வியாழன், 21 மார்ச், 2013

கம்பர் விழாவில் இன்று ”செம்மொழிச் சிலம்பு” நூல் வெளியீடு .

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பர் விழா இந்த வருடம் இன்று( மார்ச் 21)  ஆரம்பிக்கின்றது.

இதில் சிறப்பு நிகழ்வாக   " செம்மொழிச் சிலம்பு “  ("புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1 ") வெளியிடப்படுகிறது. இது  யாழினி பதிப்பகத்தின் வெளியீடு.  ஆசிரியர் இரா. குமார்.


இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் உயர் பொறுப்புக்களை வகித்து வருகிறார். இவரது 6 நூல்கள் வெளியாகியுள்ளன. ( இருட்டுச் சுவடு என்ற புதுக் கவிதைத் தொகுதி., நடைமுறை இதழியல்,  நனவோடை நினைவுகள், அருள் தொண்டர் அறுபத்து மூவர்  -- என்ற பெரியபுராணம்  ( புதுக்கவிதை நடையில் ) குறிப்பிடத்தக்கது. இலக்கிய கர்த்தாக்களின் பாராட்டைப் பெற்ற நூல் இது.

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இதை  எளிய தமிழில் கவிதை நடையில் தமிழில் மிக்க புலமை இல்லாதாரும் படித்து உய்த்துணரும் வண்ணம் வழங்கியுள்ளார் குமார். பட்டிமன்றப் புகழ் த. இராஜாராம் தனது முன்னுரையில்  இளங்கோவடிகள் இவர் தம்  இதயம் புகுந்து எழுதினாரோ என வியந்துள்ளார்.

நாளை காரைக்குடியில் நடைபெறும் கம்பர் விழா கம்பன் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழா என்பதால் பவழவிழாவாக ஒரு வாரம் கொண்டாடப் படுகிறது.  இதில் இந்நூலைப்  புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அறிவுநம்பி வெளியிடுகிறார்.

விழாவுக்கு திரு தமிழருவி மணியன் தலைமை வகிக்கிறார். கம்பன் கழக் செயலாளர் கம்பனடிசூடி வரவேற்புரையாற்றுகிறார்.

விழா மிகச் சிறப்பாக நடைபெறவும், செம்மொழிச் சிலம்பின் ஓசை திக்கெட்டும் ஒலிக்கவும் வாழ்த்துக்கள். 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)