திங்கள், 25 ஜூலை, 2011

கிரிஜாம்மாவுடன் சென்னை பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு...




மேமாதம் சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்றை லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நிகழ்த்த வேண்டும் என்பது கிரிஜாம்மாவின் விருப்பம். எப்போதும் தன்னைச் சுற்றிப் பெண்களாக இருக்கக்கூடியவர் அவர். பெண்களின் ப்ரச்சனைகளின் மையப்ப்புள்ளியைக் கணித்து தீர்வு சொல்பவர் அவர். அவர் அழைத்திருக்கிறார் என்றவுடன் அனைத்து பெண் பதிவர்களும் ஆர்வத்தோடு சம்மதித்தனர்.



கிட்டத்தட்ட 20 பேர் சென்னையில் இருக்கிறார்கள் . ஆனால் அன்று 12 பேரே வரமுடிந்தது. குடும்பக் கடமைகளோடு ப்லாகிலும் எழுத்துப் பணி செய்யும் இவர்கள் பணியும் பாராட்டுக்குரியது. மிகப் பெரிய எழுத்தாளர் மதுமிதா ., அதிக வயதுடைய எழுத்தாளர் ருக்மணி அம்மா., ஈழத்துப் பேச்சில் மயக்கும் வாணி ஜெயா தீபன்., சமூக சேவையில் ஈடுபடும் விஜயலெக்ஷ்மி ஜெயவேலு., கொஞ்சகாலமாக எழுதி வரும் வசுமதி., விளிம்பு நிலை மனிதர்களுக்காய் பாடுபடும் கீதா., தலித் மக்களுக்காக சேவை செய்யும் மணிமேகலை., எஃப் எம்மில் பணிபுரியும் கவிதா சொர்ணவல்லி., பல வருடங்களாய் எழுதும் ஸாதிகா., தைரிய லெக்ஷ்மி ரம்யா தேவி., அவரின் முன்னேற்றத்தில் பங்குபெறும் அவரது அக்கா ., சுய தொழில் செய்யும் அனுராதா நிகேத் மற்றும் நான் அனைவரும் கிரிஜாம்மாவை சந்திக்க சென்றோம்

மே 20 ஆம் தேதியன்று சென்னை மெரீனாவில் காந்தி சிலையருகில் சந்திப்பதாக ஏற்பாடு.
அன்று மெரீனாவே எழுத்தாளர் மெரீனாவின் நாடகம் போல கலகலத்தது. முதலில் நானும் ஜெயா தீபனும் கிரிஜாம்மா காரில் மாலை கரெக்டாக 5 மணிக்கே காந்தி சிலையருகில் ஆஜராகி விட்டோம். ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். முதலில் மதுமிதாவும்., ஸாதிகாவும். அப்போது கிரிஜாம்மா எங்களுக்கு அவருடைய புத்தகத்தை கொடுத்தார். அதைப் பார்த்த இரு் பெண்கள் அருகே வந்து நீங்க லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்தானே. நாங்க உங்களை டிவியில் பார்த்து இருக்கோம். உங்க வாசகியர் நாங்க .. என்றதும் மேடம் புன்னகையோடு ஆமோதித்து இரண்டு புத்தகங்களை அவர்களுக்கும் அன்புப் பரிசா வழங்கினார்.

ருக்கு அம்மாவும் எங்களோடு இணைந்து கொள்ள மெதுவாக நடந்து க்வாலிட்டி ஐஸ் பக்கம் போனோம். அடுத்து ரம்யாதேவி., அவரது சகோதரி காயத்ரி., கீதா., அனுராதா ஆகியோர் வந்தார்கள். அடுத்து வசுமதியும்., விஜியும்., மணிமேகலையும்., கவிதா சொர்ணவல்லியும் இணைய ஜமா களை கட்டியது.. பூச்சரங்களைக் கோர்த்தது போல அங்கே எழுத்துக்களை வலைப்பூவில் பொறிப்பவர்களின் சந்தோஷம் மத்தாப்பாய் பொறிந்தது.

கடல் மண்ணில் கால் புதைய கொஞ்சம் நடந்து வட்டமாக அமர்ந்தோம். அனைவருக்கும் கிரிஜாம்மா., ஐஸ்க்ரீம் ., சுக்கு காஃபி., என வழங்க. கடலையோடு கொஞ்ச நேரம் கடலை போட்டோம் அனைவரும். பின்கிரிஜாம்மா ஒவ்வொருவரையும் சுய அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார்.

முதலில் ஸாதிகா. குடும்பத்தலைவி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற வலைப்பதிவர். தொடர்ந்து பல வருடங்களாக பத்ரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பி பிரசுரமாகி உள்ளதாக கூறினார். இவர் நம் லேடீஸ் ஸ்பெஷலில் பலவித மேனேஜ்மெண்ட் பற்றி எழுதி உள்ளார்.

அடுத்து விஜயலெக்ஷ்மி ஜெயவேல். இவர் போர்ட் ட்ரஸ்டில் ஏஜிஎஸ் ஆடிட்டிங்கில் பணிபுரிகிறார். இவர் நிறைய ட்ரஸ்ட்டுகள் மூலம் சமூகப் பணி செய்கிறார். ஃபேஸ் புக்கில் இவர் எழுதும் நோட்ஸ்கள் அர்த்தமுள்ள பகிர்வுகள். .

அடுத்து பாட்டி சொல்லும் கதைகள் என்ற ப்லாக்குக்குச் சொந்தக்காரர் ருக்மணி ஷேசஷாயி அவர்கள் . 73 வயதிலும் இன்னும் குழந்தைகளுக்குச் சொல்ல அநேக ஒழுக்கம் பற்றியகதைகளும் ., ஆன்மீகக் கதைகளும் கைவசம் வைத்திருப்பவர். கதை அருவி.. ! நம் லேடீஸ் ஸ்பெஷலில் திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் 8 கதைகள் எழுதி இருக்கிறார். இவர் 27 புத்தகங்கங்கள் வெளியிட்டு இருக்கிறார். இன்னும் 3 பதிப்பில் இருக்கின்றன.

வசுமதியின் கருத்தோட்டங்கள் என்ற வலைப்பதிவர் வசுமதி குழந்தைகள் சைக்காலஜி பற்றி அருமையாக எழுதுகிறார். இவர் ஒரு ஹெச் ஆர் மேனேஜர் என்பதோடு குச்சுப்பிடியும் கற்றுக் கொள்கிறார்.

அடுத்து மதுமிதா ராஜா. இவர் பத்து புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார் . மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். சுய அனுமானத்தோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மொழிபெயர்ப்பாளர் என்று முத்திரை குத்தப்படக் கூடாது என அடுத்த கவிதைகள் தொகுதியும்., நேர்காணல்களும்., தொகுப்புகளும் எழுதியதாகக் கூறினார்.

ஈழவாணி ஜெயா தீபன் மிக அருமையான மொழிக்கு சொந்தக்காரர். இவர் தமிழ் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நாம் மறந்து போன செந்தமிழ் இவர் நாவில் ஈழ மணத்தோடு விளையாடுகிறது. இவர் தணல் என்ற வலைப்பதிவர். ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ள இவர் நாட்டார் பாடல்களையும் தொகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஈழக்கதைகளை நம் லேடீஸ் ஸ்பெஷலில் பகிரவிருக்கிறார்.

அஃறிணைகள் என்ற ஆவணப்படமும்., ஆட்டிசம் பற்றிய குறும்படமும் எடுத்திருக்கும் கீதா இளங்கோவன் மிகச் சிறந்த சமூக சேவகர். மதுரையில் உள்ள கூடு என்ற அமைப்பிலும் இருக்கிறார். இது அம்பேத்கார் பற்றிய சிந்தனைகளை எல்லாருக்கும் எடுத்து செல்வது. மேலும் இவர் பெண்ணியவாதி. சிந்தனைகளால் செயலால்., சொல்லால். தந்தை வழி சமூகம் சார்ந்த பெண்மேல் சுமத்தப்பட்ட கோட்பாடுகளில் இருந்து பெண்களை சுயமாய் சிந்திக்க .,முன்னெடுத்துச் செல்ல உதவுவது இதன் சித்தாந்தங்களில் ஒன்று. இவர் சாஸ்த்ரி பவனில் பணிபுரிகிறார். துளித்துளி என்ற ப்லாகில் ஜெரோம் ஷர்மிளா பற்றிய இவரின் பகிர்வு அருமை.

மணிமேகலை புரட்சிப்பெண் என்ற வலைப்பதிவர் . இவர். சாஸ்த்த்ரிபவன் தலித் பெண்கள் யூனியன் லீடராகவும்., பெண்கள் யூனியன் லீடராகவும் வெற்றிகரமாக செயல்படுபவர். மிகத் துடிப்பானவர். இவரும் ரோட்டரி., லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் மூலமும் தனது அட்சயா ஃபவுண்டேஷன் மூலமும் சமூக சேவைகள் செய்து வருகிறார்.

அனுராதா நிகேத் சுயதொழில் மு்னைவோர். இவர் ஓரிஃப்ளேமின் தரமான ப்ராடக்ட்டுகளை வாங்கித்தருகிறார் தேவையானவர்களுக்கு.

ரம்யா தேவி. ரம்யாவின் தன்னம்பிக்கைப் பக்கங்கள் என்ற வலைப்பதிவர். இவர் நம் லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த முதல் வலைப்பதிவர். கடுமையான தீக்காயத்தால் 45 சர்ஜரிகளைக் கடந்து இன்று சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில் பணிபுரியும் இவர் தன்னம்பிக்கையின் உச்சகட்ட எடுத்துக்காட்டு.

106.4 எஃப் எம்மில் பணிபுரியும் கவிதா சொர்ணவல்லி ப்லாக் வைத்திருக்கிறார் . பணி நிமித்தம் தற்போது ப்லாக் எழுத நேரமில்லை என்றாலும் இவர் கதைகள் விகடன்., சூரியக்கதிர்., தமிழ் ஃபெமினா போன்றவற்றில் வெளிவந்துள்ளன. மிகச் சிறந்த சிறுகதைகள் அவை.

இவை எல்லாம் முடிந்ததும் கிரிஜாம்மா பேச ஆரம்பித்தார்கள். இன்று உங்களை எல்லாம் நான் இங்கு சந்திக்க விரும்பியதே.. இனி வலைப்பதிவர்களா அடுத்து நீங்க சமூகத்துக்கும் ஏதாவது செய்யணும் . என்ற கருத்தை சொல்லத்தான். லேடீஸ் ஸ்பெஷல் எப்போதுமே பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உயர்வு கொடுக்கும் பத்ரிக்கை. தினமும் என்னை சந்திக்க 2 முதல் 10 பெண்கள் வரை வராங்க. அதில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். என்னைப் பார்த்த மாத்திரத்தில் ., என்னிடம் சொல்லியபின் அவர்கள் மனபாரம் குறைந்தவர்களாகிறார்கள்.

லேடீஸ் ஸ்பெஷல் ஆரம்பித்து 13 வருஷம் ஆகிறது. நல்ல ரெஸ்பான்ஸ் மக்களிடையே. நிறைய வாசக வாசகியர். எங்கு பார்த்தாலும் தெரிந்த முகமாய் இருக்கிறதே என யாராவது விசாரிப்பார்கள். என் பத்ரிக்கைக்கு இன்னும் கொஞ்சம் இளைய சிந்தனை தேவைப்பட்டபோது தேனம்மை கிடைத்தார்கள். அவர்கள் சுறுசுறுப்பு தடதடவென்ற ரயில் பெட்டி போல என்றார்கள்.

உங்களை எல்லாம் இங்கு சந்திக்க அழைத்த நோக்கமே.லேடீஸ் ஸ்பெஷல் பத்தினத விட உங்களால் இந்த சமூகத்துக்கு., பெண்களுக்கு பயன்படுற மாதிரி ஏதாவது செய்ங்கன்னு கேட்டுக்கத்தான் என்றார். அவரின் உயர்ந்த கருத்தை ஏற்று நடத்துவதாக அனைவரும் ஆமோதித்தார்கள். இனி 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி பீச்சில் கூடி இது போன்ற பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். என்றார்கள்..

அனைவரும் கிரிஜாம்மாவை வாழ்த்தி நன்றி தெரிவித்த பின் புகைப்படம் எடுத்து., கூடி நின்று பேசி., தனித்து பேசி., பின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விடைபெற்றோம்.. கடற்காற்றும் அலையும் அடித்துக் கொண்டே இருந்தன.. அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி.

டிஸ்கி;- இந்தச் கட்டுரை ஜூன் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளியாகி உள்ளது. :))

21 கருத்துகள்:

  1. அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  2. சந்திப்புக்கு மகிழ்ச்சி. புகைப்படத்தில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களைத் தெரியவில்லை. வரிசையாகப் பெயர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு தேனம்மை. படங்களை முன்னர் முகநூலில் பார்த்திருக்கிறேன். விரிவாக அறிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு... சந்திப்புக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. நேருக்கு நேர் சந்திப்பு என்பது மிகவும் நல்ல ஆரோக்யமான விஷயம் தான்.

    ஆனாலும் எல்லோரையும் ஒரே இடத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கூடச்செய்வது என்பது சாதாரண விஷயமே அல்ல.

    நல்ல முயற்சி இது.

    தொடரட்டும் உங்கள் அனைவரின் இலக்கியப்பணிகளும், தொடர் சந்திப்புக்களும்.

    அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. லேடீஸ் ஸ்பெஷல் புத்தகத்திலயே பார்த்தேன் தேனக்கா.. அசத்தலா இருந்திச்சு :-))

    பதிலளிநீக்கு
  7. ருக்மணி சேஷசாயி அவர்கள் பற்றிய விவரங்கள் - இரண்டு பாராக்களில் ரிபீட் ஆகியுள்ளது.
    மற்றபடி நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. இனிய சந்திப்பு.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல சந்திப்பு. கிரிஜ்ஜம்மாவின் புது புது சிந்தனைகள் + ஆர்வம் மேலும் மேலும் இளைய தலைமுறகளை ஊக்கபடுத்துவது இதெல்லாம் பெரிய விஷயம். Gr8 Girijamma.
    தேனு நிங்க அப்படியே ப்ளாக்சந்திப்பவர்களின் லிங்கையும் இதில் குடுத்திருக்கலாம். நன்றி. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள சகோதர்/சகோதரி,

    மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

    பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

    தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    நன்றி.

    அன்புடன்,
    அதிரைக்காரன்
    adiraiwala@gmail.com

    பதிலளிநீக்கு
  11. நல்ல சந்திப்பு... எல்லாரையும் சந்திக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை வந்துவிட்டது....

    பதிலளிநீக்கு
  12. புகைப்படத்தில் நால்வரை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  13. சிலர் முகம் தெரிந்தது தேன். மதுமிதாவைக் காணமுடியவில்லை.
    நீங்கள் அனைவரும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நஏரில் பார்க்கும் அனுபவமே தனிதான்.

    பதிலளிநீக்கு
  14. சந்திப்பை பகிர்ந்தமைக்கு சந்தோசம்.. தங்களது அடுத்த சந்திப்பும் இனிதே அமைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. >>அன்று மெரீனாவே எழுத்தாளர் மெரீனாவின் நாடகம் போல கலகலத்தது.

    haa haa ஹா ஹா எல்லாரும் ரொம்ப சீனியர்ஸோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  16. >>கடலையோடு கொஞ்ச நேரம் கடலை போட்டோம் அனைவரும்.

    டைட்டிலா யூஸ் பண்ணி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  17. நன்றி வலையகம்., ரமேஷ்., ஹுசைனம்மா., ராமலெக்ஷ்மி., குமார்., ரத்னவேல் சார்.,கோபால் சார்., சாந்தி., கௌதமன்., மாதேவி, விஜி., அதிரைக்காரன்., கீதா., முனியப்பன் சார்., ராம்., வல்லிசிம்ஹன்., மாய உலகம்., சிபி:))

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)