திங்கள், 30 மே, 2011

ஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட்டறை

ஐஸ்வர்யா ராகவ்... எம் ஓ பி வைஷ்ணவாவில் விஸ்காம் மாணவி. மங்கையர்மலர் சிநேகிதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் மருமகள். மிக அருமையான சமையல் நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் நிகழ்த்துகிறார். மாமியாருக்கு உதவியாக சிநேகிதியிலும் சப் எடிட்டராக இருக்கிறார். கலைஞர் டிவி ஒலிபரப்பிய -- நாங்கள் கலந்து கொண்ட “யுத்தம் செய்” கலந்துரையாடலில் மிக இனிமையான குரலில் அழகாய் தன் கருத்துக்களை எடுத்துவைத்தவர்.



இவர் இந்த மாதம் ஜூன் 4, 5 ஆகிய தினங்களில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை டி. நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் நடத்துகிறார். காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை. மதிய உணவும் அங்கேயே வழங்கப்படும். 8 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும்.


பந்துமித்ராவின் அம்ருதஸ்யபுத்ரா ( BANDHUMITHRA'S AMRUTHASYAPUTHRA -- WE ARE THE CHILDREN OF THE DIVINE) “கிட்ஸ் 2011” என்பது இந்த ஈவண்டின் பெயர். தங்கள் படிப்பில் ., செயலில்., அக்கறையும் ., ஈடுபாடும்., கூர்ந்த மனோநிலையும் பெற இந்த ஈவண்ட் நடத்தப்படுகிறது. ஃபன்., ஆக்டிவிட்டி., லேர்னிங் முறையில் யோகா முதலான பயிற்சியும் பயிற்றுவிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோரும் கலந்து கொள்ளும் இண்டராக்டிவ் வகுப்பும் உண்டு. ஒரு குழந்தைக்கு ரெஜிஸ்டரேஷன் செய்ய 500 ரூபாய். இரண்டு குழந்தைகள் என்றாலும் அதே 500 ரூபாய் மட்டுமே .


எங்க கிளம்பிட்டீங்க.. உங்க பிள்ளைகளை பயிற்சிப்பட்டறையில் விடவா.. லீவு விட்டா., கம்ப்யூட்டர் ப்ராக்டீஸ்., கராத்தே க்ளாஸ்., கிரிக்கெட் கோச்சிங்., அப்பிடின்னு தேடித் தேடி தன் பிள்ளைகளின் வளர்ச்சியைப் பெருக்க நினைக்கிற மெட்ரோ சிட்டி பெற்றோருக்கு ஏற்ற வகுப்பு இது.. சீக்கிரம் ரெஜிஸ்டர் பண்ணிக்குங்க.. வாழ்த்துக்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பயில.. இன்னும் உங்க பிள்ளைகளை அறிந்து கொள்ள..


அன்பின் ஐஸ்வர்யாராகவ் கணவர் ராகவ் துணையோடு , பெற்றோர் எல்லாருக்கும் பயன் தரும் இந்த ஈவண்டை சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள் ..

6 கருத்துகள்:

  1. கல்கியில் வந்துள்ள மெழுகுவத்தி கவிதைக்கு பாராட்டுகள். இந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் இன்வேர்டார் உண்டு என்றாலும் சுகமான கற்பனை.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகளுடன் பெற்றோரும் கலந்து கொள்ளும் இண்டராக்டிவ் வகுப்பும் உண்டு. //
    பயன்தரும் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இப்போ தான் தங்களின் “மெழுகின் முணுமுணுப்பு” கவிதையைக்கல்கியில் ரசித்துப்படித்து மகிழ்ந்தேன். அதற்கு என் முதற்கண் பாராட்டுக்கள்.

    இந்தப்பதிவு, தேவைப்படும் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ள Timely help.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சம்மர் கேம்ப் பற்றிய அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ராஜி

    நன்றி கோபால் சார்

    நன்றி ஜிஜி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)