கொள்ளுதல். சமமாக எண்ணுதல். நம்மை மாதிரியே அவர்களையும் நினைக்கவேண்டும்.

 இரண்டாவது மக்களைப் புரிந்து கொள்ளுதல். ( எல்லாரின் ரத்தமும் சிவப்புத்தான், எல்லாரின் கண்ணீரும் உப்புக் கரிக்கும் )

மூன்றாவது அவரது (வழிபாடு, மொழி, உணவுமுறை, கல்வி , பழக்க வழக்கம் ) வித்யாசங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்.

/// நம்அம்மா அப்பா கற்பித்தபடி நம் உணவு, கல்வி, வழிபாடு, பழக்க வழக்கம் இருக்கிறது. நம் நண்பர்களின் பெற்றோர் கற்பித்தபடி அவர்களுடைய உணவு, கல்வி , வழிபாடும் பழக்க வழக்கம் இருக்கிறது. இது பழக்கம் தானே தவிர இதில் வித்யாசம் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை. இதை ஏற்றுக் கொள்ளப் பழகினாலே போதும். கருத்து ரீதியாகவும் அடுத்தவர்களை நம் பக்கம் வளைக்க முற்படாமல் அவர்கள் போக்கிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு நாடும் இது வித்யாசப்படும். அதை எல்லாம் எள்ளி நகையாடாமல் அவர்கள் கலாசாரத்தை அவர்கள் பழக்கத்தை அவர்களை ஏற்பது போலவே ஏற்றுக் கொள்வோம் ///

நான்காவது அவர்களோடு இணைந்து செயல்படக் கற்பது.

/// பல்வேறு நாடு மொழி, இனத்தைச் சேர்ந்த நாம்  இப்படி பல்வேறு பழக்க வழக்கம், செயல்பாடுகள் உள்ள நண்பர்களோடு இணைந்து செயலாற்றவும் , வாழவும் கற்க வேண்டும். ///

இந்த உறுதிமொழிகளை எல்லாம் ஒரு மாணவன் எடுத்துக் கொண்டால் எங்குமே இனத் துவேஷம் ஏற்படாது. எங்கும் இன நல்லிணக்கம் நிலவும்.

எந்த ஒரு நிகழ்விலும் எந்த இடத்திலும் துவேஷம் பாராட்டாமல்,  ஏற்றுக் கொண்டு, புரிந்து கொண்டு வித்யாசங்களையும் சமமாய்க் கருதி இணைந்து செயல்பட்டால் இனப் பாகுபாடு ஒழிந்து விடும். இதுவே இன நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லும்.

வசந்தம் தொலைக்காட்சியிலும் சிங்கையைச் சேர்ந்த  பள்ளி மாணாக்கருக்கு இன நல்லிணக்கத்துக்காக இந்த வருடம் ஒரு வண்ணமடிக்கும் நிகழ்வு நடந்தது. தத்தமக்குத் தரப்பட்டுள்ள பானையில் எல்லா மாணவர்களும்  தோன்றியபடி வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். அவை கண்காட்சியாக வைக்கப்பட்டன.

இந்த மாதிரி நிகழ்வுகளில் குழந்தைப் பருவத்திலிருந்தே பங்குபெறுவதன் மூலம் எல்லாரையும் சமமாகக் கருதும் மனோநிலை கிடைக்கும். மேலும் ஒருவரின் கலாச்சாரம், பண்பாடு, மனோபாவம் எல்லாம் அந்த ஓவியங்களின் வழி வெளிப்படும். அவை  அந்தக் குழந்தைகளை நல்ல நண்பர்களாக்கி நல்ல விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.  எனவே இது போன்ற இன நல்லிணக்க நிகழ்வுகள் தேவை.

அனைவரும் சமம் என்று கருதினாலும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று கருதினாலும் இந்தத் தொல்லைகள் ஏற்படாது. வலியவர் எளியவர் மேல் சவாரி செய்வது குறையும் . எத்தனையோ புரட்சிகள், இனப் போராட்டங்கள் , அழிவுகள் கண்டும் மனித இனம் மாற வேண்டும்.

எல்லாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும்  நாம் அனைவரும் மனித இனமே . அனைவரும் ஒன்றே என எண்ண வேண்டும். . அவர் பிறந்த ஊர் , இடம், மொழி, மதம், இனம் வேறானாலும் அனைவரும் மனிதர்களே நம்மைப் போன்றே அவர்க்கும் என்ற மனித நேயத்தோடு சிந்தித்தால் இன  நல்லிணக்கம் எளிதில் கைகூடும்.

எனவே மனித நேயத்தோடு சிந்திப்போம்.! இன நல்லிணக்கத்தோடு செயல்படுவோம்.!!

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.




3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)