திங்கள், 5 செப்டம்பர், 2011

தெரிஞ்சுக்க..

தெரிஞ்சுக்க..:-
********************
ன்னா ஹசாரே பத்தி தெரியுமா..”

”ம்.. இல்லை..”

”ராம்தேவ் பத்தி..”

”ம்ஹூம்..”

”சமச்சீர் கல்வி பத்தி என்ன நினைக்கிறே..?”


”நம்ம பசங்க காலேஜ்ல படிக்கிறாங்க..”

”ஹிலாரி க்ளிண்டனோட இந்தியா விசிட் பத்தி தெரியுமா..?”

”தெரியலைங்க..”

”சுத்த வேஸ்டுடி நீ.. வெறும் சீரியலை மட்டும் பார்க்காம டிவியில கொஞ்சம் ந்யூஸும் பார்க்கத் தெரிஞ்சுக்க..”

எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் திரும்ப மடக்கும் கணவனிடம் அவள் ”தெரியலைங்க ” என சொல்வதை வழக்கமாக்கி இருந்தாள்.



”என்னங்க.. வெளியில போறீங்களா.. கொஞ்சம் அர்ஜண்டா எண்ணெய் வேணும்.. வாங்கிட்டு வாங்க.. “

சட்டையை மாட்டியபடி கடைக்குச் சென்று திரும்பிய அவன்..

”என்னடி இது.. எண்ணெய் நூறு ரூபாய்க்குள்ளதானே இருந்துச்சு.. இப்போ 135 ரூபாயாமே. சட்டையில 120 ரூபாய்தான் இருந்துச்சு. பார்க்காம போயிட்டேன். அண்ணாச்சிகிட்ட வீட்டில வந்து வாங்கிக்க சொல்லி இருக்கேன். கொஞ்சம் அவமானமா போச்சு..”

“ஏங்க டிவியில நியூஸுக்கு கீழே மளிகை சாமான் ., காய்கறி விலை எல்லாம் கூட ஓடுமே பார்த்ததில்லையா நீங்க..?”

மடக்கிய மனைவியின் வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவன் விழித்தான்... ”ஹி..ஹி..ஹி.. . ”


டிஸ்கி:- இந்த சிறுகதை 29.8. 2011 குங்குமத்தில் வெளிவந்துள்ளது. நன்றி குங்குமம்.:)

17 கருத்துகள்:

  1. நினைச்சேன். கடைசியிலேயே இப்படித்தான் ஏதாவது மாட்டுவான் என்று. நல்ல கிடிக்கிப்பிடி பிடித்து விட்டாள் அவனை. உலகச்செய்திகள் யாவும் தெரிந்தவனுக்கு உப்பு என்ன விலை பருப்பு என்ன விலை என்று தெரியாது தான் இருக்கும். நல்லா சாப்பிடுவதோடு சரி இந்த ஆண்கள்.

    நானும் இதில் ஒருவனாகி விட்டேன் தான் இப்போதெல்லாம். பதிவு உலகத்தையே சுற்றிச்சுற்றி வருவதால் ஒரு எழவும் தெரிவதில்லை.

    குங்குமம் இட்ட தீர்க்க சுமங்கலி போன்ற நல்லதொரு பதிவுக்கு நன்றிகள்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    vgk

    பதிலளிநீக்கு
  2. தெரிஞ்சுக்க நல்ல வாகை..வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன் டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு- வாங்க ஒருமுறை எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதில். இது நிஜமாகவே பல வீடுகளில் நடக்கும் அனுபவம்தான்...!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  5. சந்தேகமே வேண்டாம்
    எல்லா ஆண்களுமே அப்படித்தான்
    (நான் உட்படத்தான் )
    ஐ.நா சபை செயலாளர்
    அமெரிக்க ஜனாதிபதியின் பெண் செயலாளர்
    இப்படி உப்பு பெறாத விஷயத்தையெல்லாம்
    தெரிந்து வைத்திருப்போம்
    உப்பு மிளகாய் விலை தெரியாது
    இப்போது பெண்களுக்கு உலக விஷயங்களும்
    தெரிந்து கொண்டு வருவதால் நாங்களும்
    இப்ப பலசரக்கு விலை பால் விலை எல்லாம்
    தெரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம்
    சம்மட்டி அடி பதிவுதான் ஆயினும்
    அவசியமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அதுக்கு என்ன பண்றது.. ஒருத்தருக்கு தெரிஞ்சது இன்னொருத்தருக்கு சொல்லி பரிமாறிகிட்டா வாழக்கை இனிச்சிராதா?!
    நல்லா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் இனிய சகோதரி
    முதற்கண் என் வலைக் கண்டு
    வந்து வாழ்த்தியதற்கு நன்றி!

    தங்களின் இன்றைய பதிவு
    தொடங்கிய விதமும் முடித்த
    முடிபும் உங்களுக்குள்ள தனித்
    தன்மையை(எழுத்தில்)ஆற்றலை
    காட்டுகிறது
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  8. எல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை...

    கியூபா பற்றி தெரியாத பெண் பற்றிய ஒரு பதிவில் என் பின்னோட்டம்...இங்கு வந்தால் அதே களம்..

    நல்லாயிருந்தது...சகோதரி...

    பதிலளிநீக்கு
  9. பொக்கே வாங்குன உங்க முகத்துல தான் எவ்ளவ் பூரிப்பு அடடா!!!!!!!!

    பதிலளிநீக்கு
  10. நடைமுறை வாழ்வின் யதார்த்த கதை நன்று வாழ்த்துக்கள்

    என் தளத்திற்கும் வருகை தந்து என் சிறுகதைகள் எப்படி என்று சொல்ல வேண்டுகிறேன்

    kudanthaiyur.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. ஹாஹாஹா நன்றி கோபால் சார்.

    நன்றி தீரன் சாமி., அமல்ராஜ்., ராஜா., ஸ்ரீராம். ரத்னவேல் ஐயா., ராஜி., ரமணி., ரிஷபன்., ராமானுஜம் ஐயா., ரெவெரி., ராமலெக்ஷ்மி., அம்பலத்தார்., சாந்தி., சிபி., சரவணன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)