ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பிஃப்ரவரி மாத லேடீஸ் ஸ்பெஷலில் மணிமேகலை., ஜலீலா., ருக்கு அம்மா., டாக்டர் வசந்திபாபு மற்றும் நான்.

பிஃப்ரவரி மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழ் சுய தொழில் சிறப்பிதழா மலர்ந்திருக்கு. மகளிர் சுய தொழில் பக்கங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கு. மார்க்கெட்டிங் உதவிக்காகவும் லேடீஸ் ஸ்பெஷல் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க., வகுப்புகள் எடுப்பதை அறிவிக்க., தங்கள் தொழிலை மேம்படுத்த ., விரிவுபடுத்த என்று எல்லாவற்றுக்கும் உதவியாக http://www.ladiessecialshopping.com/ உருவாக்கியுள்ளோம்.

உலகெங்கும் உள்ள சகோதரிகள் தாங்கள் ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் இந்த இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்,
ஒவ்வொரு மாதமும் வெளிவரும் போராடி ஜெயித்த பெண்களின் கதைகள் வித்யாசமா இருக்கும் . அடிப்படையில் புத்திஸ்டாகவும்., தலித் என்று சொல்லிக்கொள்வதில் தன்னை முன்னிருத்தி பல நல்ல முயற்சிகளையும்., செயல்களையும் சாதனைகளையும் செய்துள்ள சாஸ்த்ரி பவன் பெண்கள் ஊழிய நலச் சங்கத் தலைவி., மற்றும் தலித் பெண்கள் ஊழியர் நலச் சங்கத் தலைவியுமான திருமதி மணிமேகலையினை பேட்டி கண்டதை பெருமையாகக் கருதுகிறேன்.. வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தங்கை கீதா இளங்கோவனுக்கு நன்றிகள்.

இந்த மாத ப்லாகர் அறிமுகத்தில் நம்ம அருமைத் தங்கை ஜலீலா கமல் .. மிக சிறப்பான சமையல் குறிப்புகளும் கான்சர் பற்றியும் பகிர்ந்து இருக்காங்க.. நன்றி ஜலீலா..

வழக்கம் போல நம்ம ருக்கு அம்மாவின் திருக்குறள் கதைகள்.. ஒரு அப்பா தன் குழந்தையின் மேல் எப்படி கவனம் எடுத்துக்குறார் என்பதைப் பற்றி சிறப்பான சிறுகதை.. நல்ல குறளோடு.. படிச்சு பாருங்க..

எங்கள் கல்லூரியின் தேவதை., எங்கள் அன்பின் ஒட்டு மொத்த குத்தகைதாரி.. (இவர்கள் மோனோஆக்டிங் மற்றும் பல திறமைகளைப் பார்த்து வியந்துதான் நாமும் ஏதாவது இப்படி செய்ய வேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டு கல்லூரியில் கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதுண்டு..) அன்பின் வசந்தி அக்கா என்ற டாக்டர் வசந்தி பாபு அவர்களை பல வருடங்களுக்குப் பிறகு ஆர்க்குட்டில் சந்தித்தேன்.. இவர்கள் HOME SWEET HOME என்ற கவுன்சிலிங் கிளினிக் வைத்திருக்கிறார்கள். மனநல ஆலோசகராக இருக்கிறார்கள்.. குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி அவர்கள் கூறியவற்றை தொகுத்துள்ளேன்.. சைக்கலாஜிகல் ட்ரீட்மெண்ட் குழந்தைகளுக்கு தேவை இல்லை., பெற்றோராகிய நமக்குத்தான் என அழுத்தம் திருத்தமான பகிர்வு அது.. எல்லாத்தையும் அடுத்து அடுத்து பகிர்வேன்.. நன்றி மக்காஸ்.. நன்றி கிரிஜாம்மா..:))
டிஸ்கி..1..:- லேடீஸ் ஸ்பெஷலை லிங்கில் பதிவேற்றும் ஊழியருக்கு திருமணம்.. எனவே லிங்கில் தாமதமாகத்தான் வெளிவரும்.. அவருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்..
டிஸ்கி ..2..:- மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷல் மகளிர் தின சிறப்பிதழா மலரப் போகுது.. அதுக்கு உங்க படைப்புக்களை அனைத்து வலைப்பதிவர்களும் அனுப்பி வைங்க.. கதை., கவிதை., கட்டுரை எதுவானாலும்.. பிஃப்ரவரி 10 ஆம் தேதிக்குக்குள்ள அனுப்பி வைங்க.. சிறப்பானது வெளியாகும்.
டிஸ்கி..3..:- ஆண் ., பெண் வலைப்பதிவர்கள் அனைவரும் அனுப்பலாம்.. அனுப்ப வேண்டிய மெயில் ஐடி . thenulakshman@gmail.com

27 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. புத்தகத்தையே முழுமையாக வாசித்து விடுகிற அனுபவத்தை தருகிறது - உங்கள் விமர்சனம். படைப்புகளை இரு பாலரும் அனுப்பலாமா.

    பதிலளிநீக்கு
  4. //அவருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்//
    இதுதான் தேனக்கா!! உங்களின் வாழ்த்துகளோடு, எங்களின் வாழ்த்துகளும் கிடைக்கச் செய்றீங்க பாருங்க!!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும், ஸ்பெசலாக திருமணம் ஆகபோகும் நண்பருக்கும் என் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. பகிர்வுக்கு மிக்க நன்றி தேனம்மை. உங்கள் கட்டுரைகளை சீக்கிரம் பதியுங்கள் இங்கே.

    லேடீஸ் ஸ்பெஷல் இணையப் பொறுப்பாளருக்கு திருமண வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள் ஜலீலா:)!

    பதிலளிநீக்கு
  8. மகளிர் தின சிறப்பிதழ் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. மகளிர் தின சிறப்பிதழ் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேடம்... ஆண்களும் கலந்துக்கலாம்ன்னு ஒரு நல்ல செய்தி வேற சொல்லியிருக்கீங்க... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. லேடீஸ் ஸ்பெஷல் கெளரவித்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. தேனக்கா நெட் சரியா வொர்க் ஆகல நேற்று ஸாதிகா அக்கா சொன்னாங்க இப்ப தான் பார்த்தேன்.
    மிக்க மகிழ்சி, இந்த மாதம் இதழில் என் பதிவை இனைத்த கிரிஜா மேடத்துக்கும் , தோழிகளை அழகிய முறையில் அறிமுகப்படுத்திய உஙக்ளுக்கும் மிக்க நன்றி

    //அவருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்..//
    மற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்,தேனக்கா பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் அக்கா. இன்று மணி `லேடீஸ் ஸ்பெஷல்' இதழை கொண்டு வந்து கொடுத்தார். கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. உங்கள் உற்சாகமும் உழைப்பும் என்னை பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் தேனக்கா.... தங்களுக்கும்,மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.முடிந்த போது என் ப்ளாக்கிற்க்கு வந்து பார்வையிடுங்கள் அக்கா....
    http://apsaraillam.blogspot.com
    உங்களை மெயில் மூலம் சந்திக்கிறேன்.

    அன்புடன்,
    அப்சரா.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    குறிஞ்சிகுடில்

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் என் இனிய‌ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. தேனக்கா இன்னிக்குதேன் முதல் தடவையா உங்க வலைக்கு வர்றேன். இனிமே பாலு பண்ணிக்கறேன், இன்ஷா அல்லாஹ். :)

    பதிலளிநீக்கு
  20. நன்றி கலாநேசன்., ஸாதிகா., குமார்., கீதா., ரமேஷ்., ஹுஸைனம்மா., மனோ., செந்தில்குமார்., மேனகா., ராமலெக்ஷ்மி., அக்பர்., சிவகுமார்., பிரபாகர்., டி வி ஆர்., மாதேவி.,ஜலீலா., ஆசியா., ஆயிஷா., கீதா., அப்ஸரா., குறிஞ்சி., ப்ரியா., அன்னு

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  22. thenakka,

    ungalukku oru kathai anuppinene, neengal bathil tharavillai. athil ethum pilai irunthaal enakku theriyappaduthavum.pl. nanringkkaa. :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)