வியாழன், 8 செப்டம்பர், 2011

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்- அட்சயா ஃபவுண்டேஷன் -- அரும்பாக்கம் மிடில் ஸ்கூல்


ATCHAYAA FOUNDATION
CHENNAI

INVITES YOU TO HONOUR THE CORPORATION SCHOOL TEACHERS
ON THE OCCASION OF AMBEDKHAR BIRTH DAY
ON 8TH APRIL 2011

VENUE : CORPORATION HIGH SCHOOL
ARUMBAKKAM, CHENNAI
TIME : 9 TO 10 a.m.
FRIDAY

WELCOME ADDRESS BY M. LOURDH RANI
HEAD MISTRESS/ARUMBAKKAM
CORPOATIONN MIDDLE SCHOOL
CHENNAI
&

CHIEF ADDRESS AND HONOURING THE TEACHERS
BY SMT. THENAMMAI LAKSHMANAN
FREELANCER FOR 3 TAMIL MEGAZINES
&
VOTE OF THANKS
BY SMT. P.SUSEELA
FOUNDER ATCHAYAA FOUNDAION
CHENNAI.

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று( அதற்கு முன்பாகவே ஏப்ரல் 8 அன்று ) அட்சயா பவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியைகளை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது.




இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணாக்கருக்கு அம்பேத்கார் பற்றிக் கூறவும்., ஆசிரியைகளுக்கும் விருது அளிக்கவும் அட்சயா பவுண்டேஷன் நிறுவனர் மணிமேகலை அழைத்திருந்தார்.



அண்ணல் பற்றிக் கூற அநேகம் இருந்தாலும் ( கூடு அமைப்பின் சாலை செல்வம் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள் சேகரித்திருந்தேன்) குழந்தைகளுக்கு ஏற்றாற் போல எளிமையாக சில கருத்துக்களைக் கூறி வந்தேன்.



தலைமை ஆசிரியை லூர்து ராணி பொன்னாடை போர்த்தினார். மணிமேகலை அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக நினைவுப் பரிசு வழங்கினார். மணிமேகலையின் பேச்சும் மிகவும் அற்புதம். தளைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான மனநிலையில் அவர் தன்னாலான உதவிகளை தலித் மக்களுக்கும் மற்றும் அனைவருக்கும் செய்து வருவது மட்டுமல்ல. பள்ளி ஆசிரியைகளையும் ஊக்குவிக்கும் விதமாக தன் அம்மா பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலமும் சேவை செய்து வருகிறார்.




மகர் இனத்தில் பிறந்ததால் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்ட அண்ணல் அம்பேத்கார் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்த சட்ட மேதையானார். ஒருவரைப் பிறப்பால் உயர்வு தாழ்வு கருதக்கூடாது. விடா முயற்சியோடு நன்கு படித்து தன் கல்வியாலேயே உயர்ந்த அண்ணல் அம்பேத்கார் போல நீங்களும் நன்கு படிக்க வேண்டும். கல்வி மட்டுமே உயர்வு அளிக்கக்கூடியது. கல்வியால் மட்டுமே ஒருவர் அறியப்படவும் பெருமையுறவும் முடிந்திருக்கிறது., சாதி., மதம்., இனம் இவற்றால் எல்லாம் மனிதரைப் பேதம் பார்க்கக்கூடாது. அனைவருமே ஒன்றுதான். நீங்கள் அனைவரும் வாழ்வில் உயர்வேண்டுமென்றால் அம்பேத்கார் போல நன்கு படிக்க வேண்டும். அவர் நன்கு படித்ததாலேயே அவரை பரோடா மன்னர் வெளிநாட்டுக்கு அனுப்பி பயில வைத்தார். எனவே கல்வி மட்டுமே ஒருவரை பெருமையுறச் செய்யும். KNOWLEDGE IS WISDOM. KNOWLEDGE IS POWER. KNOWLEDGE IS EVERYTHING.



பல்வேறு இன்னல்களோடு உங்கள் அம்மா அப்பா எல்லாரும் உங்களைப் படிக்க வைக்கிறார்கள். இங்கே ஆசிரியர்களும் நன்கு பயிற்றுவிக்கிறார்கள். எந்த சந்தேகம் வந்தாலும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து நன்கு பயிலுங்கள்.


காலை உணவை கட்டாயம் சாப்பிட்டு வாருங்கள். அம்மா கொடுப்பது பிடிக்காது என சாப்பிடாமல் வரக்கூடாது. காலை உணவில்தான் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கிறது. பல மணி நேரம் வயிறு காலியாக இருப்பதால் நேரமில்லை என கூறி சாப்பிடாமல் வராமல் கட்டாயம் உணவருந்தி வரவேண்டும்.



கற்பென்றும் தீட்டென்றும் பெண்களையும் தாழ்த்தப்பட்டவரையும் ஒதுக்கி வைப்பது குறித்து அண்ணல் போராடி இருக்கிறார். அவர் பெற்றுத்தந்த உரிமைகளின் படியே பெண்கள் கல்வி கற்கவும் சுயமாய் தன் காலில் நிற்கவும் முடிந்திருக்கிறது. பெண் கல்வியை ஆதரித்தவர் அம்பேத்கார். எனவே கல்விதான் மிகச் சிறந்த செல்வம். அது எல்லாச் செல்வங்களையும் பெற்றுக் கொடுக்கும்.


நீங்களும் பெரியவர்கள் ஆனதும் அண்ணலைப் போல நாட்டிற்கு அரும்பணி ஆற்ற வேண்டும். வாழ்த்துக்கள் குழந்தைகளே..



வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பார் என சொல்லி மணி மேகலை என் கணவருக்கும் தலைமை ஆசிரியை லூர்து ராணி மூலம் பொன்னாடை போர்த்தச் செய்தார். அவரும் சில வார்த்தைகள் குழந்தைகளுக்கு அறிவுரை கூறினார்.



பின் அனைத்து டீச்சர்களுக்கும் புத்தகங்களும் விருதுகளும் வழங்கினேன்.



மிகச் சிறப்பு என்னவென்றால் குழந்தைகள் சில கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். மிகத் திறமையான குழந்தைகள். கற்பூர புத்தி என்பார்களே அது போல அறிவின் தீட்சண்யம் ஒளிவிட்டது ஒவ்வொரு குழந்தை கண்ணிலும்.



ஒரு குழந்தை பாட்டுப் பாடினாள். ஒருத்தி நடனமாடினாள்., ஒரு சிறுவன் அம்பேத்கார் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசினான். 5 சிறுவர்கள் அமர்ந்து பட்டி மன்றம் போல தொலைக்காட்சியின் நன்மை ., தீமை பற்றிப் பேசினார்கள். பார்த்து அசந்து போனேன். ரொம்ப ப்ராக்டீஸ் கூட இல்லை. மிகச் சரியாக வழிநடத்தப்பட்டு உதவிகள் கிடைத்து அவர்கள் படித்து முன்னேறினால் இந்தியா நிச்சயம் ஒளி விடும்.



அன்றைய தினத்தில் நானும் மணிமேகலையும் எங்களால் ஆன சிறிய பரிசுகளை மேடையேறிய குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தோம்.




வாழ்க மணிமேகலையின் தொண்டுள்ளம்.! வளர்க அட்சயா ஃபவுண்டேஷனின் பணி. !



13 கருத்துகள்:

  1. உங்கள் உரை மிக நன்று. நல்ல பகிர்வு தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. அண்ணல் அம்பேத்கர் சிறப்பு
    பற்றிய பதிவு சிறப்பே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. தங்களின் உரை வழக்கம்போல் அருமையாக உள்ளது.

    //CHIEF ADDRESS AND HONOURING THE TEACHERS
    BY SMT. THENAMMAI LAKSHMANAN
    FREELANCER FOR 3 TAMIL MEGAZINES//

    ஆஹா! பார்த்ததும் பரவசமடைந்'தேன்',
    மேடம்.

    //வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பார் என சொல்லி மணி மேகலை என் கணவருக்கும் தலைமை ஆசிரியை லூர்து ராணி மூலம் பொன்னாடை போர்த்தச் செய்தார்.//

    அருமை. அவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அருமையானதொரு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  4. தங்களின் உரை அருமை...

    பதிலளிநீக்கு
  5. எனவே கல்வி மட்டுமே ஒருவரை பெருமையுறச் செய்யும். KNOWLEDGE IS WISDOM. KNOWLEDGE IS POWER. KNOWLEDGE IS EVERYTHING./

    பொன்னாய் மிளிரும் வரிகள். பகிர்வுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அக்கா,

    ரொம்பப் பெரிய ஆளாகிட்டு வர்றீங்க... இப்பவே உங்க ஃப்ரெண்டு லிஸ்ட்ல இடம் பிடிச்சுக்கிறேன். சொல்லிக்கப் பெருமையா இருக்கும்ல.... எனக்கு!! :-)))))

    பதிலளிநீக்கு
  7. அருமை...சமூகப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்டது..

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராமலெக்ஷ்மி., ராஜா., ராமானுசம் ஐயா., ரத்தினவேல் ஐயா., கோபால் சார்.,ரெவெரி., ராஜி ( ஓணத் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும்), ஹுசைனம்மா, ஆர் ஆர் ஆர்.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)