சனி, 29 செப்டம்பர், 2012

உயிரற்றும் இருப்பது.

ஒற்றைக் கோப்பையில்
இனிப்புத் திரவம்
வசீகரித்தது.

இதமான சூட்டில்
ஆடை மேலமர்ந்ததும்
கால் வழுக்கியது.

தலைகுப்புற விழுந்ததும்
ஞாபகம் வந்தது
நீச்சல் தெரியாதது.


இறக்கைகள் துடுப்புகள் அல்ல
என உணர்வதற்குள்
குடிகாரனாய் உப்பி
மிதக்கத் துவங்கினேன்.

 ”அடச்சே.. ஈ.” .
தூக்கிப் போட்டு
விழுங்க விரும்பிய
கோப்பையைக் கழுவிக்
கவிழ்த்தாள்.,
கைபேசியை வெறித்து ஒருத்தி.

விரிந்த சிறகுகளோடு
வாஷ்பேசினில் கசிந்த
குழாய் நீரில்
சுத்தியபடி கிடந்தேன்
உயிரற்றும் இருப்பதான நான்.


 டிஸ்கி:- இந்தக் கவிதை 9,ஜூலை,2012 அதீதத்தில் வெளியானது.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)