சனி, 5 மார்ச், 2011

குழுமக்கூட்டு....

குழுமக்கூட்டு:-
*****************************
வீட்டுக் கூட்டாயினும்
நாட்டுக் கூட்டாயினும்
பச்சைப் பயி(றா)ராய்க் கிடந்தாலும்
செம தாளிப்புதான்..

கூடா இடத்தில் கூடினால்
சீட்டும் அம்பேல்தான்
குறுகிக் குந்தவேண்டி வரும்..


சகோதரியாய் பேச்சும்
அண்ணி., மாமியாய்
ஏச்சும் போனசாய்..

பிடித்தால் கூட்டு
பிடிக்காவிட்டால் துவட்ட(ல்)
வேண்டியதுதான்..

புன்னகைத்தபடியே
பிரட்(டல்)டுவது எப்படி
என அறிந்து ,

வறு(வ)த்தலும்
பொரி(ய)த்தலும்
வகுப்பில் படிக்காமல்

விறைச் சோறாய்
சேராமல் இருக்கக்
கற்றுக் கொள்வீர்கள்..

நாளடைவில்
வத்(தக்குழம்பு)திப்போவீர்கள் ..
அல்லதுதெளிந்த ஞானரசமாவீர்கள்..

விருந்துண்ண என
வந்துவிட்ட பிறகு
பாயாசமிட்டாலும்
பாய்சனாக எண்ணாமல்

கொழுமோர் காய்ச்சிக்
குடியுங்கள்
பயமடங்க..

இதெல்லாம் கடக்காவிட்டால்
கூட்டிலிருந்து எப்போது கொட்டும்
குளவியாகக் கற்பீர்கள்..

18 கருத்துகள்:

  1. நல்லா இருக்குக்கா.. வார்த்தைகள் விளையாடியிருக்கு...

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_2646.html

    பதிலளிநீக்கு
  2. ஏதேனும் அரசியல் உள்ளர்த்தம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  3. அருமை.. அருமை.. கூட்டு ருசியாயிருக்கு:-)))

    பதிலளிநீக்கு
  4. //விருந்துண்ண என
    வந்துவிட்ட பிறகு
    பாயாசமிட்டாலும்
    பாய்சனாக எண்ணாமல்//

    ஐயோ..என்னைய யாராவது காப்பாத்துங்களேன்....!!! :-))

    பாட்டி தாத்தாவை பார்த்தா பாவமா தெரியல..?

    ம் பாவமாத்தான் தெரிஞ்சுது அவர் இன்னொரு கிளாஸ் பாயாசம் கேக்கும் போது ..!!

    பதிலளிநீக்கு
  5. அருமை அம்மா.
    எனக்கு புரியும்படி எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். கவிதை நன்றாக இருக்கிறது. இனிமேல் தொடர்ந்து படிக்கிறேன். தொடர்ந்து நல்ல கவிதைகளாக எழுதுங்கள்.
    தினமலர் வாரமலரிலும் நல்ல கவிதைகள் வருகின்றன. நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  6. விறைச் சோறாய்
    சேராமல் இருக்கக்
    கற்றுக் கொள்வீர்கள்//
    அனுபவம் மிக்க அறிவுரைகள்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாக் கூட்டுக்கும் பொருத்தமாக எழுத்து!
    பலே, பலே!!

    பதிலளிநீக்கு
  8. எக்காவ், இப்பத்தான் கொஞ்சம் மின்ன, “நானும் ரவுடிதான்”னு ஜீப்ல ஏறினீங்கோ அடுத்தாப்ல அரசியல் பேச ஆரம்பிச்சுட்டீங்களே!! தெகிரியம்தான்!! ;-))))))

    பதிலளிநீக்கு
  9. என்ன / யாரைச் சொல்ல வருகிறீர்கள்..?!!

    பதிலளிநீக்கு
  10. அரசியலோ!! அடுப்படியோ!!! கவிதை என்னனென்னவோ சொல்லுது தேனக்கா...

    பதிலளிநீக்கு
  11. வார்த்தை ஜாலம் என்பது கவிதையில் குதித்து விளையாடுகிறது தேனம்மை

    பதிலளிநீக்கு
  12. அக்கா உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

    http://balajisaravana.blogspot.com/2011/03/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  13. தமிழ் சும்மா விளையாடுகிறது.கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  14. நன்றி கருன்..:))

    பாரத் எல்லாத்துக்கும் பொருந்தும் இது..

    நன்றி சாரல்..:)

    என்ன ஜெய் இது ..:))

    நன்றி ரத்னவேல் சார்..

    நன்றி ராஜி..

    நன்றி மாதவி..

    நன்றி ஹுசைனம்மா..:)))))))))))


    நன்றி அஷோக்..

    யாரையும் சொல்லலை ராம்..:)

    கனி புரிந்துவிட்டது குறித்து நன்றி ..:))

    நன்றி மேனகா..

    நன்றி ஆயிஷா..

    நன்றி ஸாதிகா..

    நன்றி பாலாஜி.. நிச்சயம் தொடர்கிறேன்..

    நன்றி விஜயன்..

    நன்றி ராஜி..:)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)