வியாழன், 23 மே, 2013

பனைமரத்துக் கிளி..

பனைமரத்துக் கிளி :-
******************************
மழை கொத்தித் தின்னும்
பறவையாய் கை விரித்த
இறக்கையுடன் ரசிக்கிறாய்..

எனக்கும் கொஞ்சம்
கவிதைத் தானியம் தூவு..
நீ வரும்வரை அன்றிலாய்..
கொறித்துக்கொண்டு அல்லது
நானும் அதில் நனைந்து..


பாறைக்குள் ஓவியங்கள்.,
நீர்க்கசியும் பாசங்கள்..
பெயர் தெரியா
பறவையிட்ட எச்சத்தில்
வெடித்துக் கிளம்பி தாவரங்கள்..
உடைத்தால் சிலசமயம் தேரைகளும்..

பால்குடி மறக்கும் பிள்ளை .,
முந்தானை சுருட்டி
தாய் வாசம் தேடியலைவதாய்..
என்றோ நீ பொழிந்த பாசமழை
இதயச் சுருட்டில் மடித்து..
நினைக்கும்போதெல்லாம் புகைத்து...

பனைமரத்து கிளியாய்
உன் கூர்மூக்கில் அலகு தோய
உள்  விழுந்து சுவைத்ததெல்லாம்
உடைந்து மிதக்கும் எண்ணங்களாய்

உடன்போக உடனிருக்க
ஓடி ஒடி ஒளிவதென்ன..
ஒய்ந்து நான் ஒடுங்கிவிட்டால்
உடனிருக்க வருவாயா.


4 கருத்துகள்:

  1. பெயர் தெரியா
    பறவையிட்ட எச்சத்தில்
    வெடித்துக் கிளம்பி தாவரங்கள்..
    உடைத்தால் சிலசமயம் தேரைகளும்..
    - Iyargai.

    பதிலளிநீக்கு
  2. "எனக்கும் கொஞ்சம்
    கவிதைத் தானியம் தூவு..
    நீ வரும்வரை அன்றிலாய்..
    கொறித்துக்கொண்டு அல்லது
    நானும் அதில் நனைந்து.."
    நாங்களும் பனைமரத்துக் கிளியில் நனைந்துபோனோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்

    நன்றி மணவாளன்

    நன்றி மாதேவி..:)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)