வெள்ளி, 4 ஜூன், 2010

மீள் குடியேற்றம்

மீனெடுத்துத் தேனெடுத்துக்
காடுவெட்டிக் கழனிசெய்து.,
தோளணைத்து., தோள்கொடுத்து.,
வாகை சூடி., விளையாடி.,
வாழ்ந்து வந்தோம் யாம்
பிறந்ததென்று நம்பிய மண்ணில் ..

உயிரோடும் கொல்கின்றீர்..
உயிரற்றும் கொல்கின்றீர்..
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
முள்ளிவாய்க்காலிலும் தொடர..
கௌரவமாய்ச் சாவதற்கும்
கொடுப்பினையில்லை எமக்கு..


தூணுடைப்பு ., வீடிடிப்பு
துயிலும் இடமும் இடிப்பு..
கண்ணிவெடி காலில் பட்டு
உடல் தெறிப்பு..
கைம்பெண்கள் கண்ணீரால்
சூழப்பட்டது எம் தேசம்..

பாலுக்கும் கூழுக்கும்
படைக்காரர் அனுமதிப்பு..
பாலியல் தொழிலுக்கு
பகடைக்காயாய்............
மிக இழப்பு..............

பன்னாட்டு வலைவிரிப்பு..
படை நிறுத்த.. குடி கெடுக்க..
படைத்தவனே நினைத்தாலும்
பாழ் பாழ்தான்...........
பரிதவிப்பு...............

புத்தன் நிறைந்த தேசம்..
பூக்காடாய் மலர்ந்த தேசம்..
சைத்தியங்கள் உட்புகுந்து
சாக்காடாய் ஆனதம்மா...

நீங்கள் இருந்த இடம்
உம் உரிமை மண்டோதரி..
நாங்கள் இருந்த இடம்
சீதையின் அசோகவனம்..

எதெதையும் நீங்கள்
உடைக்கவில்லை
பரப்புகின்றீர்..

எம்மேல் மீள்குடியேறி
எமையேதான் கண்டடைவீர்..
உருமாற்றமாய்..

வேரோடிக் கிடக்கின்றோம்..
வேர்பிடித்து வெளிவருவோம்..

மாவீரர்கள் சேர்ந்து
அறவழியில் போராடி
ஒருநூறு நாயகன்கள்
ஒன்றாகக் கிளர்ந்தெழுவர்..
மீள்குடியேறீகளே..
மீண்டும் எம்மை தரிசிப்பீர்..

டிஸ்கி:_ மே 17 மாவீரர் தினத்துக்காக எழுதப்
பட்டது .. அந்த சமயம் இரு நாட்கள் மின் தடை..
எனவே மிக மிகத் தாமதமாய் வெளியிட்டுள்ளேன்

20 கருத்துகள்:

  1. கண்ணீர வர வைத்துவிட்டீர்கள்..இது சாதாரண கவிதையல்ல..

    பதிலளிநீக்கு
  2. //வேரோடிக் கிடக்கின்றோம்..
    வேர்பிடித்து வெளிவருவோம்..//

    தேனக்கா,

    நடந்தேதீரும். தாமதமான வெளியீடு என்றாலும் பசுமையாகவே இருக்கிறது கவிதையின் உள்ளடக்கம்!

    பதிலளிநீக்கு
  3. உயிரோடும் கொல்கின்றீர்..
    உயிரற்றும் கொல்கின்றீர்..
    கொள்ளிவாய்ப் பிசாசுகள்
    முள்ளிவாய்க்காலிலும் தொடர..
    கௌரவமாய்ச் சாவதற்கும்
    கொடுப்பினையில்லை எமக்கு..]]

    அந்த வேதனை நிகழ்வினை படம் பிடித்து காட்டுகின்றன :(

    பதிலளிநீக்கு
  4. அபாரம் தேனக்கா. வார்த்தைகள் அனாயசமாக வந்து விழுகின்றன.

    மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. புத்தன் நிறைந்த தேசம்..
    பூக்காடாய் மலர்ந்த தேசம்..
    சைத்தியங்கள் உட்புகுந்து
    சாக்காடாய் ஆனதம்மா...

    ம்..ம்.. என்ன சொல்ல..இதற்கு மேல்.

    பதிலளிநீக்கு
  6. ஆகா , சீரியஸ் மேட்டார் ஒன்னும் பண்ணமுடியாது , நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான கவிதை

    உங்கள் வரிசைகளில் இதுவும் ஒரு மைல்கல்

    பதிலளிநீக்கு
  8. /////புத்தன் நிறைந்த தேசம்..
    பூக்காடாய் மலர்ந்த தேசம்..
    சைத்தியங்கள் உட்புகுந்து
    சாக்காடாய் ஆனதம்மா...
    ////////

    என்னை முகவும் கவர்ந்த வரிகள் . மிகவும் சிறப்பாக எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. மாவீரர்கள் சேர்ந்து
    அறவழியில் போராடி
    ஒருநூறு நாயகன்கள்
    ஒன்றாகக் கிளர்ந்தெழுவர்..



    நம்பிக்கை, எம்மை கைவிடாது.

    பதிலளிநீக்கு
  10. //புத்தன் நிறைந்த தேசம்..
    பூக்காடாய் மலர்ந்த தேசம்..
    சைத்தியங்கள் உட்புகுந்து
    சாக்காடாய் ஆனதம்மா...//

    சத்திய வார்த்தைகள் தேனக்கா.. அடிமனசு உணர்வுகளை உருக்கி ஊனுள் புகுந்து உயிர் தொடுத்து கவிதை...வாழ்த்துகள் ...

    பதிலளிநீக்கு
  11. பாலுக்கும் கூழுக்கும்
    படைக்காரர் அனுமதிப்பு..
    பாலியல் தொழிலுக்கு
    பகடைக்காயாய்............
    மிக இழப்பு..............//

    அருமை..

    பதிலளிநீக்கு
  12. உணர்வுகளுக்கு கவிதை மரியாதை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. //புத்தன் நிறைந்த தேசம்..
    பூக்காடாய் மலர்ந்த தேசம்..
    சைத்தியங்கள் உட்புகுந்து
    சாக்காடாய் ஆனதம்மா//

    கண்ணதாசன் எழுதியது மாதிரி இருந்தது..அந்த மாதிரி வார்த்தைப்பிரயோகம்..

    ஒரு திருத்தம்.. நவம்பர் 27 தான் மாவீரர் தினம்..மே 17- முள்ளிவாயக்கால் கோரப்படுகொலையின் நினைவுதினம்..

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் எழுதிய போன கவிதைக்கு இக்கவிதையின் மூலம் பிராயசித்தம் தேடிவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  15. கொட்டிக் கொந்தளிக்கும் இன உணர்வின் வெளிப்பாடு..... நெற்று வெளியிட்டிருக்கலாம்..
    பரவாயில்லை.... மிக அருமை..என்ன...ப்ராயச்சித்தமா தேனம்மை..?

    பதிலளிநீக்கு
  16. நன்றி வேல்தர்மா.,சத்ரியன்.,ஜமால். , சரவணா., ரிஷபன்., மங்குனி அமைச்சர்., வேலு., ஜெய்லானி.,பனிதுளி சங்கர்., கனி.,ரமேஷ், ஆறுமுகம் முருகேசன்.,மதுரை சரவணன்., சின்னப் பயல்.,வெற்றி வேல் சார் (உண்மை)., விஜய்., அரவிந்த., முனியப்பன் சார்

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)