திங்கள், 28 மே, 2012

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை. :- **************************************************

சாஸ்திரி பவனில் பெண்கள் சங்கத்தலைவியாய் இருக்கும் மணிமேகலை தங்கள் தலித் இனப்பெண்கள் வெளிவந்து தங்கள் சாதி பெயரை சொல்லவே பயப்பட்ட நிலையில் தலித் பெண்களுக்கென்றும் ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது பெண்கள் ஊக்கம் பெற்று தங்கள் நிலையை வெளியே சொல்வதாகவும் , அதனால் அவர்களுக்கெதிரான தவறுகள் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.


சமீபத்தில் IWID -- INITIATIVES : WOMEN IN DEVELOPEMENT என்ற NGO நடத்திய மாநாட்டில் பெண்கள் பணியிட சூழல் பற்றிய அனுபவ பகிர்வு என்ற தலைப்பில் பேசி இருக்கிறார். அங்கு பலவிதமான பெண்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார். பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கியம் கிராமப்புறப் பகுதிகளில் சரிவர இல்லை என்றும் இனி அடுத்து தன்னுடைய கவனம் அதில் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் சொன்னார்.

இவர் சென்ற சில மாதங்களாக பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கும் ப்ராஜெக்டை ஒவ்வொரு ஸ்கூலிலும் சென்று தன் தாயார் நடத்தும் அட்சயா பவுண்டேஷம் மூலம் விழிப்புணர்வுக்கு கொண்டு வந்ததாக சொன்னார். எல்லாரும் பறவைகளுக்கு உணவளிப்போம் ஆனால் தண்ணீர் வைக்க மாட்டோம். அதை அங்குள்ள பள்ளிப் பிள்ளைகள் உணர்ந்து இனி தாங்களும் செய்வோம் என சொன்னதாக பெருமையுடன் சொன்னார்.

இவரது தாயார் நடத்தும் அட்சயா பவுண்டேஷன் மூலம் எல்லா கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கும் சென்று அங்கு சிறப்பாகப் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக விருதுகளும். புத்தகங்களும் பரிசளிக்கிறார். மனித நேயத்தோடு செயல்படும் மணிமேகலை தான் ஒரு தலித் இனப் பெண் என சொல்லிக் கொள்வதில் பெருமையுறுவதாகவும். பெண்கள் மற்றும் தலித்துக்கள் உரிமைக்குப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்காரின் உருவச் சிலையை சாஸ்திரி பவனில் வைக்க அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். சீக்கிரமே இவரது எண்ணங்கள் நிறைவேறட்டும். இவரது சேவைகள் இன்னும் பலருக்குக் கிடைக்கட்டும். !!!.

டிஸ்கி:- இந்த அறிமுகம் 15 - 31 ஜனவரி 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது.


7 கருத்துகள்:

  1. சகோ மணிமேகலைக்கு அவர்களின் எண்ணங்களும், முயற்சிகளும் ஈடேற என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மற்றற்ற மகிச்சியடைகிறேன்.!

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி தேனக்கா :-)

    பதிலளிநீக்கு
  3. சாதனைப் பெண்மணி மணிமேகலை அவர்களின் தொண்டும் திறனும் மேலோங்க வாழ்த்துக்கள். அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  4. தலித் என்று சொல்வதில் ஒன்றும் பெருமையான விஷயம் அல்ல. தலித் என்று பார்க்காமல் சக மனிதனாக அனைவரையும் மதிக்கும் காலம் வந்ததால்தான் சமூகம் முன்னேற்றமடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பகிர்வு.
    அவரது பணி தொடர வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. சீக்கிரமே இவரது எண்ணங்கள் நிறைவேறட்டும். இவரது சேவைகள் இன்னும் பலருக்குக் கிடைக்கட்டும். !!!.

    வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி சாரல்

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி வேல் முருகன்

    நன்றி குமார்

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)