சனி, 2 ஏப்ரல், 2011

பங்குச் சந்தை., தங்கம்., ம்யூச்சுவல் ஃபண்ட். அஞ்சலகம். முதலீட்டு ஆலோசனைகள்..(6)

1. தங்கத்தில் செய்யும் முதலீடு சரியானதா..அப்படி செய்யும் போது நகைகளாக வாங்குவது சிறந்ததா,, அல்லது காயினாக வாங்குவது சிறந்ததா.

பதில்:- இன்ஸ்வெஸ்ட்மெண்ட் என வரும் போது தங்கத்தில் செய்யும் முதலீடு சரியானது.. ஷேர்ஸில் மட்டும் பணம்போடாமல் டைவர்ஸிஃபைடாக முதலீடு செய்ய. தங்கம் சிறந்த ஆப்ஷன்.. அதிலும் காயினாக வாங்குவது சிறந்தது. காயினாக இருந்தால் விற்க ஏற்றது..

2. ம்யூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டாலும் அதுவும் ஷேர்ஸில்தான் இன்வால்வ் ஆகிறது..அதனால் அதிலும் ஏற்ற இறக்கம் ஏற்படுது.. எனவே மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாமா..?


பதில்:- இனிஷியல் இன்வெஸ்டார்ஸுக்கு மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நல்ல வெஹிக்கிள்.....பவர் செக்டார்., ஃபைனான்ஸ் செக்டார் .,பாங்கிங் செக்டார் என மானேஜ்மெண்ட் ஆராய்ச்சி செய்து எடுத்து வைத்துள்ளார்கள்..தனிப்பட்ட முறையில் ஷேர்ஸை விட மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மிக அதிக முதலீட்டுக்கு உகந்தது.. ஆரம்ப கால முதலீட்டாளருக்கு....மிகச் சிறந்த ஆப்ஷன் எனலாம்..

3. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ரெப்ரசெண்டேட்டிவ் சொன்னார் .. ஒரு குறிப்பிட்ட தொகையை 3 வருடம் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள் ... பின் பத்து வருடம் கழித்து ஒரு பெரிய தொகை கிடைக்கும் என சொன்னதால் என முதலீடு செய்தேன் .. ஆனால் 4வது வருடத்தில் போய் கேட்டால் நான்போட்டதில் பாதியா இருக்குன்னு சொல்றாங்க அது.. இப்போது என்ன செய்ய..?

பதில்:- நம்பவே கூடாது.. மார்க்கெட் வொலடைல்னு தெரியும்.. எனவே மியுச்சுவல் ஃபண்ட் ரிடர்ன் கியாரண்டி பண்ண முடியாது.. நம்ம சொந்த ரிஸ்க் தான் அது..

4. மாதாந்திர சேமிப்பில் சிறந்தது வங்கி சேமிப்பா.. நகைச் சீட்டா., அஞ்சலக முதலீடா..?

பதில்:- ஸ்பெசிஃபிக்கா சொல்லணும்னா வயதுப்படிதான்..வயசானவங்க PPF மாதிரி ரிஸ்க் இல்லாத முதலீடு செய்யலாம்.. மூணையும் கம்பேர் பண்ண முடியாது.. பாதுகாப்புன்னா டெப்பாசிட்தான்.. போஸ்ட் ஆபிஸ் முதலீடும் சிறந்தது.. ஒரு 50,000 இருக்குன்னா ஷேர்ஸில் ஒரு 10,000., மியுச்சுவல் ஃபண்டில் ஒரு 10,000., தங்கத்தில் ஒரு 10,000., வங்கி சேமிப்பில் ஒரு 10,000., அஞ்சலக முதலீட்டில் ஒரு 10,000 ம்னு பிரிச்சு போடலாம்.. சேஃபா ரெண்டும் ரிஸ்கில் ரெண்டும் போடலாம் ..மேலும் இது வயதையும் பொறுத்தது.. வயதானவர்களுக்கு சேமிப்புதான் சிறந்தது..

5. நாம் சேமிக்கும் பணத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா..? எவ்வளவு வைத்துக் கொள்ளலாம்..? சட்டம் என்ன சொல்கிறது..?

பதில் :- எவ்வளவு வேணும்னாலும் வைத்துக் கொள்ளலாம்.. கேட்டா கணக்கு இருக்க வேண்டும் .. அஃபிஷியலா உள்ள பணத்துக்கு அளவில்லை...கணக்கு வழக்கு சரியா இருந்தா ரொக்கம் அளவு இல்லை.. எவ்வளவு வேணும்னாலும் வைச்சுக்கலாம்.. நேரா இருக்கணும் கணக்கு வழக்கு எல்லாம்..

டிஸ்கி :- திருமதி சித்ரா நாகப்பன் நமது லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக அளித்த முதலீட்டு ஆலோசனைகள்..அக்டோபர் 2010 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்து இருக்கு.

8 கருத்துகள்:

  1. online வர்த்தகத்தை பற்றி கொஞ்சம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி, தொடரட்டும் உங்கள் சேவை!

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. tipS எல்லாம் நல்லாருக்கு மேடம்.. நாணயம் விகடனுக்கு அனுப்புங்க.. வாய்ப்பு இருக்கு.. பல துறைல சரக்கு வெச்சிருக்கீங்க போல.. ம் ம் பீ கேர்ஃபுல்

    (கடைசி வார்னிங்க் எனக்கு நானே .. ஹி ஹி )

    பதிலளிநீக்கு
  5. நிச்சயம் எழு்துறேன் ரமேஷ்..:)

    நன்றி சரவணா

    நன்றி ராஜி

    நன்றி அஷோக்

    நன்றி செந்தில்..:)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. Nice info,

    follow my classified website - indian latest online classiindia classified - www.classiindia.in

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)