கலா மாஸ்டர்தான் ஜட்ஜுன்னு ரொம்ப நாளா நெனைச்சுகிட்டு இருந்தேன். நடுவுல சிம்புதான் ஜட்ஜோன்னு கூட தோணுச்சு. இப்ப புதுசா ரெண்டு ஜட்ஜுங்க டிவியில வர்றாங்க. வாதியோட வக்கீல், ப்ரதிவாதியோட வக்கீல், நீதிபதி எல்லாமே இவங்கதான். தற்காலிக தமிழகத்துல இருக்குற விவாகரத்து, திருமணம் தாண்டிய பிரச்சனைகளுக்கெல்லாம் இவங்கதான் தீர்ப்பு சொல்றாங்க.
ரொம்ப கீழ்மட்டத்துல இருக்க மக்களோட வாழ்க்கையை சீரியல் லெவலுக்கு காமிச்சு சேனல்களோட டி ஆர் பி ரேட்டிங்கை ஒசத்துறதுதான் இவங்க பணி. சீரியலைப் பார்த்து மக்கள் கெட்டுப்போறாங்களா, மக்களைப் பார்த்து சீரியல் எடுக்குறாங்களாங்குறது கோழிக்குள்ளேருந்து முட்டையா, முட்டையிலேருந்து கோழியா அப்பிடிங்கிற மாதிரியான விஷயம்.
பல திருமணங்களில் திருமணம் தாண்டிய உறவுகளை சம்பந்தப்பட்டவங்களே டிவியில் வெளியிட்டு கூட வாழ்ந்தவங்களுக்கு வாழ்நாள் பூராவுமான அவமானத்தை அசிங்கத்தைத் தேடித் தரத்தான் துடிக்கிறாங்களே தவிர இந்த நிகழ்ச்சி ரெண்டு பக்கமும் தவறு இருப்பதால்தான் குற்றங்கள் நிகழ்கின்றன என்பதை சரிவரப் பதிவு செய்யுதான்னு புரியலை.
வாழ்க்கைத்துணையின் மேல் அக்கறையற்று, கவனிப்பாரற்று இருப்பதுதான் அதிகமான குற்றங்களுக்குக் காரணம். அதிகமா தப்பு யார் செய்தா.. பெண் அல்லது பெண்டாட்டிக்கான பொது நீதி என்ன , பெண் என்ன செய்ய வேண்டும் என்பதாகவே இந்தப் பொதுத் தீர்ப்புக்கள் இருக்கு.
ஒரு முறை மட்டும் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காண்பிச்சாங்க. இன்னொரு முறை நோயைக் குணப்படுத்துறதா சொல்லி பணம் வாங்கும் ஒரு சாமியார் மாதிரியான ஆளைக் கூப்பிட்டு அந்தப் பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்தாங்க..
டி ஆர் பி ரேட்டிங்குக்காக ஜெயலெட்சுமி, ஜீவஜோதி, ரஞ்சிதா போன்றவர்களின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை சந்தியில் ஏற்றி தினமும் செய்தி சேனல்கள் கல்லா கட்டியது போல இப்ப பொது மக்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களின் வாழ்வியல் துயரங்களை டிவியில் வெளிச்சமிட்டுக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் அவர்களின் அவலங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன சேனல்கள்.
குட்டிபத்மினி வர்ற சானல்ல அவர் ஏதோ நம்மள மாதிரியே இந்தக் கதைகளைக் கேட்டுப் பயந்தமாதிரியே உக்கார்ந்து இருப்பார். அவர் பேசியே பார்த்ததில்லை. அல்லது அதுவரை நமக்குப் பொறுமை இருப்பதில்லை. ஆனா நிர்மலா பெரியசாமி வரும் சானலில் அவர் எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேறாக அலசுகிறார் என்றாலும் ( கதையல்ல நிஜம் லெட்சுமி பாணியில்.. ””கொட்டுங்க.. எல்லாத்தையும் கொட்டுங்க.. ”” ) நிர்மலாவும்,” சொல்லுங்க.. உங்கள அவர் எப்பிடி எல்லாம் துன்புறுத்தினார்னு சொல்லுங்க”ன்னு சொல்ல அதில் பங்கேற்பவர்கள் கதறிக் கதறி அழுவதோடு மட்டுமல்ல.. ஓடிச் சென்று அவரின் கால்களில் விழுந்து “ அம்மா.. என்னைக் காப்பாத்துங்க.. இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.. “ எனக் கதறுகிறார்கள். சிலர் அங்கேயே அடித்துக் கொள்கிறார்கள். ஒரு பெண் தன் கணவனையும், மாமியாரையும் அடித்தே விட்டார்.
நிர்மலாவும் பிரதிவாதிக்குத் தேவையான அறிவுரையும் எச்சரிக்கையும் கொடுத்துவிட்டு .” தமிழ்நாடே உங்களைப் பார்த்துகிட்டு இருக்கு, இந்த நிகழ்ச்சியைப் பார்த்துகிட்டு இருக்கு. பின்னாடி என்ன நிகழ்ந்தாலும் அதுக்கு நீங்கதான் பொறுப்பு “ என்கிறார். ஒரு பொதுஜனமாக இந்தப் பிரச்சனையில் நம் பொறுப்பும் இருக்கிறதோ எனத் தோன்றும் அதே சமயம் ரோட்டில் அந்த சாயலில் யாரைப் பார்த்தாலும் அதே ஆட்களோ என எண்ணமிடத் தோன்றுகிறது.
சொல்வதெல்லாம் உண்மையென்றுதான் சொல்கிறார்கள். பத்ரிக்கைகளில் முன்பு அனுராதா ரமணன் அம்மாவாக இதை எல்லாம் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார். இன்னும் சில பத்ரிக்கைகளில் பலரின் சொந்தப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் பலரும் படிக்கும் வண்ணம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒன்று என் சொந்தக்காரரின் மகன் ஹைதராபாத்தில் நல்சாரில் ( லா யுனிவர்சிட்டி) படித்துவிட்டு ராம் ஜெத்மலானியிடம் ஜூனியரா ப்ராக்டீஸ் செய்கிறான்.. ஜட்ஜாக சிறிது வருடங்களாகலாம். தொலைக்காட்சியோ எந்த டிகிரியும் வாங்காமல் பலரை ஜட்ஜ் அம்மாக்களாக்கிக் கொண்டிருக்கிறது.. வாழ்க அதன் பணி..! ஜட்ஜ் அம்மாக்களே.. தமிழக மக்கள் வாழ்வுல ஒளியை ஏத்துங்க. பிடிக்காதவங்களை பிரிச்சு வைச்சிடுங்க. பாரபட்சம் பார்க்காம உங்க தீர்ப்புக்களை வழக்கம்போல சொல்லுங்க..!

உண்மைதான்.
பதிலளிநீக்குஇவர்கள் டிஆர்பி ரேட்டிங்கிற்காக பாவம் ஏழைகளின் வாழ்க்கைப் பிரச்சினைகள் நாலு சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை நாடு முழுவதும் ஒளிபரப்பி கேவலப் படுத்துகிறார்கள்.
நல்ல கட்டுரை.
சீரியல்களை விடக் கொடுமையான விஷயம்க்கா இது. அழகா கருத்துச் சொல்லி பூனைக்கு மணி கட்டியிருக்கீங்க. அருமை.
பதிலளிநீக்கு//எந்த டிகிரியும் வாங்காமல் பலரை ஜட்ஜ் அம்மாக்களாக்கிக் கொண்டிருக்கிறது.. //
பதிலளிநீக்குஅதானே!!
எனக்கு என்ன தோணும்னா, இதே ஜடஜம்மாக்களின் வாழ்க்கையிலோ, இவர்களின் உறவு, நட்புகளின் வாழ்விலோ உள்ள பிரச்னைகளை ஏன் இங்கு வந்து பேசித் தீர்ப்பதில்லை!! அத்தோடு, சில பிரபலங்கள் - உதாரணமா, தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு ஊடல்னு சொல்லிக்கீறாங்க - அவங்களை இங்க கூப்பிடுவாங்களா பேசித்தீத்துக்கலாம்னு?
கவுன்ஸிலிங் எப்போதுமே நாலு சுவர்களுக்குள் கொடுக்கப் படவேண்டியவை. இப்படி கொத்தி, கூறு போட்டா நாளைக்கு அதுவே பிரச்னையாகாது!!
நல்ல முயற்சி... வாழ்த்துகள்... ஊடகங்கள், பதிவர்கள் யாருமே தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்வதை நானும் வன்மையாக எதிர்க்கிறேன். எனது பதிவிலும் இதே கருத்தை சொன்னேன்.. வந்து பார்த்து உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்
பதிலளிநீக்குநல்லாக் கேட்டிருக்கீங்க தேனம்மை.
பதிலளிநீக்குபலவற்றைப் பற்றி நல்லதொரு அலசல்...
பதிலளிநீக்குபார்க்க ஆள் இருக்கிறார்கள்... சிலவற்றை தடை செய்ய வேண்டும்...
நன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி பாலகணேஷ்
நன்றி ஹுசைனம்மா
நன்றி அருண் பிரசாத்
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி தனபால்