சனி, 21 ஏப்ரல், 2012

மோனநிலை..

மோனநிலை..:-
*****************

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு
இன்னொருத்திக்கு கரும்புவில்
மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள்
சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி.


நான் சமையலறைக் கரண்டியுடன்
சிலசமயம் லாப்டாப்புடன்
எதுவும் சுமக்கா மோனநிலையில்
ஏன் எவருமே இல்லை.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே. 29, 2011 திண்ணையில்  வெளியானது.


 

7 கருத்துகள்:

  1. ஆஹா! சுடச் சுட பில்டர் காப்பி குடித்தது போன்ற சுவையுடன் ஒரு கவிதை. மிக அருமை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  2. கருவைச் சுமந்து ‌‌பெற்று நற்பண்புடன் வளர்த்து மனித குலத்தை தழைத்து வாழச் செய்யும் பெண்மைக்கு ஏது அக்கா எதுவும் சுமக்காத மோனநிலை? எதுவும் சுமக்காத நேரங்களிலும் எண்ணங்களைச் சுமந்துதானே தீர வேண்டியிருக்கிறது...! என்னுள் நிறைய எண்ண அலைகளை எழுப்பி விட்டது உங்கள் அற்புதமான கவிதை!

    பதிலளிநீக்கு
  3. எதையும் சுமப்பதே மோன நிலை என்று வைத்துக்கொள்வோமே!

    எல்லோருமே எதையும் சுமக்கா மோன நிலையில் இருப்பார்களேயானால், உலகத்தில் ஒரு செயலும் உருப்படியாக நடக்காது.

    அதுவும் கரண்டி பிடிக்காவிட்டால் ....
    பூவாவுக்கு என்ன செய்வது?

    நினைத்தாலே நடுங்குது.

    பதிலளிநீக்கு
  4. எதையும் சுமப்பதே மோன நிலை என்று வைத்துக்கொள்வோமே!

    எல்லோருமே எதையும் சுமக்கா மோன நிலையில் இருப்பார்களேயானால், உலகத்தில் ஒரு செயலும் உருப்படியாக நடக்காது.

    அதுவும் கரண்டி பிடிக்காவிட்டால் ....
    பூவாவுக்கு என்ன செய்வது?

    நினைத்தாலே நடுங்குது!

    பதிலளிநீக்கு
  5. ஏன் என்று எல்லாரையும் கேட்கணும் மனசாட்சி..:)

    நன்றி புவனா

    நன்றி கணேஷ்

    நன்றி கோபால் சார்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)