திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தோழிகளால் வளர்ந்தவன். ( சமுதாய நண்பனில்)

இளவேனிற் காலத்தின்
வளர் சிதை மாற்றங்களில்
இலைகளாய் துளிர்க்கும்
பிறப்பின் முதல் தோழியிடம்
அழுதபடியே வந்தேன்.
அணைத்து உச்சி மோர்ந்தாள்.


பால்யத்தில் மொக்குவிட்ட
பள்ளித்தோழியிடம்
பலதும் சொல்லி சீண்டுவேன்
பதிலாய்ச் சிரித்துக்
கற்பி்த்தாள் பொறுமையை.

பூத்துவிட்ட பின்னாலே
கல்லூரி பாவையவள்
கைபிடித்து சுற்றினாள்
தட்டாமாலையாய்..
உலகமெல்லாம் என்
உள்ளங்கையில் குவித்து..

திருமண மாலையாகி
சீராக்க வந்தாள்
என் மீதியான துணைவி
சேர்ந்தலைந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலும்..

புதுசான மொக்காய்
பொக்கைவாய்சிரிப்பில்
பூங்கொத்தாய் விரிந்தாள்
எனை ஆளவந்த தேவதை..
மீண்டும் துளிரானேன்
அவளோடு வளர..

 டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளிவந்தது.
 

4 கருத்துகள்:

  1. /// புதுசான மொக்காய்
    பொக்கைவாய்சிரிப்பில்
    பூங்கொத்தாய் விரிந்தாள்
    எனை ஆளவந்த தேவதை..
    மீண்டும் துளிரானேன்
    அவளோடு வளர.. ///

    அழகான வரிகள்...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    பதிலளிநீக்கு
  2. தோழிகளால் வளர்ந்தவன், தோழமையின் அருமையோடு, பெண்மையின் பெருமை புரிந்தவன். அவனுக்குத் தோழியராய் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அருமையான கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால்

    நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)