வெள்ளி, 12 நவம்பர், 2010

வெளிச்சம்..

கோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது.. கை அனிச்சைச் செயலாய் வணங்கியது..அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்..மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்..தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும் வந்து இருக்கிறார்களாம்.. பேத்தி மகளின் தலை தீபாவளிக்கு.. தலைமுறை தாண்டிய உறவுகள்..

ஜூன் மாதம் திருமணம். அடுத்த ஐந்து மாதங்களில் தீபாவளி. தாய்வீடு செல்லும் மகிழ்ச்சியோடு புகுந்த வீட்டினரை விட்டுச் செல்லும் சிறிய பிரிவுத்துயரும் இருந்தது. மாமியார் தாய்க்கும் மேலே அன்பு செலுத்துவதாலோ என்னவோ..

எப்போது எழுந்தாலும் எழுந்து கொள்ளும் முன்னரே மாமியார் எழுந்து சுறுசுறுப்பாய் வேலை செய்வது ஆச்சர்யம்தான் அவளுக்கு. எத்தனையோ முறை மு்யன்று விட்டாள். இந்த விஷயத்தில் மட்டும் வெல்ல முடியவில்லை. காபியைக் கலந்து கையில் கொடுக்கும் அன்பு வேறு. தன் பிள்ளைகளைப் போல நடத்துவதும்., எதையும் செய் என்று சொல்லாததுமான வித்யாசமான மாமியார்தான்.


மாமியார் சொல்லவில்லை என்பதால் எதுவும் செய்யாமலும் இருப்பதில்லை. அவளும் நன்கு சமைப்பாள். சில சமயம் கடலை எண்ணெய்க்குப் பதில் நல்லெண்ணையில் பூரி சுட்டது., வெறுமே வறுத்த உளுந்தமாவை கோதுமை மாவு என நினைத்து சப்பாத்திக்குப் பிசைந்து பின் அதை மச்சினன்கள் உதவியோடு முறுக்குக் கட்டையை ஆளுக்கு ஒரு பக்கம் முக்கி முக்கி முறுக்குப் பிழிந்தது என சிலதும் இருக்கு. ஊரிலிருந்து வந்த மாமியார் ஏன் இப்பிடிச் செய்தாய் என ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை.

பின் நன்கு சமைக்கக் கற்று மூன்று ஃப்ளேவர்களில் ஐஸ்க்ரீமும்., கட்லெட்டும்., சமோசாவும்., போட்டுக் கொடுத்து அனைவரின் பாராட்டையும் வாங்கி இருக்கிறாள். மச்சினன்கள்., நாத்தனார்தான் இந்த விஷயத்தில் சாப்பிட்டு ஊக்குவித்தவர்கள்.. கணவர் இதில் எதுவும் தலையிடுவதில்லை.

காலையில் மாமனார் எழுந்ததும் சிவ பூஜை செய்வார். ஒரு தாம்பாளத்தில் சிவன்., நந்தி., அம்பாள்., கோஷ்ட தெய்வங்கள் எல்லாம் பிரதிஷ்டை செய்து., பாலாபிஷேகம் செய்வார். கடைசியில் சங்காபிஷேகமும் நடக்கும். 108 சூடம் ஏற்றுவது., எல்லா தெய்வங்களின் பேரையும் கோலத்தில் எழுதி வணங்குவது., காக்கைக்குச் சோறிட்டபின் சனிக்கிழமைகளில் உண்பது., சாமி பாடல்களையும்., ஸ்தோத்திரங்களையும் சொல்வது என வீடே பக்தி மணத்தில்தான் மிதக்கும்.

இருந்தும் .” ஏம்மா ஷார்ட்ஹாண்ட் படிச்சே இல்லையா.. அதை முடிச்சு பரிட்சை எழுது. எம் ஏவை செகண்ட் இயரை கம்ப்ளீட் பண்ணு..” என ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். ஹ்ம்ம் சொல்ல இருக்கு ஏராளமா..

முதல் முதல் வீட்டுக்கு டிவியை கணவர் வாங்கி வந்ததும்., ஃப்ரிட்ஜ் வந்ததும் மாமியார் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

எப்போது ஊர் வந்தது எனத் தெரியவில்லை. விடிந்து இருந்தது. முதல் தீபாவளி என்பதால் ஒரே கும்மாளம்தான். மச்சினன்கள் மூவரும் மாப்பிள்ளையோடு வெடி வெடித்து ., புதுசு உடுத்தி., சினிமா பார்த்து ., அரட்டை அடித்து அமர்க்களப் படுத்தினார்கள்.

அம்மா., ஆயா., பாட்டி அனைவருக்கும் ஆச்சர்யம்தான். அவளுக்கு மாமியாரைப் பற்றிச் சொல்ல அநேகம் இருந்தது. ., அவர்கள் காது புளிக்கும் வரை புகழ் பாடிக் கொண்டிருந்தாள்...
*************************************************************

பல வருடம் ஆகி விட்டது. இந்த வருடம் தீபாவளி.. எப்படிப் பிள்ளைகளை வளர்த்தோம் என்றே தெரியவில்லை. கல்லூரிக்கு வந்துவிட்டான் சின்னவன்.. பெரியவன் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான்.

தம்பிகள் திருமணம் முடிந்து குழந்தை குட்டிகளோடு குடும்பஸ்தர்களாகி விட்டார்கள். நிறைய மாற்றம் வாழ்விலும். பிஸினஸ் செய்து நொடித்து மீண்டது.. பல ஊர்களுக்கும் ட்ரான்ஸ்ஃபர் நிமித்தம் சென்றது.. கற்றுக் கொடுத்த பையன்கள் பெரிய மனுஷன்களாகி அம்மாவுக்கு கணனி சொல்லித் தருவது என..

தோழிகளின் மகள்களுக்குத் திருமணமாகிக் கொண்டிருந்தது.. சிலர் பாட்டிகளாகவும் ஆகிவிட்டார்கள்.. சென்ற வாரம் ஒரு தோழி சொன்னாள்., " அம்மாவா அன்பு செலுத்துறது கஷ்டம் இல்லைடி.. மாமியார் அம்மா மாதிரி அன்பு செலுத்துறது ரொம்பக் கஷ்டம் என்று... என் மாமியாருக்கு நான் என்றால் ரொம்பப் பிடிக்கும்.. என் மருமகளையும் எனக்குப் பிடிக்குது... ஆனா சிலது சொல்லாம இருக்க முடியல.. சொன்னா பேசமாட்டேங்குறா.. கஷ்டமாருக்கு.. தப்பை சொல்லவே கூடாதுங்குறாங்களா இவங்க..

கேட்டேன்.” ஏண்டி.. நீ கல்யாணமான புதுசில எல்லாம் கரெக்ட்டாதான் செய்தியா.,” என்று.. “ என் பையன் .. எனக்குத் தெரியும். அவனுக்கு இதுதான் பிடிக்கும் என்று நீ நினைக்கிறாய்.. ஆனா அவங்க அம்மா., கத்துக் கொடுத்தது வேறு முறையில் இருக்கலாம்... விட்டுத்தான் பாரேன்.. ஒன்றிரண்டைக் கெடுக்கட்டும்.. பின் தானே கற்றுக் கொள்வாள்...” என்று.. ” நாமெல்லாம் டிகிரி படித்தும் என்ன வேலைக்கா போனோம்.. வீட்டில் இருந்தோம்.. எல்லாம் ஆர அமரக் கற்றுக் கொண்டோம்.. வேலைக்குப் போற அவ செய்து கொடுக்க நினைக்கிறதை அப்படியே விடு.. செய்து பழகட்டும்.. உன்னிடம் ஆலோசனை கேட்டா மட்டும் சொல்லு ..” என்றேன்..

ஆச்சு எனக்கும் ரெண்டு பசங்க் இருக்காங்க.. திருமணம் ஆகும்வரை எனக்கு அவர்கள் மீது இருக்கும் உரிமையை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். அதற்கு நானும் என் மாமியார் போல குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.. என இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்..

தீபாவளி பலகாரம் எல்லாம் செய்யணும்.. பசங்க ஹாஸ்டலில் இருந்து வர்றாங்க.. நண்பர்கள் கூட்டத்தோட கொட்டமடிக்க.. விடியத் துவங்கி இருந்தது.. வெளிச்சத்தில் எல்லாம் பளிச்சென்று இருந்தது மனசைப் போல..

டிஸ்கி :- இது நவம்பர் 7., 2010 திண்ணையில் தீபாவளி சிறுகதையாக வந்திருக்கிறது..

22 கருத்துகள்:

  1. பல துறைகளிலே கலந்து கட்டுறீங்க .. எப்படி வாழ்த்து சொல்லன்னு தெரியலை

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் வாழ்த்துக்கள் . அங்கும் படித்தேன் அன்றே

    பதிலளிநீக்கு
  3. //பல துறைகளிலே கலந்து கட்டுறீங்க .. எப்படி வாழ்த்து சொல்லன்னு தெரியலை//
    பலதுறைன்னா?


    வாழ்த்துக்கள்ங்க

    பதிலளிநீக்கு
  4. அழகான இயல்பான நடை

    அந்த மாமியார் கேரக்டர் அப்படியே என் மாமியார் மாதிரி:)

    பதிலளிநீக்கு
  5. வாசிச்சேன் தேனக்கா.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  6. திண்ணையில் இருந்து வெளிச்சத்தை பார்த்தேன், பிரகாசமாய் இருக்கிறது அக்கா!

    பதிலளிநீக்கு
  7. //வெளிச்சத்தில் எல்லாம் பளிச்சென்று//

    கதையும் ‘பளிச்’ தேனம்மை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. கதை நல்லா இருக்கு அக்கா!
    வாழ்த்துக்களும்.. :)

    பதிலளிநீக்கு
  9. இந்த "வெளிச்சத்தில்" உலகமே அழகாய்த் தெரிகிறது அக்கா :)
    வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  10. அருமை!
    அருமை!!
    அருமை!!!

    “ஆரண்ய நிவாஸ்”
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  11. நன்றி நசர்., கார்த்திக்., புவனா., சிநேகிதி., ராம்ஜி., இளா., சக்தி., அமைதிச்சாரல்., குமார்., ஹேமா., சை. கொ. ப., ராமலெக்ஷ்மி., வெறும்பய., சசி., பாலாஜி., பிரபு., அருணா., மாதேவி., ஆர் ஆர் ஆர்..

    பதிலளிநீக்கு
  12. நன்றி நசர்., கார்த்திக்., புவனா., சிநேகிதி., ராம்ஜி., இளா., சக்தி., அமைதிச்சாரல்., குமார்., ஹேமா., சை. கொ. ப., ராமலெக்ஷ்மி., வெறும்பய., சசி., பாலாஜி., பிரபு., அருணா., மாதேவி., ஆர் ஆர் ஆர்..

    பதிலளிநீக்கு
  13. நன்றி நசர்., கார்த்திக்., புவனா., சிநேகிதி., ராம்ஜி., இளா., சக்தி., அமைதிச்சாரல்., குமார்., ஹேமா., சை. கொ. ப., ராமலெக்ஷ்மி., வெறும்பய., சசி., பாலாஜி., பிரபு., அருணா., மாதேவி., ஆர் ஆர் ஆர்..

    பதிலளிநீக்கு
  14. நன்றி நசர்., கார்த்திக்., புவனா., சிநேகிதி., ராம்ஜி., இளா., சக்தி., அமைதிச்சாரல்., குமார்., ஹேமா., சை. கொ. ப., ராமலெக்ஷ்மி., வெறும்பய., சசி., பாலாஜி., பிரபு., அருணா., மாதேவி., ஆர் ஆர் ஆர்..

    பதிலளிநீக்கு
  15. நன்றி நசர்., கார்த்திக்., புவனா., சிநேகிதி., ராம்ஜி., இளா., சக்தி., அமைதிச்சாரல்., குமார்., ஹேமா., சை. கொ. ப., ராமலெக்ஷ்மி., வெறும்பய., சசி., பாலாஜி., பிரபு., அருணா., மாதேவி., ஆர் ஆர் ஆர்..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)