திங்கள், 5 ஜூலை, 2010

டாக்டர் கல்லாறு சதீஷ்






தமிழன் என்று சொல்லடா., தலை நிமிர்ந்து நில்லடா.. என்ற வார்த்தை நம் அன்பு நண்பர் கல்லாறு சதீஷுக்கு ரொம்பப் பொருந்தும்..

மொழிக்காக விழியிழந்தவர் தெரியும்... மொழிக்காக பதினெட்டு வயதில் முள்முடி சுமந்தவர் நம் சதீஷ்... அருள்ராசா நாகேஸ்வரன்.. என்ற சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழர்.. இவர் நம்மிடம் பேசப் பேச.. இ்னிமையும்.. நல்லெண்ணங்களும் பொங்குவது இயல்பு.. நேர்மறை எண்ணங்களுக்குச் சொந்தக்காரர்..

செம்மொழி மாநாட்டி்ல் கடல் கடந்த தமிழர்களின் இருப்பும் வாழ்வும் பற்றிப் பேச இந்திய அரசின் விருந்தினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறப்புக்கு உரியவர்.. உங்கள் படைப்புகள் உங்கள் முகவரியாக இ்ருந்து உங்கள் புகழ் பரப்பி இங்கு வர காரணமாக அமைந்தது என வைரமுத்து அவர்களால் பாராட்டப்பட்டவர்..
ஒரு செம்மொழி மாநாடு தமிழர்களுக்காக., தமிழ்நாட்டில் நடத்தப்படும் போது தங்களுடைய கருத்துக்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு... பங்கேற்றவர் சதீஷ்..
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு., எதிரிகள் என யாரையும் உருவாக்கிக் கொள்ளாமல் எல்லோருடனும் கைகோர்த்துச் செல்லும் நேயம்.. புன்முறுவல்.. பொறுமை.. என இவரிடம் நான் வியந்த பண்புகள் ஏராளம்..

கலைஞரும்., மற்ற கவிஞர்களும்., தமிழின் பெருமக்களும் சூழ்ந்த சபையில் கடல் கடந்த தமிழர்கள் பற்றி மட்டுமல்ல.. கரை கடக்க முடியாத தமிழர்களின் நலம் பற்றியும் அவர்களின் வாழ்வு., இருப்பு ., சுதந்திரம் பற்றியும் எடுத்துச்சொல்லிக் கோரிக்கை விடுத்துள்ளார்..

இரண்டாவது கோரிக்கை. உலகத் தமிழர்களுக்காக ஒரு செம்மொழி மையம் அமைய வேண்டும் என்பது.. இரண்டு கோரிக்கைகளுக்கும் கலைஞர் செவி மடுத்து ஆவன செய்வதாகக் கூறியது மிகுந்த நிறைவளித்ததாகக் கூறுகிறார்..

மதுரையில் விரைவில் செம்மொழி மையம் அமைக்கப்படும் எனக் கலைஞர் உறுதி அளித்ததாகக் கூறி மகிழ்வடைந்தார்.. தமிழ் மொழியால் ஒன்றான நாம். நம் தமிழ்பற்றை.. நம் தாய் நமக்களித்த மொழி்யை.. தமிழ்த்தாயை..மாலை சூட்டி வணங்கவே தாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றதாகக் கூறினார்..

புலம் பெயர்ந்த போது அங்கு உள்செல்லவும் வசிக்கவும் வாழ்வாதாரம் தேடவும் மிகுந்த சிரமத்துக்குள்ளான போதும் தம் மக்கள் தம் தாய்மொழியில் பயிலவும்.. நம் பண்பாடு மறக்காமலிருக்கவும் எடுத்துவரும் பெருமுயற்சிகளையெல்லாம் பகிர்ந்தார் .. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த போது தாம் வசித்து வந்த நாட்டினரே தம்மை வாழ்த்தி வழினுப்பியது தம் தமிழுக்கும் மொழிப்பற்றுக்கும் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறார்..

எதிர்க்கருத்துக்கள் இ்ருக்கலாம் . ஆனால் நல்லகருத்துக்களையே கைக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உடையவர்.. இவரின் பனிப்பாறைகளும் சுடுகின்றன., மற்றும் சொர்க்கங்களும் தண்டிக்கின்றன... என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் திரு வைரமுத்துவால் வெளியிடப் பட்டிருக்கின்றன..

டிஸ்கவரி புக் பேலஸில் சிங்கை வாழ் தமிழர் அன்பு சகோதரர் கோபால் கண்ணன் (மனவிழி சத்ரியன்)., அன்பு நண்பர் விகடன் பொன் . காசிராஜன்.,
அன்பு நண்பர் கல்லாறு சதீஷ் மற்றும் அன்பு சகோதரர் வேடியப்பனும் கலந்து உரையாடியது.மிக இனி்மை.. தமிழுக்கும் அமுதென்று பேர்.. உண்மைதான்.. உயரியவர்களோடு உரையாடினால்..

Lankasri.com ல் நீங்கள் அன்பு நண்பர் கல்லாறு சதீஷின் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் பெறவும்., காப்புறுத்தித் திட்டங்களில் முதலீட்டு ஆலோசகராகராகவும் விளங்குவதைக் காண முடியும்..

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியிலும் இவரின் பேட்டி ஒளிபரப்பாகியது.. தினத்தந்தியிலும் செம்மொழி மாநாட்டில் இவரின் உரை வெளியாகியுள்ளது.

நல்ல எண்ணங்கள் நல்ல எண்ணமுடையோரை ஒன்று சேர்க்கின்றன..
நிச்சயம் விளைவுகளும் நல்லவையாய் அமையும்..

27 கருத்துகள்:

  1. பகிர்ந்தமைக்கு மிகுந்த nandrikal

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம் :)

    உயரங்கள் வசீகரிக்கின்றன

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. /////Lankasri.com ல் நீங்கள் அன்பு நண்பர் கல்லாறு சதீஷின் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் பெறவும்., காப்புறுத்தித் திட்டங்களில் முதலீட்டு ஆலோசகராகராகவும் விளங்குவதைக் காண முடியும்..//

    பயனுள்ள ஒரு தகவல்தான் . பகிர்வுக்கு நன்றி . நண்பருக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. அட காந்த கண்ணழகன் சத்ரியன் இருக்காரு !!!

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி . நண்பருக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  6. சதீஷ்...!!!!!!!!

    பகிர்வுக்கு நன்றி தேனக்கா..படம் பார்த்தேன்...

    பதிலளிநீக்கு
  7. படங்களும் தொகுப்பும் நல்லா இருக்குது, அக்கா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தமிழை அழகு படுத்தும் மனிதர்கள் இவர்கள்.வாழ்த்துகள்.
    நன்றி தேனக்கா.

    பதிலளிநீக்கு
  9. Nice Info on a nice person Kallaru Sathish-thenammai.we still have people united in Tamil-nice.Varutham,karaikadakka mudiyaatha tamilarhal.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பகிர்வு தோழி..இதை போன்ற மனிதர்களை சந்தப்பதே ஒரு வரம்தான் இல்லையா..

    பதிலளிநீக்கு
  11. சந்திப்பு... தித்திப்பு
    மாம்ஸ் ஏன் இவ்வளவு கருத்துட்டாரு (சத்திரியன்)

    பதிலளிநீக்கு
  12. இந்த கமெண்ட்ஸை வெளியிட்டால் ப்லாக்கர் எர்ரர் என வருகிறது . யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா. எனவே சில கமெண்ட்ஸை நானே வெளியிடுகிறேன்..
    show details 7:34 AM (10 hours ago
    கமலேஷ் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    அருமையான பகிர்வு தோழி..இதை போன்ற மனிதர்களை சந்தப்பதே ஒரு வரம்தான் இல்லையா..

    பதிலளிநீக்கு
  13. Jayaraj உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பிடிவாதமும் பிடிமானமும்":

    The poem brings out
    Unspoken pains
    And
    Hideen tears

    Out of many suffering hearts

    பதிலளிநீக்கு
  14. சி. கருணாகரசு உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    சந்திப்பு... தித்திப்பு
    மாம்ஸ் ஏன் இவ்வளவு கருத்துட்டாரு (சத்திரியன்)

    பதிலளிநீக்கு
  15. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    /////Lankasri.com ல் நீங்கள் அன்பு நண்பர் கல்லாறு சதீஷின் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் பெறவும்., காப்புறுத்தித் திட்டங்களில் முதலீட்டு ஆலோசகராகராகவும் விளங்குவதைக் காண முடியும்..//

    பயனுள்ள ஒரு தகவல்தான் . பகிர்வுக்கு நன்றி . நண்பருக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  16. விஜய் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    அட காந்த கண்ணழகன் சத்ரியன் இருக்காரு !!!

    பதிலளிநீக்கு
  17. அக்பர் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    பகிர்வுக்கு நன்றி தேனக்கா

    பதிலளிநீக்கு
  18. ராம்ஜி_யாஹூ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    பகிர்ந்தமைக்கு மிகுந்த nandrikal

    பதிலளிநீக்கு
  19. நேசமித்ரன் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    ம்ம்ம் :)

    உயரங்கள் வசீகரிக்கின்றன

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. சே.குமார் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    பகிர்வுக்கு நன்றி . நண்பருக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  21. seemangani உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டாக்டர் கல்லாறு சதீஷ்":

    சதீஷ்...!!!!!!!!

    பகிர்வுக்கு நன்றி தேனக்கா..படம் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
  22. படத்துடன் உங்கள் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  23. ஒரு சிறு சந்திப்பு,உள்ளத்துள்ளுறையும் பதிவாய் உருவானதில் மகிழ்ச்சி.
    இனிய நண்பர் பொன்.காசிக்கு நன்றி.பதிந்த நெஞ்சுக்கினிய சகோதரி தேனம்மைக்கு நன்றி.
    இனியவர்கள் வேடியப்பன்,சத்திரியனுக்கும் நன்றி.

    பதிவுக்கு பதில் செய்த பண்பாளப் பெரு மக்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

    கனிந்த அன்புடன்
    கல்லாறு சதீஷ்
    www.kallarusatheesh.blogspot.com

    பதிலளிநீக்கு
  24. அனுபவம் நிறைந்த பதிவு அக்கா

    வாழ்த்துக்கள் டாக்டர் கல்லாறு சதீஷ்...

    பதிலளிநீக்கு
  25. நன்றி ராம்ஜி., நேசன்.,சங்கர்., விஜய்., குமார்., அக்பர்.,கனி., சித்து., ஹேமா.,முனியப்பன்சார்., கமலேஷ்., கருணாகரசு.,ஜெயராஜ்.,ஸாதிகா.,கல்லாறு சதீஷ்.,செந்தில் குமார்

    பதிலளிநீக்கு
  26. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)