புதன், 4 மே, 2011

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))



இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்த வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க..


”ஆக்சுவலா சொல்லப் போனா இது ரொம்ப ஷார்ட் டிரிப்தான். ஒரு ஐந்து நாளுக்கு மட்டும் ஒரு வெளிநாட்டுப் பயணம். என் கணவர் ஃபோர்டில் வேலை செய்வதால் அவரோட ஹெட் ஆஃபீஸ்., ஆசியாபசிஃபிக்கோட ஹெட் க்வார்ட்டர்ஸ் சைனாவின் ஷாங்காயில் இருக்கு. அதுக்கு இந்த வருடம் போய் வரலாம்னு போனோம்.

ஷாங்காய் ஏர்போர்ட்டில் இறங்கியதும் பிரமித்தோம்.. அவ்வளவு சூப்பரான அழகான ஏர்போர்ட். கிட்டத்தட்ட 7 ., 8 சென்னையை அடக்கலாம் போல அவ்வளவு பெரிய நகரம் ஷாங்காய். ஏர்போர்ட்டில் இருந்து நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு செல்லவே 40 நிமிடம் பிடித்தது.. கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கு ஊர். ஃப்ளைட்டில் பறந்தது போதாதுன்னு ஃப்ளை ஓவர் ஓவரா காரில் பறந்து ஹோட்டல் இண்டர் காண்டினென்டலை அடைந்தோம்.



ஃபிப்ரவரி மாதம் என்றாலும் நாங்க இருந்த ஐந்து நாளும் ஐந்து க்ளைமேட். முதல் நாள் நல்ல பனி மழை ( SNOW FALL) . மறுநாள் வெய்யில் ., அடுத்த நாள் மழை., அதற்கடுத்த நாள் பயங்கரக் குளிர்.. இவ்வளவு வித்யாசமான க்ளைமேட்டை நாங்க எதிர்பார்க்கலை. க்ளைமேட் ரொம்ப அன்ப்ரடிக்டபிள்.. இப்படித்தான் இருக்கும்னு சொல்ல முடியலை. அங்கே வெய்யிலடிச்ச அன்னிக்கு மறுநாள் மழை வரும்னு சொன்னாங்க வானிலை அறிக்கையில். நம்ம ஊர் வானிலை அறிக்கை மாதிரி( WEATHER FORECAST) இருக்கும்னு நினைச்சோம்.. என்னன்னா நம்ம ஊர் வானிலை அறிக்கையில் மழை பெய்யும்னு சொன்னாங்கன்னா நம்ம ஊர்ல வெய்யில் கொளுத்தும் .. ஆனா பாருங்க அங்க உண்மையாவே ரொம்ப மழை பெய்தது அன்னைக்கு. !! அவங்க சொன்னது எக்ஸாக்டா நடக்குது..ஆச்சர்யம்தான்.

சைனாவில் முதல் கஷ்டம் பாஷை.. ஏன்னா அங்கே யாருக்கும் சைனீஸ் தவிர ஏதும் தெரியாது. ஆங்கிலம் கூட..தெரியாதுஅங்கே நிறைய கார்டுகள் இருக்கும் கடையில் இடத்தின் படம் போட்ட கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டோம். அந்த கார்டில் சைனீஸில் என்னை அந்த இடத்துக்கு கூட்டிச் செல்லவும் என எழுதி இருக்கும். இதை டாக்ஸி ட்ரைவரிடம் காண்பித்து ம் என்று சொல்லணும் அவரும் ம் என்று சொல்லி விட்டு நம்மை அழைத்து போவார்.

ஓஷன் அக்வேரியமுக்கு ஒரு பொருள் வாங்க மறுநாள் போகணும் . நல்லவேளை முதல்நாள் நாங்க அங்கே போனபோது எடுத்த ஃபோட்டோ இருந்துச்சு. அதை காமிச்சு ம் என்றோம். உடனே டாக்ஸி ட்ரைவரும் ம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். என்ன ஒண்ணு கஜினி சூர்யா போல ஃபோட்டோவோட அலைஞ்சோம்னு சொல்லலாம். எங்கே போகணும்னாலும் நம்ம ஃபோட்டோவில் ஒண்ணை காண்பித்து ம் என்று சொல்லி போயிட்டு அடுத்த இடத்துக்கு ம் என்று சொல்லி இன்னொண்னை காமிச்சு ஊர் சுத்தினோம். திரும்ப ஹோட்டலுக்கு போகணும்னாலும் இதே மெத்தட்தான்..ஹோட்டல் ஃபோட்டோ கைவசம் வைச்சிருந்தோம்..

ஊர் ரொம்ப நீட்டா இருந்துச்சு. ட்ராஃபிக் ரூல்ஸை ஒழுங்கா கடைபிடிக்கிறாங்க. ஒரு குப்பை இல்லை சுத்தமா இருந்துச்சு. பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனா அங்கேயும் எக்ஸலேட்டர்ல போய் அதன் பின் நடந்து போற ஃப்ளை ஓவர் மேல உள்ள ப்ரிட்ஜில ஒரு ஆள் ஒரு பெண்ணை படுக்க வைத்து அடித்து அழவைத்து பிச்சை எடுத்துகிட்டு இருந்தாரு.. நம்ம ஊரு போல இருந்துச்சு அந்த காட்சி.. போனவுங்க எல்லாம் காசு போட்டுட்டு போனாங்க. அட இங்கேயுமா இதுன்னு பார்த்துட்டு போனோம் நாங்க..

ரூமில் படிப்பதற்காக நியூஸ் பேப்பர் வாங்கி வந்தோம் . அதில் அன்னைக்குத்தான் ட்ரேடிங்கில் சைனாவை முந்தி ஜப்பான் உலக இரண்டாமிடத்துக்கு வந்திருக்குன்னாங்க.. வேறு ந்யூஸ் ஏதும் இருக்கான்னு பார்த்தா அட நம்ம இந்தியாவில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம் பத்தி எழுதி இருந்துச்சு.. அட நம்ம மானம் உலகம் பூரா பறக்குதேன்னு இருந்துச்சு.

டி வி யில் இந்தியன் சானலே இல்லை. AXN., NATIONAL GEOGRAPHIC., BBC NEWS இதுதான் பார்த்தோம். ஹிந்தியும் இல்லை உலகெங்கும் வரும் தமிழும் இல்லை..

ரெண்டாவது கஷ்டம் உணவு. உணவுன்னு எடுத்துக்கிட்ட சைவம் சாப்பிடுபவர்களுக்கு ரொம்பக் கஷ்டம்தான் ஷாங்காயில். நாங்க ரெடி மிக்ஸ் கொண்டு போயிருந்தோம். கையோட கொஞ்சம் அரிசியும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் . அந்த சாப்பாட்டுக்கு வத்தக் குழம்பும் சாதமும் தேவாமிர்தமா இருந்துச்சு. அப்புறம் நூடில்ஸை நம்ம ஊரு பாணியில் மசாலா எல்லாம் போட்டு ரைஸ் குக்கரில் வேகவைத்து சாப்பிட்டோம்

அங்கே எல்லாம் ஹாஃப் குக்டுதான். எல்லாம் ஹாஃப் பேக்டு ஹாஃப் குக்டுதான் .. அரை வேக்காடு.. நான்வெஜ் கூட.. அசைவத்தை நம்மூரில் நல்லா வேகவைப்பாங்க.. இங்கே அரை வேக்காடு எல்லாம்.,. நம்ம ஊர்ல நாம செய்து சாப்பிடுற சைனீஸ் நூடில்ஸுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தியன் ரெஸ்டாரெண்ட் 2., 3 இருக்கு அந்த இடத்து ஃபோட்டோ எடுத்து போயி ரசம் ., உருளை பொரியல் எல்லாம் ரூமுக்கு வாங்கி வந்து ரைஸ் குக்கரில் சூடு செய்து சாப்பிட்டோம். இந்தியன் ரெஸ்டாரெண்டில் சுரேஷ்னு ஒரு மேனேஜர் இருக்கார் அவர் ரொம்ப ஹெல்ப்ஃபுல். நல்ல ஜெண்டில்மேன் . உதவிக்கு எல்லாம் ஆட்கள் அனுப்பினார். கைட் செய்தார்.

ஆனா ஷாங்காய் ரொம்ப எக்ஸ்பென்சிவான ஊர். மெயினா ஹார்ட் ஆஃப் சிட்டி ரொம்ப அழகு பயங்கர ஃபாஷன். இது ரீசண்டாதான் டெவலப் ஆன சிட்டி . கார்ப்பரேட் கம்பெனிகள் அதிகம். இருக்கு. அதனால அழகுக்கும் கவர்ச்சிக்கும் குறைவில்லை.

ஓல்ட் சிட்டிதான் நம்ம ஊரு மாதிரி. மக்கள் ப்ளாட்ஃபார்மில் எல்லாம் துணி காயப் போடுறாங்க. அப்புறம் கடை எல்லாம் மூட்டை மூட்டையா அரிசி மூட்டை மாதிரி அடுக்கி வைச்சிருக்காங்க.. கொஞ்சம் சிட்டி அளவு நீட் இல்லை இந்த ஓல்ட் சிட்டி.

ஷாங்காயில் ஓடும் நதி பேரு ஹூவாங்க்பூ நதி . இதில் பண்ட் கரையோரம் கட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு நாட்டின் பாணியில் கட்டப்பட்டு இருந்துச்சு. மிக அழகான ஆர்க்கிடெக்ஸர். அதன் மறுபக்கம் ஹை ரைஸ் பில்டிங்க்ஸ்.. வானளாவ உயர்ந்த கட்டிடங்கள். அதை எல்லாம் இங்கே இருந்து பார்க்க அழகா இருந்துச்சு.

மொத்தத்துல ஒரு பாஷை தெரியாத ஊரில் பே பே என்று 5 நாட்கள் இருந்து விட்டு வந்தோம். நண்பர்கள் சிலர் வீட்டில் சாப்பிட்டோம் அது ஒரு ஆறுதலான விஷயம். ஆனாலும் ஐந்து நாளில் நாக்கு நம் ஊர் சாப்பாட்டுக்காக ஏங்க ஆரம்பித்து விட்டது. எந்த வெளிநாடானலும் ஊர் சுத்தி பார்க்க போறவுங்க சைவமாயிருந்தா கையோட நம்மூரு வத்தக்குழம்பு., பொடி வகையறா ., அரிசி., எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் எடுத்துப் போயிருங்க..அப்பதான் தப்பிச்சீங்க.

ஷாப்பிங்னு எடுத்துக்கிட்டா எனக்குன்னு கொஞ்சம் சைனீஸ் ட்ரெஸ் வாங்கினேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லம் சைனீஸ் டால்ஸ்., லாஃபிங் புத்தா., புக் மார்க் இதெல்லாம் வாங்கினேன்.. ஓல்ட் சைனாவின் ஷாங்காய் சிட்டியில் ஆண்டிக்ஸ் இருக்குமாம். பழைய சைனீஸ் கோயில்கள் இருக்குமாம். இந்த முறை மாடர்ன் சிட்டியைத்தான் பார்த்து வந்தோம்.அடுத்த முறை ஓல்ட் ஷாங்காயையும் பார்க்கலாம் என ஐந்து நாள் அற்புதத்திலிருந்து கிளம்பி கிளம்பி சென்னை வந்தோம்..


டிஸ்கி:- சீனாவில் வினோ(தம்) வின் சம்மர் சுற்றுலா பற்றி நான் எடுத்த பேட்டி ஏப்ரல் இவள் புதியவளில் வெளியாகி உள்ளது.:)). நான் பேட்டி எடுத்த பிறகு அவர் கணவருக்கு சீனாவுக்கே பணி மாறுதலாகி விட்டது. அடுத்த முறை ஓல்ட் ஷாங்காய் பற்றிய பேட்டி எடுப்போம்.;;) வாழ்த்துக்கள் வினோ. !

12 கருத்துகள்:

  1. டைட்டிலைப்பார்த்ததும் பயந்தே போயிட்டேன்.. சீனா போனது நீங்களோன்னு.. ( இனி அலப்பறை ஜாஸ்தியா இருக்குமேன்னு .. நோ சீரியஸ் .. ஜஸ்ட் ஃபார் ஜாலி)

    அப்பாடா.. நீங்க போகலை.. ( ஆஹா என்ன ஒரு நல்ல எண்ணம்? # தமிழேண்டா)

    பதிலளிநீக்கு
  2. >>நான் பேட்டி எடுத்த பிறகு அவர் கணவருக்கு சீனாவுக்கே பணி மாறுதலாகி விட்டது.

    haa haa ஹா இனி ஆளாளுக்கு செண்ட்டிமெண்டா உங்களை பேட்டி எடுக்க கூப்பிடப்போறாங்க.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  3. இந்தப்பதிவின் மூலம் சீனா பற்றி பல விஷயங்கள் அறிய முடிந்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சீனா பற்றி அதிக விஷயங்கள் அறியத் தந்ததற்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சீனாவை பற்றிய நல்ல அனுபவ பதிவு...அக்கா..

    பதிலளிநீக்கு
  6. சீனாவை பற்றிய பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!! கலக்குறீங்க,வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வுக்கு...சீனா பற்றி இன்னும் தெரிந்து கொண்டேன்...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. பதிவு அற்ப்புதம் அழகாக உள்ளது தங்களின் எழுத்து நடை.

    பதிலளிநீக்கு
  9. நன்றி செந்தில்.. :)))

    நன்றி கோபால் சார்

    நன்றி ராஜி

    நன்றி ராம்லெக்ஷ்மி

    நன்றி செந்தில்

    நன்றி மேனகா

    நன்றி கீதா

    நன்றி சசி..

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)