புதன், 9 மே, 2012

சுமந்தவள்..

சுமந்தவள்:-
************

அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.

எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.


வழக்கம்போல அணைத்தாள்.
நெற்றியில் முத்தமிட்டாள்.
முதுகுச் சுமை விட
கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.

கடக்க நினைக்கிறேன்.
கண்ணீர் பெருகுகிறது.
உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
வயிற்றில் சுமந்தவளின் அன்பை..

டிஸ்கி:- இந்தக் கவிதை  ஆகஸ்ட் 17,  2011 உயிரோசையில் வெளிவந்தது.


8 கருத்துகள்:

  1. அன்புச் சுமை
    அருமை கவிதாயினி

    பதிலளிநீக்கு
  2. //உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
    வயிற்றில் சுமந்தவளின் அன்பை..//

    அருமை.

    பதிலளிநீக்கு
  3. வலைபின்னிக்
    கிடக்கிறது வலியப்
    பிரியவேண்டிய வேலை.

    தன்னைச் "சுமந்தவளை மனதில் சுமந்து சுமையுடன் பயணம்..

    பதிலளிநீக்கு
  4. தாய்மை சொல்லும் அழகிய கவிதை.
    அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  5. கவிதை வாசிக்கும் பொழுது மனது கனத்தாலும் இதமாக இருக்கிறது.அருமை.தேனக்கா.

    பதிலளிநீக்கு
  6. நன்றி செய்தாலி

    நன்றி கோபால் சார்

    நன்றி வலைஞன்

    நன்றி ராஜி

    நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி குமார்

    நன்றி ஆசியா

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)