சனி, 25 செப்டம்பர், 2010

சேமிப்பு..

குழந்தைகள் லேபிள்களையும்., சிகரட் அட்டைகளையும் ., வண்ணப் படங்களையும் ., தீப்பெட்டித் தாள்களையும்., ஸ்டிக்கர்களையும்., சேமிப்பதாய்..

பள்ளி செல்லும் வயதில் அது நாணயங்களாய்., ஸ்டாம்புகளாய் ., ஸ்கெட்சுகளாய்..

பருவ வயதில் ரெக்கார்ட் நோட்டுகளாய்., க்ரோஷாக்களாய்., எம்பிராய்டரிகளாய்.,


திருமணக்காலம் புகைப்படங்களாய்., சிடிக்களாய்., டிவிடிக்களாய்..

முற்றிவளர்ந்து பங்குப் பத்திரமாய்., ம்யூச்சுவல் ஃபண்டாய்., ஃபிக்ஸட் டெப்பாஸிட்களாய்.,

எல்லாம் வெறுத்த ஒரு நாளில்.. வலைத்தளமாய்., கேட்ஜெட்டுக்களாய்., விருதுகளாய்.,

விட்டு விடுதலையான பொழுதொன்றில் நட்புக்களாய்.. நட்பே உறவுகளாய்., உணர்வுகளாய்.. வாழ்வாய்..

பருவம் மாறி.. உருவம் மாறி... பழக்கம் மட்டும் மாறாமல்..

31 கருத்துகள்:

  1. சிகரெட்டை சேமிக்காமல் பெட்டிகளை சேமிக்கும் நல்ல பழக்கும் நன்றே

    ஆனாலும் வயதாக ஆக சிகரெட்டை மட்டுமல்ல சீக்ரெட்டுகளையும் சேமிக்க தொடங்கிவிடுங்கின்றார்களே ...

    நல்ல பார்வை ...

    பதிலளிநீக்கு
  2. நன்றாக இருக்கின்றது. சற்றேறக்குறைய எல்லாமே காகித சேமிப்புகளாகத்தான் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  3. சரியாய் சொன்னீங்க தேனம்மை ..அழகாகவும்

    பதிலளிநீக்கு
  4. எல்லாவற்றிலும் எண்ணங்களின் சேமிப்பே, நினைவுகளின் சேமிப்பே சுகம்.

    //"விட்டு விடுதலையான பொழுதொன்றில் நட்புக்களாய்.. நட்பே உறவுகளாய்., உணர்வுகளாய்.. வாழ்வாய்."//

    அருமை.

    பதிலளிநீக்கு
  5. எப்படி, இவ்ளோ சரளமாய் எழுதுகிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  6. இதைத் தான் எங்க இல்லத் தலைவர் "ஒரு சீசனுக்கு ஒண்ணை பிடிச்சுக்கிட்டு உயிரை வாங்கிறையே என்பார்."தற்பொழுது அவர் வசவில் விழுவது பதிவு .

    பதிலளிநீக்கு
  7. / விட்டு விடுதலையான பொழுதொன்றில் நட்புக்களாய்.. நட்பே உறவுகளாய்., உணர்வுகளாய்.. வாழ்வாய்..

    பருவம் மாறி.. உருவம் மாறி... பழக்கம் மட்டும் மாறாமல்.. /

    அழகு...

    இந்த பழக்கம் நல்லது தானே?

    பதிலளிநீக்கு
  8. //எல்லாம் வெறுத்த ஒரு நாளில்.. வலைத்தளமாய்., கேட்ஜெட்டுக்களாய்., விருதுகளாய்.,//


    அக்கா.. உண்மையில் சூப்பர்.... :-))

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கவிதையை கூட சேமித்து வைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. பருவத்தின் சேமிப்புகளை கவிவரியில் சொன்ன விதம் அழகு

    பதிலளிநீக்கு
  11. ஆம் கௌதமன்., நன்றி பத்மா., ஸ்ரீராம்., சை கொ ப.,ரூஃபினா( ஹாஹாஹா)., ஆசியா., வினோ., ஆனந்தி., கார்த்திக்., பிரபு., யாதவன்..

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!

    பதிலளிநீக்கு
  13. நினைவுகளில் நிறைய சேமித்து வச்சு இருக்கீங்க . அதத்தான் அழகா சொல்லி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  14. அக்கா...
    பருவம் அடைந்தும் பழக்கம் மாறாமல்...
    அருமை அக்கா...
    வரிகள் அனைத்தும் நாம் வாழ்ந்து வந்தவை... வாழ்ந்து கொண்டிருப்பவை...
    ரொம்ப நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  15. அன்பையும் நட்பையும் அதிகம் சேமிப்போம்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. //பழக்கம் மட்டும் மாறாமல்//

    அருமை தேனக்கா....

    பதிலளிநீக்கு
  17. ம்ம்ம்...பருவங்கள் மாறா சேமிக்கும் பொருட்களும் மாறும்.ஆனால் சேமித்தவை ஞாபகங்களைச் சேமித்து வைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. கவிதை மிக அருமை. இவை அத்தனையும் நானும் செய்திருக்கிறேன். செய்துகொண்டிருக்கிறேன் தோழி.

    பதிலளிநீக்கு
  19. எல்லாம் வெறுத்த ஒரு நாளில்.. வலைத்தளமாய்., கேட்ஜெட்டுக்களாய்., விருதுகளாய்.,

    விட்டு விடுதலையான பொழுதொன்றில் நட்புக்களாய்.. நட்பே உறவுகளாய்., உணர்வுகளாய்.. வாழ்வாய்..

    பருவம் மாறி.. உருவம் மாறி... பழக்கம் மட்டும் மாறாமல்..

    மாறிக்கொண்டேயிருக்கும் மனம் எனும் குரங்கு.....

    பதிலளிநீக்கு
  20. நல்லா இருக்கு அக்கா :)

    பதிலளிநீக்கு
  21. //எல்லாம் வெறுத்த ஒரு நாளில்.. வலைத்தளமாய்., கேட்ஜெட்டுக்களாய்., விருதுகளாய்.,
    // எல்லாம் என்பதினை இவை எல்லாம் என்று மாற்றிவிட்டு கவி படித்தால் இன்னும் நலமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  22. ஒரு பெரிய இடுகைக்கான சமாச்சாரம்

    பதிலளிநீக்கு
  23. பருவம் மாறி.. உருவம் மாறி... பழக்கம் மட்டும் மாறாமல்..

    ஒவ்வொன்றும் சரியான கலெக்‌ஷன்

    பதிலளிநீக்கு
  24. நன்றி புவனா., மகி., குமார்., சூர்யா., கனி., ஹேமா., விஜய்., தோழி., கண்ணகி., பாலாஜி., ஸாதிகா., ஜோதிஜி.,ரிஷபன்,, கமலேஷ்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)