திங்கள், 4 அக்டோபர், 2010

பெயரெச்சம்..

லாரி முகப்புகளில்.,
விளம்பரப் பலகைகளில்.,
திரையரங்கு நிறுத்தங்களில்.,
ஊர் காட்டிகளில்.,
ஒளிந்து தெரியும் உன் பெயர்..

ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ.,
நகை அடகுக் கடையோ.,
உணவுக்கூடமோ.,
அணியாடை அகமோ
தேய்ந்தும் கரைந்தும்
மறைந்தும் பளிச்சிட்டும்...
சுருட்டைக் கேசமாய்
கருத்த எழுத்துக்களில் உன் பெயர்..


உன் பெயர் சொல்லிக் கூப்பிட்டு
யாரோ யாரையோ அழைக்கும்போதும்.,
தோளணைத்துச் செல்லும்போதும்.,
குழந்தைகளைக் கொஞ்சும்போதும்
காதுகளில் வழிகிறது தேன்...

பத்ரிக்கையிலோ.,
புகைப்படத்திலோ.,
தொலைக்காட்சியிலோ.,
உன் பெயர் கொண்டவரைப் பார்த்தால்
ஒரு சந்தோஷப்பூ மலர்கிறது..
கண்ணிலும்., மனசிலும்., இதழ்களிலும்..,
எதிர்பாராது உன்னையே கண்டதாய்..

உன் பெயர் பொறித்த இடங்கள்
சரித்திரக் கல்வெட்டுக்களாய்
மனதில் படிந்து..

தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
நிரவிக்கிடக்கும் உன்னை
நெருடிப்பார்க்கிறேன்...
நீ நனவா கனவா என்று..

டிஸ்கி:- இது அக்டோபர் 2 ம் தேதி சனிக்கிழமை திண்ணையில் வெளிவந்துள்ளது..

29 கருத்துகள்:

  1. கவிதை அருமை தேனம்மை. திண்ணையிலே வாசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கவிதையை, குறிப்பாக, விரவிப் பரவியிருந்த தமிழைப் படித்துக் களித்தேன். முதற்சொல்லைத் தவிர எல்லாமே நல்ல தமிழ்ச் சொற்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்குக்கா...வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  4. நன்றாக இருக்கிறதுங்க..... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பார்த்த இடத்தில் எல்லாம் உன்போல் பாவை தெரியுதடி என்ற பாரதி பாடல் நினைவு வருகிறது.கிரேட்.

    பதிலளிநீக்கு
  6. தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
    நிரவிக்கிடக்கும் உன்னை
    நெருடிப்பார்க்கிறேன்...
    நீ நனவா கனவா என்று..

    வாவ் அருமை மா

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை வாழ்த்துகள் தேனம்மை..

    பதிலளிநீக்கு
  8. அழகாய் இருக்கு தேனக்கா...பெயர் மச்சம்தான்...

    பதிலளிநீக்கு
  9. "தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
    நிரவிக்கிடக்கும் உன்னை
    நெருடிப்பார்க்கிறேன்...
    நீ நனவா கனவா என்று."

    .... இருக்கும்...இருக்கும்....
    இருக்கட்டும்....இருக்கட்டும்....
    கைல கட்டுபோட்டும் உங்க அலப்பரைக்கு
    ஒரு அளவில்லாமப் போச்சு...
    (பேரு தெரியுதாம்ல ...பேரு...
    பாவம் அந்தப் புண்ணியவான்)..

    பதிலளிநீக்கு
  10. "தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
    நிரவிக்கிடக்கும் உன்னை
    நெருடிப்பார்க்கிறேன்...
    நீ நனவா கனவா என்று."

    .... இருக்கும்...இருக்கும்....
    இருக்கட்டும்....இருக்கட்டும்....
    கைல கட்டுபோட்டும் உங்க அலப்பரைக்கு
    ஒரு அளவில்லாமப் போச்சு...
    (பேரு தெரியுதாம்ல ...பேரு...
    பாவம் அந்தப் புண்ணியவான்)..

    பதிலளிநீக்கு
  11. அக்காவின் டிரேட் மார்க் கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. பேர்ல என்ன இருக்கு பெரிசா அப்படின்னு சொல்லுவாங்க பெரியவங்க. பேர்ல இம்பூட்டு விஷயம் இருக்கா?

    பதிலளிநீக்கு
  13. விளையாடி இருக்கீங்க!

    வெவ்வேறு இடங்கள் மற்றும்
    வெவ்வேறு அடையாளங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து செதுக்கியிருக்கீங்க!

    ‘திரையரங்கு நிறுத்தம்’
    ‘அணியாடை அகம்’ - சூப்பர்!

    பதிலளிநீக்கு
  14. திண்ணையில் வாசிக்குபோதே ரசிச்சேன் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  15. உன் பேர் கேக்க ஆசைதான்.. அப்படிதான அக்கா :)

    பதிலளிநீக்கு
  16. அருமையான எண்ண வெளிப்பாடு.
    இழந்தவர்களுக்கு உரித்தான சோகமோ தெரியவில்லை. எனக்கு என் தம்பியின் பெயர் எல்லா இடத்திலும் கண்ணில் படும் தேன்.
    இந்தக் கவிதையில் என்னை உணர்ந்தேன்.
    வேறு பொருளில் எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  17. அக்கா....

    பெயரெச்சம்
    உங்கள் பெயர் சொல்லுது அருமை...

    பதிலளிநீக்கு
  18. நன்றி வினோ., ராமலெக்ஷ்மி., நேசன்., இப்னு ஹம்துன்., மேனகா., வெறும் பய., முத்து., சை கொ ப.,போகன்., சக்தி., ஆகாய மனிதன்., வெற்றி., கனி., ஆர் ஆர் ஆர்., ஹரி., விஜய்., கோபி., சுரேகா., ஹேமா., பாலாஜி., வல்லிசிம்ஹன்., சசி., வித்யா., செந்தில்., கனாக்காதலன்., குட்டிப் பையா.

    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)