செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்


ஒவ்வொரு முறையும் ஊர் செல்லும் சமயங்களில் சக்தியை புதுப்பித்துக் கொள்வதுபோல் பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் போவது வழக்கம்.. இந்தமுறை நெருங்கிய உறவின் திருமணம் என்பதால் சம்பந்தப்பட்ட சம்பந்தப்புரமும் செல்லவேண்டி சிறுகூடல் பட்டி விஜயம்.. சென்றபின்தான் தெரிந்தது .. பக்கத்திலேயே கவியரசர் இல்லம் இருப்பது... பார்வை நேரம் அல்ல என்பதால் உள் சென்று பார்க்க இயலவில்லை.. ஆனால் ஒரு கவிதை கருக்கொண்ட கனவு போல அந்த இல்லம் என்னை மயக்கியது... எப்பேர்ப்பட்ட வீச்சு அவருடையது .. ஆசுகவி..அறம் பாடினால் பலிக்கும். மகாகலைஞனின் இல்லம் தொட்ட காற்று என் உள்ளம் புகுந்து உருவேற்றியது.. இன்னும் இன்னும் சிறக்க எழுது ..முன்னேறு என்று.
சிறுகூடல் பட்டியில் இன்னுமொரு சிறப்பு அங்கு இருந்த லண்டன் செட்டியார் வீட்டினுள் இருந்த கர்னகை வாழ்வியல் ஓவியங்கள்..
கடல் கொண்டதால் காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இருந்து தெற்கே குடிபெயர்ந்த நகரத்தார் நீர் புகுந்து அழிக்க எட்டா உயரத்தில் .,சுமார் 6 அடி (பத்து பன்னிரெண்டு படிகள்) உயரத்தில் முழு வீட்டுக்கும் தளம் உயர்த்திக் கட்டிய எழில் மிகு வீடுகளை காணலாம்.. பர்மா மரத்தூண்கள்., தேக்கு மரச் சிற்பங்கள்., மரத்தளங்கள் .. கொண்ட இரண்டு கட்டு ., மூன்று கட்டு வீடுகள்..
இந்த வீடு இரட்டை வளவு கொண்ட.. இரட்டை முகப்பு ., பட்டாசாலை., ஆல்வீடு., பத்தி., வளவு., கீழ்வாசல் ., ரெண்டாம் கட்டு., போஜன் ஹால்., சமையற்கூடங்கள் மாடிகள்., மாடியறைகள்., சாமான் போடும் வீடுகள்., உக்கிராண அறைகள்., பூஜையறையகள் என பிரம்மாண்டமானது..

வீட்டுக்குள்ளேயே டூர் போய் வந்து ஜூஸ் ., சாக்லேட்டுகள்., பழங்கள் எல்லாம் உண்டு சிரம பரிகாரம் செய்து கொண்டு இந்த படங்கள் எல்லாம் எடுத்து வந்தேன் மக்காஸ் .. உங்களிடம் பகிர்ந்து கொள்ள..
 
கோவலன் .., கோவிலன் எனவும் ., கண்ணகி கர்னகை எனவும் இந்த ஓவியங்களில் குறிப்பிடப் படுகிறார்... இன்னும் நிறைய ஓவியங்கள் இருந்தன.. நமக்கு சரித்திரம் தெரியாததால் எடுக்கவில்லை..







இதில் கோவிலன் கர்னகை திருமணம் முதல் கர்னகை பாண்டியனிடம் நீதி கேட்பது வரை இருக்கிறது.. பாண்டியமன்னனின் முகத்தில் இருக்கும் அலட்சியத்தன்மையும் ., கர்னகையின் சீற்றமும் என்னை வியக்க வைத்தது..

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.




25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


26 கருத்துகள்:

  1. ஒரு நல்ல வாய்ப்பை பயன்படுத்த தவற வீட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. கவிஞர்களுக்கு கண்ணதாசன் வீடு ஒரு புண்ணிய ஷேத்திரம் உள்ளே போய் பார்க்க முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான். ஏனென்றால் எங்களுக்கு கவியரசின் இல்லம் பற்றி ஒரு கவிஞ்ரின் பார்வையில் ஒரு அழகான பதிவு கிடைத்திருக்கும்.. இருந்தாலும் லண்டன் செட்டியார் வீடு பற்றிய குறிப்பு மிகவும் அபூர்வமானவை ..அடுத்த முறை காரைக்குடி வரும் போது பார்க்க வேண்டும்.. குறித்து வைத்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. ஓவியத்தின படங்கள் அருமை; கோவிலன் - கர்னகை - புது செய்தி!!

    பதிலளிநீக்கு
  4. திருவாவினன்குடி (பழனி) மண்டலத்தை ஆண்ட பேகன்தான் கோவலன் என்றொரு கருத்து உண்டு. மூவேந்தர்கள் பாரியை வென்ற காலத்து, இவனுக்கும் நெருக்கடி தோன்றியிருக்கக் கூடும். வணிகனாகத் தலைமறைவு வாழ்க்கையிற்பட்டு, புகாரில் வாழ்ந்திருக்க வேண்டும். கோவிலன் என்னும் பெயர், இப் பின்னணியில், எனக்கு வியப்பைத் தோற்றுவிக்கிறது.

    வேந்தர் குல இளங்கோ, கோ அல்லாத கோவிலன் கதையைக் காவியமாக்கிய காலத்து, சிலபல புனைவுகளும் கூட்டித்தான் இயற்றியிருப்பார்.

    பட்டினம் பெயர்ந்து செட்டிநாடு சேர்ந்தாரின் வரலாற்று நூல் ஒன்றை, 'வானதி' பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளதாகத் தகவல். வாங்கி வாசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஓவியத்தின படங்கள் அருமை; கோவிலன் - கர்னகை - புது செய்தி!!

    பகிர்வுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் தகவலும் நேரில் சென்று பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  7. //சரித்திரம் தெரியாததால்
    எடுக்கவில்லை//

    நம்பிட்டேன்

    பதிலளிநீக்கு
  8. அக்கா.. படங்களுடன்.. சொன்ன விசயமும் சூப்பர்..
    நல்ல பகிர்வு.. :-))

    பதிலளிநீக்கு
  9. அருமை.பகிர்வுக்கு நன்றி.சென்னையில் இருந்து எங்கள் ஊருக்கு செல்லும் பொழுது காரைக்குடிக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டும்.பெரிய,பெரிய அரண்மனை போல் தோற்றம் அளிக்கும் வீடுகள்,அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு,பல வீடுகள் பராமரிப்பின்றி,உள்ளே நுழைந்து பார்க்கும் ஆவல் எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு

    நிறைய தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  11. அழகான படங்கள்... கவியரசரின் வீடு பார்க்க பேறு செய்து இருக்கீங்க போல இருக்கு

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு.. எனக்கு புதிய தகவல்.. போய்ப் பார்க்க தூண்டியது.. உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  13. நன்றி பல.
    தங்கள் உணர்வின் வெளிப்பாடு என்னையும் போய்ப் பார்க்க தூண்டுகிறது !

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு அக்கா...

    எனது நீண்ட நாள் ஆசை இது.....ஒருமுறை சிறுகூடல் பட்டிக்கு போகனும்....

    பதிலளிநீக்கு
  15. நன்றி ஜோதிஜி., சை கொ ப ., வெறும்பய., வெற்றி., ஹுஸைனம்மா., ராஜசுந்தரராஜன்., குமார், சசி., கார்த்திக்., ரமேஷ்., ஜெரி., மேனகா., சுந்தரா., நசர்....(!!), ஜெய்., ஆனந்தி., ஸாதிகா., வேலு., அஹமத்., தங்கமணி., ரிஷபன்., பச்சைமுத்து., செந்தில்

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  17. அன்பிற்கினிய தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு..


    காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்! தாங்கள் எழுதிய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரை படித்தேன்.

    ஒரு பொதுவான தலைப்பில் கட்டுரையைக் கேட்டிருந்தது ஏன் தெரியுமா? இப்படி கவியரசர் பற்றிய அரிய பல தகவல்களை.. கருத்துக் கருவூலங்களைப் பெற்றிட வேண்டுமென்கிற விழைவே!


    எனவே எனது எண்ணத்தை வெற்றிபெறச் செய்த உங்கள் கட்டுரைக்கு நன்றி! அரிய பல செய்திகளின் தொகுப்பாய் அணிவகுத்திருந்த கவிஞரின் ஆரம்ப கால அனுபவங்கள் அவரைச் செப்பனிட்டு.. செதுக்கி மாபெரும் புகழுக்கு உரியவராக உயர்வுபெற வைத்தது என்கிற உங்கள் முத்திரை அற்புதம்!


    கவியரசரின் சிறுகூடற்பட்டி இல்லத்திற்குள் நுழைந்தபோது வந்த காற்று தந்த உணர்வுபற்றி படிக்கும்போதே.. என்னுள்ளத்தில் ஆழமான பதிவுகள் அலைமோதின! நன்றி.. தேனம்மை..


    என்றும் அன்புடன்..


    காவிரிமைந்தன்

    பதிலளிநீக்கு
  18. அரிய படங்கள்,
    அருமையான தகவல்கள்,
    சிறப்பான பதிவு.
    வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)