வெள்ளி, 26 நவம்பர், 2010

கீதா ஜீவன்.. சமூக நலத்துறையின் ஜீவன்..




கீதா ஜீவன் சமுக நலத்துறை அமைச்சர் என்று சொல்வதை விட அதன் ஜீவன் என்று சொல்லலாம். தி. மு. க வின் மிகப் பெரும் தூணாயிருக்கும் பெரியசாமி அவர்களின் புதல்வி. மாநில அமைச்சர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் நமது சகோதரி போல தோற்றத்திலும் எளிமையிலும் கவர்கிறார்.

எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு சந்திப்பை., இவ்வளவு எளிதாய் ஒரு அமைச்சரை பக்கத்தில் சந்திக்க இயலும் என. கிரிஜாம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி அங்காடியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஒரு கருத்தரங்க்ம் நடைபெற்றது. அதில் சுய உதவிக் குழுப் பெண்கள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் என்ற தலைப்பில் பேச கிரிஜாம்மா எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தார்கள்.

எக்ஸ்னோரா தலைவி திருமதி சுலோசனாவின் வேண்டுகோளுக்கிணங்க கிரிஜாம்மா ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி அங்காடியில் ( கிரிஜாம்மா அமைச்சரை போனில் இவ்விழாவுக்கு வரும்படி அழைத்திருந்தார்களாம். ) வருகை புரிந்த அமைச்சரைப் பார்த்து வியந்தோம். முதல் ஆச்சர்யம் அது. ஏனெனில் அமைச்சர் வந்துவிட்டார் என்றால் எல்லா இடங்களிலும் இடம் பெறும் பந்தா என்னவென்று அறிவோம். ஆனால் வந்த சுவடே தெரியாமல் அங்காடியில் இருந்த பெண்களோடு பேசியபடி மிக எளிமையாக வந்தார்.

அனைவரும் பேசும்போதும் மிக அழகாய்ப் புன்னகைத்தபடி ஆமோதித்து கவனித்தார். உயர்ந்த நிலையில் இருக்கும் சிலரிடம் மட்டுமே காணக்கூடிய குணம் இது.

எல்லாவற்றையும் கவனித்து உள்வாங்கிக் கொண்டார். இரண்டாவது ஆச்சர்யம் இது.

மூன்றாவது அவரின் பணிகள்.. தொழுநோயாளிகளுக்கு., ரேஷன் கடை ஊழியர்களுக்கு., விதவைப் பெண்களுக்கு., அங்கன்வாடி ஊழியர்களுக்கு., என அவர் புரிந்துள்ள சேவை எண்ணில் அடங்கா.. சமூகத்தின் ஆணி வேரான பிரச்சனைகளை எளிதாய்க் கையாளும்., எளியோருக்கும் எளியோரான அமைச்சர் கீதா ஜீவனிடம் இத்துறையைக் கொடுத்தது தி மு க அரசுக்கும் பெருமைக்குரிய செயல்.
நான்காவதுதான் மிகச் சிறப்பு . அவரின் பேச்சுத்திறன். மகா கவியின் வாக்குகள் ஒவ்வொன்றாய் நிறைவேறி வருவதைக் குறிப்பிட்டார்.” பட்டங்கள் ஆள்வதும் ., சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.,” என்று அவர் சொன்னது நிறைவேறி உள்ளது இன்று.

இன்று படிப்பறிவில்லாத பெண்களைக் காண்பது அரிது. என்றும் மேலும் ”எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி ” என்று மகாகவி சொன்னதுபோல் பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி வருகிறார்கள். அவரின் வாக்கு எல்லாம் சத்திய வாக்குப் போல பலித்து வருகிறது என அமைச்சர் கூறினார்கள்.

அமைச்சரின் பேச்சுத்திறன் தி மு க உயர்மட்டத்தாலேயே கவனித்துப் பாராட்டப்பட்ட ஒன்று. அடிப்படையில் எம். எஸ். சி ., பி. எட்., பட்டதாரியான் இவர் மூன்று பள்ளிகளையும் நிர்வகித்து வருகிறார். பள்ளி நிர்வாகி., பஞ்சாயத்துத் தலைவர்., அமைச்சர் என்று எந்தப் பதவியில் இருந்தாலும் சிறப்பாகப் பணி புரிவது இவரின் வழக்கம்.

இரண்டு நாட்கள் சென்னையிலும் ., ஐந்து நாட்கள் தொகுதியிலும் பம்பரமாகப் பணிபுரிந்து வருகிறார். கிடைத்த இரண்டு நாட்களிலும் கட்சிப் பணிகளை முடித்துவிட்டு நமது கருத்தரங்கைத் தலைமை தாங்க நேரம் ஒதுக்கி இருந்தார்.

கிரிஜாம்மாவின் நிகழ்ச்சிகளைப் பொதிகையில் பார்த்திருப்பதாகக் கூறினார். இவரின் எளிமை ஒன்றே இவரின் எல்லாப் பெருமைகளுக்கும் காரணம். அமைச்சர் என்பவர் பொதுமக்கள் அணுகக் கூடியவராய் இருத்தல் வேண்டும் . அந்த வகையில் இவர் எளிதில் அணுகக் கூடியவராய் இருக்கிறார். இதே இவரின் சிறப்புக்களுக்கும் காரணம். இன்னும் சிறப்புக்கள் பல அடைய லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக வாழ்த்துக்கள்..

டிஸ்கி..1..:- இந்தக் கட்டுரை லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்காக எழுதப்பட்டது.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் 48., 49 ஆம் பக்கங்களில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி .. 2.. :- நமது மண்., நமது பாரம்பரியம் என்ற விருது கொடுத்த தம்பி சௌந்தருக்கு நன்றி..

15 கருத்துகள்:

  1. ஆச்சரியாமாக தான் உள்ளது.. இந்த காலத்தில் இப்படி எளிமையாகவா..!!

    என்னுடையா சார்பாகவும் ஆவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அமைச்சரென்பவருக்கு இலக்கணம் கீதா ஜீவன்...

    எனது மண் எனது கலாச்சாரம் என்பதை

    நமது மண் நமது பாரம்பரியம் என்று சொன்னது அழகு...!

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி தேனக்கா.விருதிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றிங்க. விருதுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி தேனக்கா விருதிற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அமைச்சர் கீதா ஜீவன் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்

    டிஸ்கி இரண்டு ரொம்ப நன்றி அக்கா....

    பதிலளிநீக்கு
  7. பகிர்வுக்கு நன்றி தேனக்கா.விருதிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்களை அமைச்சராக்கினா இன்னும் தூள் கிளப்புவீங்க

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. ஆச்சர்யம்தான் இப்படி ஒரு அமைச்சர் கண்டு. பெண் என்பதும் எளிமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு நன்றி அக்கா...!! :-))

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. நன்றீ ஜயந்த., வசந்த்., வரோ., ராமலெக்ஷ்மி., ஆசியா., சங்கரி., சசி., சௌந்தர்., அக்பர்., குமார்., விஜய்., ஹுசைனம்மா., ஆனந்தி..

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)