திங்கள், 25 மார்ச், 2013

சூரிய வணக்கத்தில் 2013 பட்ஜெட் பற்றி நாகப்பன் வள்ளியப்பன்.

இப்ப எல்லாரும் பட்ஜெட்டைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்போம். இந்த பட்ஜெட்டால யாருக்கெல்லாம் நன்மை, பணவீக்கம், பற்றாக்குறை,பெட்ரோல், சர் சார்ஜஸ், தொழிற்துறை, பங்குச் சந்தை, ப்ராவிடண்ட் ஃப்ண்ட், ஸ்மார்ட் ஃபோன், வெளிநாட்டு முதலீடு, இந்தியப் பணப் புழக்கம் இது பத்தி எல்லாம் எல்லாரும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையாகவும் தெளிவாகவும் அழகாகவும் ( அழகான தமிழிலும் ..! ) சொல்லி இருக்கிறார்.. திரு. நாகப்பன் வள்ளியப்பன்.


ஒரு நாட்டோட வளர்ச்சி அதன் ஹெல்த், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியால கணிக்கப்படுது. பட்ஜெட்டுக்கு முன்னும் பின்னுமான விலை ஏற்றம். ப்ராவிடண்ட் ஃபண்ட்ஸ், மக்களின் சேமிப்பு, பங்குச் சந்தையில் அவர்களின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

சூரிய வணக்கத்தில் இது எனக்கு ஒரு சூரிய நமஸ்காரமாக அமைந்தது. மிக உபயோகமான தகவல்கள். வாழ்த்துக்கள் மாமாவுக்கு. பாராட்டுக்கள் சன் டிவிக்கு இப்படி ஒரு நல்ல பகிர்வைக் கொடுத்ததற்கு.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)