திங்கள், 30 ஜூலை, 2012

கத்துக்குட்டி..!

கத்துக்குட்டி..!

இரண்டு நாள் முன்பு என் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வந்த விருந்தோம்பி வரும் விருந்து நோக்கியிருந்தது ஒரு காலம். அது கிட்டத்தட்ட ஒரு 3 , 4 வருஷம் இருக்கலாம். நாம பிரபல வலைப்பதிவர் ஆகிட்டபின்னாடி ரொம்ப விருந்தோம்புறது இல்லை. வந்தா சரி.. வராட்டியும் சரி.. அதுக்குன்னு வந்தா சரியா கவனிச்சுத்தான் விடுறது. (அட இது நிஜமான கவனிப்பு ஹுசைனம்மா..:))

வந்த விருந்தாளிங்க கண்ணுல அன்னிக்கு வந்திருந்த ஒரு பத்ரிக்கை தென்பட்டது. அதுல என்னோட அருமைத் தோழியின் கலை பற்றிய கட்டுரை 3 பக்கத்துக்கு வந்திருந்தது. சந்தோஷமா எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த இருவரும் படிக்கத் தொடங்கிட்டாங்க.
அதே பத்ரிக்கையின் துணைப் புத்தகத்துல என்னோட சிறு குறிப்பு ஒண்ணும் பிரசுரமாகி இருந்தது. அடுத்து இன்னொரு இலக்கியச் சிற்றிதழ்ல என்னோட கட்டுரை வந்திருந்தது. இதை இருவரும் படித்தார்கள்.

அதைப் படித்த உறவினர்களுள் ஒருவர் இது நல்லா இருக்கு. ஓஹ் இதுக்கு இதுதான் காரணமா. சரியா சொல்லி இருக்கே. என்றவுடன் நான் தூக்கி விட்டுக் கொள்ளக் காலரைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்னொருவர் கேட்டாரே ஒரு கேள்வி.. ஏன் ஒன்னப் பத்தி பெரிய புக்குல போடல.. கத்துக்குட்டிய எல்லாம் போட மாட்டாங்களான்னு..

நான் ரெண்டு புக் போட்டு இருக்கேன். பல பிரபல பத்ரிக்கைகளில் என்னோட கவிதைகள் வந்துகிட்டு இருக்குன்னு சொல்ல நினைச்சேன்.. ஆனா ஏன் சொல்லணும்னு தோணுச்சு.. ஏன்னா இருவருக்கும் இது தெரியும். பாராட்டுனவர் கணவர். கிரிட்டிசைஸ் பண்ணவங்க அவரோட மனைவி.. . கணவர் மட்டும் பதில் சொல்ல முடியாம திக் திக்னு முழிச்சார். அடுத்து நான் சிரிச்சுகிட்டே வேற டாபிக் மாத்தி பேச ஆரம்பிச்சுட்டேன்.

ஆனா ஒரு விதத்துல நான் கத்துக்குட்டிதானோன்னு கூட தோணுது.. இல்லாட்டா இதை ரெண்டு நாள் மனசுல ஊறப்போட்டு, ஆறப்போட்டும் அடங்காம ஒங்ககிட்ட சொல்ல வந்திருப்பனா.. சரி.. போகட்டும். இன்னும் சாதிக்கணும்னு எண்ணத்தைத் தூண்டுறதுக்கும் இந்த மாதிரி கிரிட்டிசிஸம் தேவையாதான் இருக்கு.

ஒரு மாதிரி அடங்கின மனநிலையில் அவர் தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார்.. நாம என்ன சாதிச்சோம்னு சோதிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன்..எனவே  மக்களே என்ன சொல்ல வர்றேன்னா யாராவது உங்கள இதுபோல ஏதாவது சொல்லிகிட்டு இருப்பாங்க.. அதை எல்லாம் ஆக்கபூர்வமா உங்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்குங்க.. சோர்ந்து போயி அமர்ந்துடாதீங்க..

இன்னும் இருக்கு சாதிக்க.. தொடர் முயற்சிகள்தான் நம்மை உயிர்ப்பாக்கும். தடை ஓட்டத்தில் வெற்றி என்று ஏதுமில்லை. வாழும்வரை தொடர் ஓட்டம்தான். கத்துக் குட்டிகளுக்கும் காலம் கத்துக் கொடுத்து விருதுகளும் வழங்கலாம். ( ஒண்ணுமில்ல ஒலிம்பிக்ஸ் ஞாபகம் வேற..:) ) எனவே வலைப்பூவில் எழுதுவதையோ, தொடர் முயற்சிகளையோ விட்டுவிடாதீர்கள்.. இது நாம் அவர்களுக்கு சொல்லும் பதில் அல்ல. நமக்கே சொல்லிக் கொள்ளும் தன்னம்பிக்கைச் சொற்கள்.

9 கருத்துகள்:

  1. அருமையான கருத்துக்களை தங்களின் அனுபவம் மூலம் சொல்லி உள்ளீர்கள்...
    பகிர்வுக்கு நன்றி.


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    பதிலளிநீக்கு
  2. //யாராவது உங்கள இதுபோல ஏதாவது சொல்லிகிட்டு இருப்பாங்க// நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்குக் கிடைத்த சொற்களை விட அவர் உங்களுக்குச் சொன்னது மிக மிகக் குறைவு. பல இடங்களில் இதைக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துபவர்களை விட தூற்றுபவர்களே அதிகம்.

    பதிலளிநீக்கு
  4. //எனவே மக்களே என்ன சொல்ல வர்றேன்னா யாராவது உங்கள இதுபோல ஏதாவது சொல்லிகிட்டு இருப்பாங்க.. அதை எல்லாம் ஆக்கபூர்வமா உங்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்குங்க.. சோர்ந்து போயி அமர்ந்துடாதீங்க..//

    நல்லதொரு அறிவுரை. ;)

    ........ க்குத் தெரியுமா கற்பூர வாசனைன்னு தான் பலரும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். என்ன செய்வது?

    ======

    உங்களுக்கு விருது ஒன்று காத்துள்ளது. தயவுசெய்து பகிர்ந்து கொள்ள வாருங்கள்.

    http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

    பதிலளிநீக்கு
  5. //அட இது நிஜமான கவனிப்பு ஹுசைனம்மா.//

    அவ்வ்வ்வ்... அக்கா!! :-)))))

    //நமக்கே சொல்லிக் கொள்ளும் தன்னம்பிக்கைச் சொற்கள்.//

    இங்கே நிக்கிறீங்க நீங்க!! :-)))

    பதிலளிநீக்கு
  6. ஹா..ஹா.ஹா.. தேனக்காவுக்கே இந்த விமர்சனமா. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

    //நமக்கே சொல்லிக் கொள்ளும் தன்னம்பிக்கைச்
    சொற்கள்//

    அப்படி எடுத்துக்கிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி கவி அழகன்

    நன்றி தனபால்

    நன்றி அமரபாரதி சார்

    நன்றி குமார்

    நன்றி கோபால் சார்

    நன்றி ஹுசைனம்மா..:))

    நன்றி சாரல்..:))

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)