செவ்வாய், 27 ஏப்ரல், 2010

யாளியும் ட்ராகனும்

பார்த்தால்தானா.....
நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...

சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...

கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..


குளமா., வாய்க்காலா., கிணறா.,
ஆறா., ஏரியா., கடலா...
அடங்காத எல்லைப் போராட்டம்...

நீரடைத்த மேகங்களில்
புஷ்பகவிமானம்.....
கந்தர்வனும் யட்சியும்
மின்னலும் இடியுமாய் விளையாடி..

கொடியாய் சரமாய்
பூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்

29 கருத்துகள்:

  1. "கொடியாய் சரமாய்
    பூமியில் செலுத்த...
    பச்சைமண் சூல்கொள்ள
    பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்"

    சிறப்பான வரிகள் கலக்குங்க

    பதிலளிநீக்கு
  2. கவிதையில் உள்ள வார்த்தை உபயோகிப்பு மிகவும் அழகு தேன்...3 முறை படித்து விட்டேன்..:)

    ஆனால் கவிதையில் உள்ள பல வார்த்தைகள் எனக்கு புரியவில்லை...யாளி, யட்சி...இதெல்லாம் என்ன?...:)

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தேனம்மை

    வாழ்த்துகள்

    தொடர்க !

    அறிதலுக்கும் அறிவித்தலுக்குமான இடைவெளிப் பொழுதில் ஜீவ மரணப் போராட்டம் ....தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தது மட்டும் அல்ல கோணங்கியின் வெளி அதையும் கடந்தது

    :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல இருக்குங்க. ஆனால் என்ன அர்த்தம்னு சரியாய் புரியல

    பதிலளிநீக்கு
  5. சொற்கள் அழகாய் வந்து விழுகின்றன..

    பதிலளிநீக்கு
  6. எனக்கு புரியல, இன்னோர்வாட்டி
    படிச்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அக்கா, ட்ரிப் முடிந்து திரும்ப அசத்த வந்திட்டீங்க.
    :-)

    பதிலளிநீக்கு
  8. நல்லா இருக்கு அக்கா கவிதை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. யட்சிதாங்க புரியல ஒரு வேளை மேகமோ ? மற்ற படி கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
  10. நல்லாயிருக்கு அக்கா :)
    welcome back :)

    பதிலளிநீக்கு
  11. \\கொடியாய் சரமாய்
    பூமியில் செலுத்த...
    பச்சைமண் சூல்கொள்ள
    பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்\\
    அருமையா வந்திருக்கு தேனம்மை.

    பதிலளிநீக்கு
  12. நல்லாயிருக்கு அக்கா. எனக்கும் சில வார்த்தைகள் புரியலை.

    பதிலளிநீக்கு
  13. கவிதை ராட்சஷி Returns

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  14. கவிதையில் உங்களுக்கு என்று ஒரு தனி முத்திரை!

    பதிலளிநீக்கு
  15. //சாம்பற் பூத்த யாளி
    கோயில் இருட்டு மூலையில்..,
    செந்தீயுமிழும் ட்ராகன்
    வளைவு நெளிவுகளுடன்...//

    மனதை கலவரபடுத்தும் கலரான கவிதை...சுபெர்ர்ர்...தேனக்கா....

    பதிலளிநீக்கு
  16. தேனு சுகமா.விடுமுறை முடித்து வந்து அசத்துறீங்க.கடைசிப் பந்தி மட்டும் நல்லா விளங்கிடிச்சு !

    பதிலளிநீக்கு
  17. நன்றீ அரும்பாவூர்

    நன்றி வாணி

    பதிலளிநீக்கு
  18. நன்றீ சசிகுமார்

    நன்றி ஜெய்லானி

    யட்சி காந்தர்வப் பெண் போல ...அதிக சக்தி...

    பதிலளிநீக்கு
  19. நன்றீ சீமான்கனி

    வாணி சாந்தி சொன்னதுதான்..யாளி யானைகளையும் விழுங்கும்...யட்சி யாரை விழுங்குவாளோ என விஜயகுமார் சொன்னார் ...(சிற்பங்கள் பற்றீ எழுதும் விஜயகுமார்)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)