வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தூண்கள்.. பூமிப்புழு..



தூண்கள்..:-

****************

எத்தனை முறை

ஓடிப்பிடித்து

ஒளிந்த தூண்கள்..


கட்டிப் பிடித்துச்சுற்றி

சாக்பீசால் எழுதி.,


கம்பால் அடித்து

பாடம் நடத்தி.,


கல்நாகங்கள்

தலை மீதேறி.,


பட்டியக்கல் விட்டு

பட்டியக்கல் நோக்கி ஓடி.,


கல்லா மண்ணா

விளையாடிய கால்தடங்களை

ஒளித்து வைக்கிறது..


தடவிப் பார்க்கும் நான்

இப்போது ஒளிந்து கொள்ள

முடியாத உருவத்தோடு..

==============================


பூமிப்புழு..:-

****************

எப்போதும் உண்கிறது

பழுத்து உதிர்ந்த இலைகளையும்., சருகுகளையும்.,

சில சமயம் வெட்டுப்பட்ட துளிர்களையும்..



26 கருத்துகள்:

  1. கவிதை யதார்த்தமாய் இருக்குக்கா...
    நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாக்கே...

    பதிலளிநீக்கு
  2. அக்கா.... தூண் பற்றிய கவிதை.... அப்படியே நெஞ்சில் ஒட்டிக் கொண்டு விட்டது.... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  3. சுவையான கவிதைகள்..
    வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..
    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  4. மிக எளிமையாய் சொல்ல வந்ததய் இயல்பாய் சொல்லும் பாங்கு உங்களுக்கே உரியது

    பதிலளிநீக்கு
  5. தூண் கவிதை சின்ன வயசு நியாபகத்தை தந்து செல்கிறது அக்கா! :)

    பதிலளிநீக்கு
  6. உயிரோசையிலேயே வாசித்தேன். இங்கே மறுவாசிப்பு. இனி தூண்களை பார்த்தால், உங்களின் இந்த தூண்கள் கவிதை ஞாபகத்திற்கு வரும்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா..தேனம்மை,என்ன யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.என்னை அப்படியே சிறுபிராயத்துக்கு இழுத்துச் சென்று விட்டது.துண்களின் படங்களும் பிரமாதம்,

    பதிலளிநீக்கு
  8. உயிரோசையில் வாசித்த போதே மிக ரசித்த ஒன்று தூண்கள்.

    பதிலளிநீக்கு
  9. பிள்ளைப்பிராயத்தை நினைவுபடுத்திய தூண்களும் கவிதையும் அழகு...

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவது கவிதை இரண்டே வரிகளில் பிரமிக்க வைத்துவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  11. >>இப்போது ஒளிந்து கொள்ள
    முடியாத உருவத்தோடு..

    haa haa ஹா ஹா சுய எள்ளல்?

    பதிலளிநீக்கு
  12. பழைய ஞாபகங்களைக் கிளறிய தூண்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  13. நானும் தூண்களை அடித்து பாடம் நடத்தியிருக்கேன்..!!

    அருமையான கவிதைகள்!

    பதிலளிநீக்கு
  14. உயிரோசையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  15. அன்று அணைக்கமுடியாத
    தூண்களை
    இன்று அரவணைத்து
    காப்போம்..


    நல்லாருக்குங்க..

    பதிலளிநீக்கு
  16. முதல் கவிதை நினைவலைகளைத் தூண்டி சிறுபிள்ளையாக்குகிறது.இரண்டாவது கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. தேனம்மை இரண்டு கவிதைகளும் அருமை.
    தூண் கவிதை பிள்ளைபிராயத்தை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
  18. மலரும் நினைவாய் மணம் பரப்பி ஆயிரங்கால் மண்டபத்தூண்களுக்கு அழைத்துச் சென்ற கவிதை.

    பதிலளிநீக்கு
  19. நிச்சயம் வரேன் கருன்..

    ஆமாம் ரூஃபினா..

    நன்றி சித்து.,

    நன்றி சௌந்தர்..

    நன்றி வேலு.,

    நன்றி பாலாஜி சரவணா.,

    நன்றி ரமேஷ்

    நன்றி ஸாதிகா.,

    நன்றி ராமலெக்ஷ்மி.,

    நன்றி சாரல்.

    நன்றி விஜய்..

    நன்றி பிரபா..

    நன்றி செந்தில்குமார்..:))

    பதிலளிநீக்கு
  20. செந்தில் பட்டியக் கல்னா கருப்பு அல்லது வெள்ளைப் பாறாங்கல். அதை படியாய் வடிவமைத்து முற்றத்தை சுற்றிலும் பொருத்தி இருப்பாங்க..

    பதிலளிநீக்கு
  21. நன்றி சுந்தரா.,

    நன்றி சசிகுமார்.,

    நன்றி மாதவி.. நீங்களுமா..:))

    நன்றி அக்பர்.,

    நன்றி சந்தான சங்கர்..

    நன்றி ஸ்ரீராம்..

    நன்றி கோமதி

    நன்றி இராஜராஜேஸ்வரி..:))

    பதிலளிநீக்கு
  22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)