வியாழன், 26 ஜூலை, 2012

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர:-

உயிரோசையில் வெளியான இக்கட்டுரை (எனது பதினாலாவது நூலான) “பெண்ணும் மரபும்” என்ற தொகுப்பில் அமேஸானில் ஈ புக்காக வெளியாகி உள்ளது. அதனால் அதை இங்கிருந்து எடுத்துள்ளேன். 

நன்றி உயிரோசை. 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 அக்டோபர் இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

14 கருத்துகள்:

  1. நல்ல அற்புதமான உபயோகமுள்ள கட்டுரை .நன்றி மேடம்
    ராமகிருஷ்ணன் வானவில்

    பதிலளிநீக்கு
  2. புலம் பெயர்ந்த பெண்களின் சுமைகளையும் பிரச்சனைகளையும் அருமையாக பதிவு செய்ததோடு மன அழுத்தங்களிலிருந்து மீளவும் அழகாய் ஆலோசனை தந்துள்ளீர்கள்.பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழும் மற்ற பெண்களுக்கும் உதவியாய் இருக்கும்.நன்றி

    பதிலளிநீக்கு
  3. பொறுப்புணர்வுடனும்..உண்மையான அக்கறையுடனும்..புலம்பெயர் ஈழத்தமிழருக்காய் கரிசனை கொள்கிற உங்கள் எழுத்துக்களுக்கும்..ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.பாராட்டுக்கள்.

    எங்கள் தாய் நாட்டில்.. ஈழத்தில் போரின் கோரவடுவால் அதிகம் பாதிக்கப்பட்டு அந்த பெருந்துயரை தொடர்ந்து சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் பெண்களின் வலி சொல்லில் எழுத முடியாதது. கணவனை போருக்கும்..சிறைச்சாலைக்கும்..எங்கேயென தெரியாமலும்..இன்னும் உயிருடன் இருக்கிறாரா..இல்லையா என தெரியாமலும்...இளம் தாய்மார்கள் சமூகத்தில் சுமக்கின்ற கண்ணீ்ர் சிலுவையின் பாரம் கனதியிலும் கனதியானது.
    அடுத்த காலடியை எப்படி வைப்பது என தெரியாமல் தடுமாறும் அறுபதாயிரத்துக்கும்(60000) மேற்பட்ட இளம் விதவைகளின் நிலை வலிமிகுந்தது. தொடர்ந்தும் இராணுவப் பேய்கள் குறிவைத்துக் கொண்டிருக்கும் திகில் நிறைந்த பகல்களுக்குள் பதுங்கி இரவுகளில் விழித்தபடி கூடாரங்களுக்குள் பிரார்த்தனை செய்த கொண்டிருக்கும் இளம் சகோதரிகளின் கொடுமை மிகு வாழ்வு உலகமறியாதது. அப்பா எங்கே எனகேட்கும் எந்த விபரமுமறியாத குழந்தைகளின் வினாக்களுக்கு பதில் சொல்லமுடியாமல் கண்ணீரில் கரையும் எங்கள் சகோதரிகளுக்கு நம்பிக்கையும்..அன்பும்...உதவிகளும் வேண்டும்.அவர்களை தேடிப்போய் அந்த உதவிகளை செய்ய எல்லோரும் முன்வர வேண்டும். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ”நாங்கள் இருக்கிறோம்..நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கையோடு காய்களை நகர்த்துங்கள்” என்று அறிவுமதி எழுதி போராட்டத்தக்கு உற்சாகம் கொடுத்த அந்த வரியில் கோர்த்த பாடலை ஈழத்தின் தெருக்களில் போராட்டத்தின் நடுவே நின்று நானும் கேட்டிருக்கின்றேன். ஆனால்..அந்த வரிகள் இன்று நமக்கு அதைவிட அதிகமாய் தேவைப்படுகிறது சகோதரி. ஆம்..தமிழக மக்களின் அன்பும்..ஆதரவும்..எங்கள் ஈழமக்களுக்கு நிறையவே தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கதையை சுமந்தபடி அங்கு காத்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் அந்த கதைகளை..அவர்களின் மனசின் பாரங்களை இறக்கி வைக்க உதவியாய் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வலியை அவர்கள் சொல்ல கேட்கின்ற செவிகளேனும் வேண்டும்.
    கீழ்வரும் இணைப்பு ஆயிரம் சகோதரிகளின் கதைக்கான ஒரு துளி.படித்துப் பாருங்கள்.
    http://mullaimann.blogspot.in/2012_03_01_archive.html

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. தேனக்கா வணக்கம்.நீங்கள் நிறையவே எழுதியதுக்கு நான் ஒற்றைவரியில் சொல்றதெண்டால் அழகான நிறைவான புரிதல் உங்களிடம்.அவ்வளவே சொல்லுவன்.

    எழுத்து என்கிற ஒன்றில்லையென்றால் என்றோ தொலைந்திருப்போம் புலம்பெயர் தேசத்திலும்.இப்போதுகூட முகப்புத்தகத்தில் மனதில் பட்டதைக் கிறுக்கினேன்.ஒரு கருத்து வந்தது.பழையதை மற.இப்போ கிடைக்கும் சந்தோஷத்தோடு வாழப்பாரெண்டு....எப்படி எப்படி?எம் மக்கள் எம்மினம்....தொலைந்த சந்தோஷங்கள்,இழப்புகள்...இன்னும் கிடைக்காத நிம்மதி.காயமில்லமல் வதைபடும் என் மக்கள்.எதை மறந்து எப்படி வாழ....நல்ல புரிதல் தேனக்கா உங்களுக்கு.நன்றி !

    பதிலளிநீக்கு
  6. A very good motivation article. Also tried to keep them warm in their endeavors.

    பதிலளிநீக்கு
  7. A very good motivational article. Also tried to keep them warm in their endeavours.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராம்

    நன்றி உமா

    நன்றி தீபிகா படித்தேன்..:(

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி தனபால்

    நன்றி ஹேமா

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)