செவ்வாய், 19 மார்ச், 2013

ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செய்தியும்.

“ங்..கா..”

குழந்தையின் முதல் மழலைச் சொல்.

ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும்,  அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது.
சம்பந்தி வீட்டாருக்கிடையே இருக்கும் மனக் கசப்புகள் கூட அந்த மழலைச் சொல்லில் மறைந்து போகிறதென்கிறார் தலைப்புக் கவிதையில் கவிஞர். உண்மைதான். அதுவும் எங்கள் ஊர்ப் பக்கத்தில் குழந்தை ‘ங்கா’ சொல்ல ஆரம்பித்ததும் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா, சித்தப்பா, அக்கா, அண்ணா என ஆளாளுக்கு மாற்றி மாற்றி அதைச் சூழ்ந்து கொண்டு “இங்குங்கு பேசணுமா..? ஆக்காக்கு பேசணுமா..?’ எனக் கொஞ்சியபடியே இருப்பார்கள். அந்த அழகான முதல் மழலைச் சொல்லையே தொகுப்புக்குப் பெயராக்கிய இரசனையிலும் பாராட்டைப் பெறுகிறார் கவிஞர்.

ஆராதனா என்ற குழந்தைக் கவிதையும் தேனம்மை லெஷ்மணனின் கவிதைக் குழந்தைகளும்” என்ற அறிமுகத்துடன் ஆரம்பமாகிற தொகுப்பில் 59 குறுங்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அத்தனையும் தேன். ஒவ்வொரு கவிதையுடனும் குழந்தை ஆராதனாவின் அழகான வண்ண ஒளிப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆணோ பெண்ணோ ஒவ்வொரு குழந்தையும் கடவுள் தருகிற பரிசு. படித்தவரோ பாமரரோ இன்னும் பலபேரிடத்தில் பிறப்பது ஆண் மகவாகவே இருக்க வேண்டுமென்கிற விருப்பம் இருந்து வருவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண் மகவைக் கொண்டாடும் விதமாக இடம் பெற்றிருக்கும் விதம் விதமான படங்களும் அழகழகான கவிதைகளும் மனதுக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளன.

தொடர்ந்து விமர்சனத்தைப் படிக்க ராமலெக்ஷ்மியின் முத்துச்சரம் இங்கே..:)

மிக்க நன்றி ராமலெக்ஷ்மி.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.  சிரத்தை எடுத்து அன்பும் அக்கறையும் கொண்டு எழுதியுள்ளமைக்காக நன்றிகள். வாழ்க வளமுடன் நலமுடன்.

“ வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!”

////ங்கா
பக்கங்கள்: 60; விலை: ரூ. 50
புத்தகமாக்கம்: திரு. தாமோதர் சந்துரு
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

தேனம்மையின் ‘சாதனை அரசிகள்’ நூல் குறித்து சென்ற வருட மகளிர் தினத்தில் நான் எழுதிய விமர்சனம் இங்கே.  இலங்கையில் செயல்படும் தடாகம் கலை இலக்கிய வட்டம் இவ்விரண்டு நூல்களுக்காகவும், மேடைப்பேச்சு, எழுத்து என தேனம்மையின் பல்வேறு செயல்பாடுகளுக்காகவும் லங்காதீபம் (கவியருவி) விருதை சமீபத்தில் இவருக்கு அறிவித்திருக்கிறது. மகளிர் தின மாதத்தில் தேனம்மை லெஷ்மணன் மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துவோம்! வாழ்த்துகள் தேனம்மை:)!////

***

நன்றி அழகான ஆல்பம் போல புத்தகமாக்கம் செய்த தாமோதர் சந்துரு அண்ணனுக்கும் அருமையாய் வடிவமைப்பு செய்த நண்பர் செல்வகுமாருக்கும். 

அதீதத்திலும் இது வெளியாகி உள்ளது. மார்ச் 15 - 31, 2013 அதீதத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.  நன்றி அதீதம். :)


7 கருத்துகள்:

  1. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் தேனக்கா.இன்னும் பல புத்தக வேளியீட்டிற்க்காக காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  2. மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ”ங்....கா” என்ற தலைப்புத்தேர்வு வெகு அருமை. ;))))
    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆசியா.. உங்கள் வாக்கு பலிக்கவேண்டும் என்ற பேராவல் இருக்கிறது எனக்கும். பிரார்த்திக்கிறேன். :)

    நன்றி கோபால் சார்

    நன்றி ராமலெக்ஷ்மி. :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் தேனம்மை.
    மேலும், மேலும் உங்கள் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)