திங்கள், 14 மார்ச், 2011

நரம்பறுந்த நிலம்...

நின்ற இடம்
அமர்ந்த இடம்
இருந்த இடம்
கிடந்த இடம்..

மண்சரிவில்
புதைந்த இடம்
மனிதர் வாழ்ந்த
உயிர்த்தடம்..

அணு வீச்சு.,
ஆழ்துளை...

கதிர் அறுத்து செருகிய
நூற்றுக் கட்டிடங்கள்..

முரணோடு
இயற்கை பேர்த்து
உயிர் சுழற்சிச்
சக்கரம் நிறுத்தி..

கண்டத்திட்டுகள்
நரம்பறுந்து
நகர்ந்து சென்று
நூலில் ஆடும்
பொம்மைகளாய்..

நீர் சரிந்து
மண் சரிந்து
உயிர் செறிந்த
நீர்ச்சமாதி..

யாழறுந்த வீணை
அபஸ்வரமாய்
பெருகுவதாய்
நரம்பறுந்து
நைந்த மகள்..
நிலம் எனும் நல்லாள்
அறியாதோர் ஆக்கிரமிப்பில்
அகலத் தோண்ட நகும்
ஆழத்தோண்ட வெகும்.

15 கருத்துகள்:

  1. கவிதாஞ்சலி அருமை...

    சுனாமியில் உயிர்ழந்த அனைருக்கும் கவிதை வீதியின் அஞ்சலி..

    பதிலளிநீக்கு
  2. மனதை நெகிழ வைத்த கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  3. நிலம் எனும் நல்லாள்
    அறியாதோர் ஆக்கிரமிப்பில்
    அகலத் தோண்ட நகும்
    ஆழத்தோண்ட வெகும்.
    ஆஹா.. அப்படியே வெடித்துச் சிதறிய உணர்வுகள்..
    இயற்கை தன் பொறுமையைக் கைவிட்டால் மனித இனம் காணாமல் போய் விடும் அவலம்.. வலிமையாய் பதிவாகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. முரணோடு
    இயற்கை பேர்த்து
    உயிர் சுழற்சிச்
    சக்கரம் நிறுத்தி..//

    கவிதையின் படிமம் அருமையாக இருக்கிறது. தெளிவான நடையில் நீண்ட சொல்லில் பொருள் புலப்படுவதைத் தவிர்த்து ஒற்றைச் சொற்களினால் ஓராயிரம் சம்பவங்களைச் சொல்லும் படி கோர்த்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. யாழறுந்த வீணை
    அபஸ்வரமாய்
    பெருகுவதாய்
    நரம்பறுந்து
    நைந்த மகள்..
    நிலம் எனும் நல்லாள்
    அறியாதோர் ஆக்கிரமிப்பில்
    அகலத் தோண்ட நகும்
    ஆழத்தோண்ட வெகும்.//

    இயற்கையினை விரிவுபடுத்தி அழகுபடுத்த நினைத்தால் இயற்கை எம்மைப் பார்த்துச் சிரிப்பது போலவும், அதனை ஆழமாக ஆதிக்கச் செய்ய நினைத்தால் கடுஞ் சினம் கொண்டு எமக்கெதிராக எழுவதையும் அழகாகச் சித்திரித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    நரம்பறுந்த நிலம்- படிமங்களினூடு இயற்கையின் பிடிப்பினையும், எதிர்வினைகளயும் சுட்டி நிற்கும் ஒரு அறிவியல் சார் விழிப்புணர்வு!

    பதிலளிநீக்கு
  6. total wash out னு சொல்வோமே அப்படி இருந்தது, ஜப்பானின் சுனாமியை பார்த்த போது. அதை பார்த்த போது நான் முணுமுணுத்தது " ரொம்ப பாவம் இந்த ஜப்பானியர்கள் "

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை அம்மா.
    ஆனால் வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. ஜப்பானில் ஏற்பட்ட நிலை மனதை ரொம்ப வேதனைப்படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் போல் அழகிய சொற்களை கடைந்தெடுத்து வார்த்தையில் பிரவாகம் எடுத்து இருக்கின்றீர்கள் தேனு.

    பதிலளிநீக்கு
  10. அகலத் தோண்ட நகும்
    ஆழத்தோண்ட வெகும்./
    பாதிப்பு மிக அதிகம். விரைவில் மீண்டெழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி சௌந்தர்

    நன்றி ஆயிஷா

    நன்றி ரிஷபன்

    நன்றி நிரூபன்

    நன்றி ரூஃபினா

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ரமேஷ்

    நன்றி இளம்தூயவன்

    நன்றி ரவி

    நன்றி குமார்

    நன்றி ஸாதிகா

    நன்றி ராஜி..

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)