புதன், 17 அக்டோபர், 2012

பன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.

வண்ணத்துப் பூச்சியின் மெல்லிய அழகோடு பச்சைக் கிளியின் மொழியோடு ஒரு அழகிய பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அவர்தான் அர்ச்சனா அச்சுதன். தந்தை பெயர் அச்சுதன் . ரோட்டேரியன். தாய் மதுமதி அச்சுதன். தன் புத்திசாலித்தனமன பேச்சுக்களால் அடுத்தவர்களை தன்னுடைய இரண்டு வயதிலேயே மயங்கச் செய்தவர். எந்தக் கேள்விக்கும் பட் பட் என்று பதில் சொல்லும் இந்தப் பைங்கிளிக்கு ஒரு சின்ன குறைபாடு இருப்பதை இவரின் பெற்றோர் கண்டுபிடித்தார்கள். அது செரிப்ரல் பால்ஸி எனப்படும் ஒரு மூளைச் செயல் குறைபாடு நோய்.


சென்னையில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சிறப்புப் பள்ளியில் இவரை சேர்த்தார்கள், இவரின் கால்களில் இந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவ்வளவாக தெரியவில்லை. பொதுவாக செரிப்ரல் பால்சி, ஒரு பக்க கை கால் அல்லது கால் பாகங்களை பாதித்து அவர்கள் நடையில் ஒரு வித்யாசமான தோற்றத்தை உண்டு செய்யும். ஸ்பாஸ்டிக் பள்ளியில் சேர்க்கப்பட்டதும் அந்தப் பள்ளியின் இயக்குநர் திருமதி பூரணம் நடராஜன் இவர் எல்லாரும் படிக்கும் பள்ளியிலேயே படிக்கலாம் என்று அறிவுறுத்தினார். ஏனெனில் இவரை தொடர்ந்து கவனித்து இவருக்கு அதை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்தார். முதன் முறையாக செரிப்ரல் பால்சியாப் பாதிக்கப்பட்ட இவர் எல்லாரும் பயிலும் ரெகுலர் பள்ளிக்கு சென்ற முதல் மாணவியாவார்.

மைலாப்பூர் வித்யா மந்திரில் 2011 இல் மெரிட் ஸ்காலர்ஷிப்பில் பள்ளிப் படிப்பும், எம் ஓ பி வைஷ்ணவாவில் பி ஏ சோஷியாலஜியும் பயின்றார். 2004 இல் முடித்ததும் MSSW -- MADRAS SCHOOL OF SOCIAL WORK இல் MASTERS IN COUNCELLING PSYCHOLOGY யும் படித்தார். ஒரு கூட்டுப் புழுவிலிருந்து வண்ணத்துப் பூச்சியாய் தன்னை உருவாக்கிக் கொண்ட இவர் 2006 இல் படிப்பு முடித்ததும் அண்ணா நகரில் உள்ள ஆஷா என்ற கவுன்சிலிங்க் செண்டரில் டாக்டர் பாலகிருஷ்ணனின் தலைமையின் கீழ் பணிபுரிந்தார்.

பின் இவர் பயின்ற MSSW வே இவரை பணிபுரிய அழைத்தது. அதன் பின் YRG CARE இல் டாக்டர் சுனிதி சாலமனிடம் ரிசர்ச் கவுன்சிலராக பணிபுரிந்தார். இவை எல்லாவற்றிலும் பெற்ற பயிற்சியுடன் இப்போது தனது சொந்த ஆலோசனை மையமான “சம்பூர்ணை” நிறுவினார். இதில் எல்லாவிதமான கவுன்சிலிங்க. ஆலோசனை., பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்குமான சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினிங் ஒர்க்‌ஷாப்ஸ் நடத்துகிறது.

சம்பூர்ண் என்றால் முழுமை என்று அர்த்தம். எல்லார் வாழ்விலும் முழுமையடைய வழிகாட்டுவதால் இந்தப் பெயரை சூட்டியுள்ளார் இவர். SAMPURN AIM S TO STAND BY IT'S BY-LINE ." MAKING LIVES COMPLETE" !!!.

SAMPURN அமைப்பின் மூலம் அர்ச்சனா பல்வேறு ரோட்டரி போன்ற கிளப்புகளில் சாஃப்ட் ஸ்கில்ஸ் பற்றி பல சொற்பொழிவுகள் நடத்தி இருக்கிறார். இவருடைய பொழுது போக்கு இசை. வாய்ப்பாட்டில் வல்லவர். புத்தகம் படித்தல், கவிதைகள் எழுதுதல், க்விஸ் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என பல துறைகளிலும் சிறப்பாக செய்கிறார்.

நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியின் கோடீஸ்வரி, 20-20 ஆகியவற்றில் பங்கு பெற்றிருக்கிறார். VIBA வினால் நடத்தப்பட்ட MOM AND ME நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு. பல தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கும் இவரின் சமீபத்திய நிகழ்ச்சி ஜெயா டிவியின்”ச ரி க ம ஃபாமிலி. ”

ரோட்டரி இண்டர்நேஷல் டிஸ்ட்ரிக்ட். 3230 மூலம் இவருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அபிராமபுரத்தில் இருக்கும் இவரின் சம்பூர்ண் அமைப்பின் மூலம் ( MAKING LIVES COMPLETE) மனநல ஆலோசகராகவும், தன்னம்பிக்கை பயிற்சியாளராகவும், இருக்கிறார். சம்பூர்ண் படிப்பு, தொழில், திருமண வாழ்க்கை, குழந்தைகளின் பழக்க வழக்க மாற்றம், மன அழுத்தம் குறைய பயிற்சி, கோபம் குறைய பயிற்சி, வேலை அழுத்தம் குறைய கவுன்சிலிங்க் ஆகியவற்றை வழங்குகிறது. பள்ளி , கல்லூரி, கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை ஏற்கும் பண்பு, மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் பயிற்சி ஆகியன அளிக்கிறது. குறிக்கோளை எய்துதல், க்ரியேட்டிவிட்டி, பாசிட்டிவ் மனநிலை, மனித உறவுகளை பேணுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறது.

அர்ச்சனா இன்னும் ESK என்னும் லேர்னிங் செண்டரும் நடத்துகிறார். இதில் டிஸ்லெக்சியா போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளுக்கு சிறப்பாகப் படிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING ( NIOS) க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலப் பயிற்சியும், கையெழுத்துப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ESKLC 15வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

புதிதாக அர்ச்சனா ஆரம்பித்திருப்பது சகாயதா.. ”THINK GIFTS., THINK US" என்பதுதான் அது. பரிசுப் பொருட்கள் , ஜணல் பைகள், பேப்பர் பைகள், துணிப்பைகள், மெழுகுவர்த்தி தயாரிப்பு என இதில் பணிகளில் ஈடுபட்டிருப்போர் பல குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளே.. இவர்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு இவர்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

ஒரு சின்ன குறைபாடுதான். உடல் குறையெல்லாம் ஒன்றுமில்லை . மனத் திண்மை போதும். குடும்பத்தாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் பல கலைகளுடன் பிரமிக்க வைக்கிறார் அர்ச்சனா..பன்முகத் திறமை கொண்ட இந்தப் பட்டாம் பூச்சி அனைவரின் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க இவரின் பணி.

டிஸ்கி:- போராடி  ஜெயித்த பெண் ( 19) அர்ச்சனா அச்சுதன் பற்றிய இந்தக் கட்டுரை ஃபிப்ரவரி 2012 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது


4 கருத்துகள்:

  1. போற்றப்பட வேண்டியவர் அர்ச்சனா அச்சுதன் அவர்கள்...

    அவரைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இந்த சாதனை அரசிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். படித்தாலே மனதுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் தோன்ற வைக்கும் பகிர்வுக்கா. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இத்தனை சாதனைகள் அநாசமாகப் புரிந்திருக்கிறார். மனம் நெகிழ்கிறது. இவரது பெற்றோருக்கும்,இவரால் வழிகாட்டப்படும் பிள்ளைகளுக்கும் ,பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் தேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபால்

    நன்றி கணேஷ்

    நன்றி வல்லி சிம்ஹன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)