வெள்ளி, 14 செப்டம்பர், 2012

விழுதுகள்.. ( 9 குறுங்கவிதைகள்..)

மரக்கிளைகளின் வழி
வெளிச்ச விழுதாய்த்
தொங்குகிறது சூரியன்...

 ****************************************

வெளிச்ச விழுதுகளில்
குருவிகளாய் ஊஞ்சலாடியபடி
இறங்குகின்றன இலைகள்



 ********************************************

மழையும் எப்போதாவது
நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது
மரக்கிளையைக் கட்டியபடி..

*******************************************

வெய்யில் புள்ளி வைத்து
நாள் முழுக்கக் கோலமிட்டபடி
இருக்கிறது மரம்.

********************************************

விடியலின் பூக்களாய்
பூமியின் மீது
பூத்துக் கொண்டிருக்கிறது பனி..

********************************************

சூரியன்காந்தப்பூ ஈர்க்க
அதை நோக்கி
முகம் மலர்கிறது பூமி..

******************************************

மஞ்சள் இறக்கைகளோடு
பூமியின் மீது
பறக்கிறது சூரியன்..

*******************************************

கிரண நாவுகளால்
கடலைக் குடித்து
மேகக் குடலில்
சேகரம் செய்கிறது சூரியன்.
*****************************************

மலையின் புறத்து
கதிர் ஆடை மாற்றி
இரவாடைக்குள் புகுகிறது சூரியன்.

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் 14 ஆகஸ்ட், 2011  திண்ணையில் வெளிவந்துள்ளன. 


5 கருத்துகள்:

  1. குட்டி குட்டியாய் குடைந்தெடுத்த வரிகள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  2. இது சிறப்பென்று குறிப்பிட முடியாதபடி அனைத்துக் குறுங் கவிதைகளும் மனதில் இடம் பிடிக்கின்றன. That's Thenu Akka! Superb!

    பதிலளிநீக்கு
  3. அனைத்துமே ஒன்றுக்கொன்று போட்டி போடும் கவிதைகள்....

    படித்தேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. தொங்கும் சூரியன், விடியலின் பூக்கள், கதிராடை மாற்றி இரவாடை புகும் சூரியன் ...அபாரமான கற்பனைகள் அருமை

    பதிலளிநீக்கு
  5. நன்றி சசிகலா

    நன்றி பால கணேஷ்

    நன்றி வெங்கட் நாகராஜ்

    நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)