புதன், 27 அக்டோபர், 2010

காந்தி ஸ்டடி சென்டரில் குழந்தைகளின் அறிவியல் ., கைவினைப் பொருட்கள் கண்காட்சி..









ஒரு புக் ரிவ்யூக்காக காந்தி ஸ்டடி சென்டர் சென்றிருந்தேன்.. 28.0 2010 அன்று அங்கு தக்கர் பாபா வித்யாலயா ( வெங்கட்நாராயணா சாலை., தி. நகர்) வில் பயிலும் குழந்தைகள் நடத்தும் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்க இருக்கிறது..

இது குழந்தைகள் கைகளினாலேயே வடிவமைத்த அழைப்பிதழ்.. சென்று வாருங்கள் சென்னை மக்காஸ் .. குழந்தைகளோடு.. இன்னும் பகிர நிறைய இருக்கு ..

வாராவாரம் ஒரு புத்தக ரிவ்யூ. .. நேற்று கறுப்புவெள்ளை என்ற புத்தக விமர்சனம் .. ரொம்ப அருமையா இருந்தது.. I HAVE A DREAM என்று சொன்னவரின்... மார்டின் லூதர் கிங் ஜூனியரின் .. வாழ்க்கைச் சரிதம்.. எழுதியவர் பாலு சத்யா.. வெளியீடு கிழக்கு பதிப்பகம். விலை ரூ . 60.
விமர்சனம் செய்தவர் வெங்கட்ராமன்.. காந்தி ஸ்டடி சென்டரின் அண்ணாமலை அவர்களின் முகவுரையும் அருமை..

காந்தி ஸ்டடி சென்டரை நிறுவக் காரணமாயிருந்த திருமலை அவர்களின் புதல்வர் விப்ரு நாராயணனையும் அவர் சகோதரி சுபாஷிணியையும்.., திரு அண்ணாமலையையும் அவர் துணைவியாரையும் ., பாலு சத்யா ., மோகன்., வெங்கட்ராமன்., வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன்., எழுத்தாளரும் என் அன்புத் தோழியுமான மதுமிதா ராஜா., , மற்றும் இன்னும் பெரிய எழுத்தாளர்கள் ., விமர்சகர்கள் அனைவரையும் சந்தித்தேன்.. கற்றோர்கள் நிறைந்த சபை.. அதில் நானும் ஒரு துளியாய்.. .... ம்ம் நல்ல அவை.. ரகுபதி ராகவ ராஜாராம்..

டிஸ்கி :- ரொம்ப முக்கியமா சொல்ல விரும்புறது என்னன்னா.. என் கவிதைகளில் வரும் கருக்கள் அனைத்தும் கற்பனையே.. கண்டும் கேட்டும் பார்த்தும் எழுதுவது.. என் வாழ்க்கையில் இவ்வளவு சம்பவங்களும் நடக்க சான்ஸ் இருக்கா என்ன.. உங்கள் வாழ்க்கையைச் சுற்றி அநேகரின் வாழ்வும் இருக்கிறதே.. ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கே எவ்வளவு கதைகள்.. அதையெல்லாம் சிலர் பார்வையாளராக கடந்து சென்று விடுகிறார்கள்.. நான் பதிவு செய்கிறேன்.. எல்லாருக்கும் . மேலும் எல்லோரைச் சுற்றியும் காமம்., க்ரோதம்., வெறுப்பு., பகை., அன்பு., காதல்., என எவ்வளவு இருக்கு..
 
என் குடும்பம் நல்லதொரு குடும்பம் ..பல்கலைக் கழகம்.. எனவே என் கவிதைகளோடு என்னையும் இணைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என அர்ஜண்டாக சொல்ல விரும்புகிறேன்.. முக்கியமாக என் நலம் விரும்பிகளுக்கு.. நன்றி மக்காஸ்.. கவிதையை கவிதையா பாருங்கப்பா.. எழுத்தாளனின் சுதந்திரம் பறி போகாமல்.. அதை சோதனை செய்யாமல்..

13 கருத்துகள்:

  1. டிஸ்கியை வழிமொழிகிறேன்:)! படைப்புகள் படைப்புகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. கவிதையை கவிதையா பாருங்கப்பா.. எ்ழுத்தாளனின் சுதந்திரம் பறி போகாமல்.. அதை சோதனை செய்யாமல்..


    ......பழமொழிகளையும் கவிதைகளையும் சொன்னால், அனுபவிக்கணும். ஆராய கூடாது..... ஹா,ஹா,ஹா,ஹா....

    பதிலளிநீக்கு
  3. //கவிதையை கவிதையா பாருங்கப்பா.. //
    சரிக்கா.. செஞ்சுடுவோம் :)

    பதிலளிநீக்கு
  4. சில சமயங்களில் உங்க கவிதையி படித்து குழம்பியிருக்கிறேன்... இப்போது தெரிகிறது.. கண்டதும் கேட்டதும் தானென்று...

    பதிலளிநீக்கு
  5. சரி இனி அப்படி பார்க்க மாட்டோம்

    பதிலளிநீக்கு
  6. நன்றி என் அம்மு.. இந்தப் புரிதலுக்கு..:))

    Amudha தமிழ் அக்கா..,
    உனக்காகத் தான் நீ..
    அதை புரிந்து கொள்..
    உன்னைப் பற்றிய சுய விளக்கங்கள் உன்னைப் புரிந்தவர்களுக்கு தேவையில்லை..
    புரியாதவர்களுக்கோ அவசியமில்லை..

    பதிலளிநீக்கு
  7. நன்றி அம்மு., கீது., நந்தா.,கோகுல்., அபிஷேகவல்லி., ரெங்கா..

    Amudha தமிழ் இப்படி.., இவர்கள் சொல்றா மாதிரி போனா..,
    அம்புலிமாமா கதைகளை எல்லாம் குழந்தைகள் தான் எழுத வேண்டும்..
    மேலும் விக்ரமாதித்தனும் வேதாளமும் எந்த மனிதனின் உறவு..??
    யார் அவனிடம் தினமும் கதை கேட்டது...??
    பின் அதனை எழுத்தாய் வடித்தது..??
    ...
    படைப்பை படைப்பாக ..வெறும் படைப்பாக.. படைப்பாளியின் ஒரு பார்வையாக பார்க்கத் தெரியாதவர்கள் பற்றி நீ கவலைப் படாதே..
    பாவம் அவர்கள்..அவர்களது சிந்திக்கும் திறன் அவ்வளவுதான்..

    படைப்பிலக்கியம் ஒரு observation..
    அதன் பின் ஒரு உணர்தல்..
    அதன் பின் ஒரு எழுத்து என்ற வகையிலேயே வருகிறது..

    ஆம் சொந்தக் கதை எழுதவும் செய்வோம்..
    அவரவர்தம் சுய சரிதையில்..

    நீ சொன்னதுதான் சரி..
    ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்மணியை நான் சாமானியமாக கடந்து சென்று விடுகிறேன்..
    நீ அவளை கவனித்து.., உணர்ந்து ..பின் புரிந்து அதனை படைப்பிலக்கியமாக உருவாக்குகிறாய்..

    விடு அக்கா..எதையும் இப்படி கேட்க வேண்டும் என வரையறுத்து இவர்கள் கேட்பதில்லை..
    இவர்கள கொள்ளளவு இம்புட்டுத்தேன்..
    வருத்தப் படாதே டிஸ்கி போடுமளவுக்கு..

    பதிலளிநீக்கு
  8. டிஸ்கி!

    இது வழிமொழியக்கூட ஒன்று தான்! எனினும் இதை புரிய வைக்க வேண்டிய அவசியமென்ன அவசியமில்லாதவர்களுக்கு?

    வாசிப்பவன் யோசித்து விட்டு போற்றுவான்...
    தூற்ற வருபவனோ ஒவ்வொரு வரியை அலசி ஆராய்வான்... அது டைம் பாஸ்!

    அவ்வகையான விஷயங்களை மனதுக்கு எடுத்து செல்லாதீர்கள்.. நிச்சயம் எழுத்து சுதந்திரம் தடைபடும்...

    டிஸ்கி : இது என் தனிப்பட்ட கருத்து... தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  9. நன்றி யாதவன்., ராமலெக்ஷ்மி., சித்து., பாலாஜி., வெறும்பய.,
    சசி., அம்மு., சக்தி., ரசிகன்..

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வ்லிமை பெருகட்டும் !

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)