திங்கள், 16 ஏப்ரல், 2012

கோமாளி ராஜாக்கள்.

கோமாளி ராஜாக்கள்..
**********************
ராஜாக்களாய்க்
கற்பிக்கப்பட்டவர்கள்
ராணிகளாய்த் தெரியும்
சேடிகளின் கைப்பிடித்து.,
ரகசியக்காமத்துள்
சுற்றி வந்து..

பட்டத்து ராணீக்கள்
அடகு நகை மீட்கவோ.,
அலுவலகத்துக்கோ
அழும் பிள்ளைக்கு
பால் வாங்கவோ
சென்றிருக்கலாம்..


தன் அந்தப்புரத்து
ராணிகளைக்
கவனிக்க ஏலாமல்
யார் யாரின்
அந்தப்புரத்துள்ளோ
அத்துமீறி நுழைந்து

ஆக்கிரமிக்கும் ராஜாக்கள்.
சிரச்சேதம் செய்யப்படலாம்..
சேதமுற்றே திரிவோர்க்கு
சிரச்சேதம் பெரிதா என்ன..
ராஜாக்கள் கூஜாக்களாய்
பின் கோமாளிகளாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை  மே 29,2011 திண்ணையில் வெளியானது.

3 கருத்துகள்:

  1. உறைக்கும் உண்மையை சொன்னீர்கள்
    கவிதாயினி

    பதிலளிநீக்கு
  2. //தன் அந்தப்புரத்து
    ராணிகளைக்
    கவனிக்க ஏலாமல்
    யார் யாரின்
    அந்தப்புரத்துள்ளோ
    அத்துமீறி நுழைந்து//

    கோமாளித்தனத்தை நன்கு இந்த வரிகளிலேயே காணமுடிகிறது.

    ;)))))

    பதிலளிநீக்கு
  3. நன்றி செய்தாலி

    நன்றி கோபால் சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)