திங்கள், 29 மார்ச், 2010

காரைக்குடியில் கம்பன் விழா

கம்பன் வாழ்க..!
கம்பன் புகழ் வாழ்க ..!!
கன்னித் தமிழ் வாழ்க..!!!

இந்த ஓங்கிய குரலுக்குச் சொந்தக்காரர் கம்பன்
அடிப்பொடி சா .கணேசன் செட்டியார் அவர்கள்...

தமிழை ஊனாய் உயிராய் உணர்வாய் உணவாய்க்
கருதும் எவரும் கம்பனில் தோயாதவரல்லர்..
காரைக்குடியில் 72 ஆவது கம்பன் விழா கடந்த
சனிக்கிழமை ஆரம்பித்தது.. மகத் திருநாளில்..
கவிக்கோ அவர்களின் தலைமையில்...
நேற்று பூரத்திருநாளில் ”கம்பனில் கணியன்” என்று
திரு சோ. சத்தியசீலன் அவர்களின் உரையும்.,

இன்று உத்தர நாளில் இளம்பிறை மணிமாறன்
தலைமையில் பட்டிமண்டபமும்., நாளை பங்குனி
அத்தத் திருநாளில் நாட்டரசன் கோட்டையில்
கம்பன் அருட்கோவிலில் திரு அறிவொளி தலை
மையில் வழிபாடுடனும் விழா நிறைவு பெறும்...
அறங்காவலர்கள் சக்தி திருநாவுக்கரசு.,கம்பன் அடி
சூடி திரு பழ. பழனியப்பன்.,நா. மெய்யப்பன்.,அனை
வரும் இத்துணை வருடங்களாக விழாவை
சிறப்பாக நடத்தி வருகிறார்கள்..
காரைக்குடியில் உள்ளது கம்பன் தாய்க்கழகம்...
புதுச்சேரி .,மதுரை., அருப்புக்கோட்டையிலும் இதன்
சேய்க்கழகங்கள் இருக்கின்றன..
ஒலித்தாய்” ”வரித்தாய்” என எழுதப்பட்டு இருக்
கிறது. கம்பன் கற்பக கல்விக்கூடத்தில்..தமிழை
நேசித்தும் சுவாசித்தும் வாழ்பவர்கள் இருக்கும்
இடம் அது..

திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் இறை
வணக்கத்துடன் ஆரம்பித்தது நிகழ்ச்சி ,. அடுத்து
திருமதி ராதா ஜானகிராமனின் மலர் வணக்கம்..
பின் கம்பன் கற்பகக் குழந்தைகளின் கம்பன் அடிப்
பொடி அஞ்சலி..
கம்பன் அடி சூடி திரு பழ பழனியப்பன் அவர்களின்
வரவேற்பு உரை தமிழ்த்தேனாய் ஒலித்தது..
இன்சொல் தமிழர் உரிமை என்றாலும் அன்று நமது
உரையில் கவிக்கோவிற்கு கிடைத்த வக்ஃபு வாரி
யத் தலைவர் பதவி ...சிவப்பு விளக்கு கார் அறி
விக்கும் அவர் வருகை... நம் தம் தமிழுக்குக்
கிடைத்த வெகுமதியாக... சிறப்பாகவே கருதுவதாகக்
கூறினார்.. ரகு மானின் காவியம் பற்றிப் பேச
”ரகுமானே” வந்து இருப்பது பொருத்தம்
என்றார்.
வாலி கவிக்கோவை “வாணியம் பாடி வர்ணக்
குயில்..கவிதா ஆலாபனையில் சிந்தனைக்குரிய
சிந்து பைரவி .மொத்தத்தில் தனி ஆவர்த்தனம்”
என புகழ்ந்து கூறியதாகச் சொன்னார்.
அமரர் திரு ஜி.கே.சுந்தரத்தின் படத்திறப்புக்காக
புதுச்சேரி கம்பன் கழகத்தலைவர் (93 வயது.....
தமிழ் செலுத்தும் அன்பும் வேகமும் பாருங்கள் ..!)
திரு ந. கோவிந்தசாமி வந்திருந்தார்..
அதன் பின் ”கம்பனில் நான்மறை” என்று திரு பழ.முத்தையா எழுதிய நூலை மதுரை கம்பன் கழகத்
தலைவர் திரு சங்கர சீதாராமன் வெளியிட்டுப்
பேசினார்..அதனை திரு ஏஆர் ராமசாமி (அண்ணா
மலைப் பல்கலைக்கழகம்) பெற்றுக் கொண்டார்கள்.
திரு சேதுபதி எழுதிய ”வரலாறு நடந்த வழியில்”
என்ற நூலை திரு பழ முத்தப்பன் வெளியிட
திரு அய்க்கண் பெற்றுக் கொண்டார்கள்..
பள்ளத்தூர் திரு பழ பழனியப்பன் எழுதிய கம்ப
ராமாயண உரை யுத்த காண்டம் 4 தொகுதிகள்
வெளியீடு ..இதை இராசபாளையம் திரு முத்து
கிருஷ்ண ராஜா வெளியிட புதுச்சேரி கம்பன் கழகத்
தலைவர் திரு சிவக்கொழுந்து பெற்றுக் கொண்டார்.
பின்னர் பள்ளி கல்லூரி மாணவர் மாணாக்கியருக்
கான கம்பன் பற்றிய கவிதை கட்டுரை உரைநடைப்
போட்டிகளில் வென்றவர்களுக்கு அறக்கட்டளை
மற்றும் தனிநபர் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அப்போது விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பாக
அடுத்த வருடத்திலிருந்து கம்பனில் இசைப்
போட்டியும் நடத்தி பரிசு வழங்க முடிவானது..
இறுதியில் தலைவர் கவிக்கோவின் ”யாதும்
ஊரே “ என்ற கணியனின் வரிகளோடு (இத்தனை
வருடங்களில் இல்லாத புதுமை இது ..தலைவர்
உரையில் இவ்வாறு தலைப்பிட்டு பேசுவது)..
திருநாள் மங்கலம், மங்கலமாக நிறைவுற்றது..

“கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம் “

பின் குறிப்பு:-
அடுத்து வரும் இடுகைகளில் திரு ந. கோவிந்த
சாமி., திரு பழ முத்தப்பன்., திரு சங்கர சீதாராமன்.,
திரு வி.பி. சிவக்கொழுந்து மற்றும் கவிக்கோவின்
உரையுடன் நிறைவு செய்வேன்....

51 கருத்துகள்:

  1. கம்பன் கழகம் அந்தமானிலும் செயல்பட்டு வந்தது.
    நானும் கூட கம்பன் கழகத்தில் உரை,கவிதை சொன்னதுண்டு.

    பதிலளிநீக்கு
  2. பழ. முத்தப்பன் எப்படி இருக்கிறார். அந்த சிவந்த தேகமும் கம்பீர குரலும் இன்னமும் இருக்கிறதா? அரு. நாகப்பன். பழ. முத்தப்பன் போன்றவர்கள் என்னை மறந்து இருப்பார்கள். சரஸ்வதி வித்யா சாலையில் பேச்சு கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்த நாட்களில் அவர்கள் கொடுத்த நிணைவுப் பரிசுகள் இன்னமும் பத்திரமாக இருக்கிறது.
    நீங்கள் போயிருந்தீர்களா?

    பதிலளிநீக்கு
  3. சாந்தி உங்கள் பகிர்வு எனக்கு ஆச்சர்யம்தான் ...என்ன அந்த மானிலுமா...? வாழ்க தமிழ் ..நன்றி சாந்தி தகவலுக்கு

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் ஜோதிஜி நான் சென்று இருந்தேன் இன்றூம் நாளையும் கூட இருக்கிறது.. இன்று பட்டி மண்டபம் கல்லூரி முடித்தபின் தற்போதுதான் அங்கு சென்று கலந்து தமிழில் நனைய முடிந்தது.. ஆனால் முழுதும் நனைய கொடுத்து வைக்கவில்லை...கவிஞர் அரு. நாகப்பனை உங்களுக்குத் தெரியுமா..?அவர் என் தந்தையின் பள்ளித் தோழர் ..அவர் என் திருமணத்தில் பேசிய வாழ்த்துரைகள் மிக அருமை ..அதை அவ்வப்போது கண்டு கேட்டு மகிழ்வதுண்டு

    பதிலளிநீக்கு
  5. படிக்க படிக்க பரவசமூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  6. திருப்பத்தூரிலும் (வட ஆற்காடு) முன்பு நடக்கும்.. என் நண்பர் - பள்ளி ஆசிரியர் - மிக அழகாய் கதைகள் எழுதி மலரில் வெளியாகும். இப்போது நடக்கிறதா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. பள்ளிக் காலத்தில் நீர்மோர், பானகத்திற்காகப் போனாலும், கேட்டதும் மறக்கவில்லை. பல பெரியவர்களை பார்த்தது கேட்டது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அப்போது புரிந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு.
    இளம்பிறை மணிமாறன் உரை பலமுறை கேட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஆற்றல் வாய்ந்தது. நல்லதோர் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. நன்றி டெஸ்டு உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  10. நன்றி ரிஷபன் உங்க கருத்துக்கு., பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  11. இடுக்கை அருமை தேனம்மா...இன்னும் காவிய தலைவன் கம்பனோடு கரைய காத்திருக்கிறேன்...நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  12. பகிர்வுக்கு நன்றி.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. I've heard abt this festival feast Thenammai.Nice info abt N.Govindasamy.

    பதிலளிநீக்கு
  14. akka, your profile photo is very nice. Your post about this program is also very good. Best wishes!

    பதிலளிநீக்கு
  15. களை கட்டுது போல ....
    கம்பன் விழா , கற்றோர் சந்திப்பு

    உங்களின் அழகு தமிழில் பகிர்வுகளுக்கு விரிந்து கிடக்கிறது பிக்சல் பிரபஞ்சம்

    பதிலளிநீக்கு
  16. தேன் அக்கா..
    அருமையா இருக்கு..

    Ungaloda Maththa Padhippugalum padiththaen.. Romba super..
    Vazhththukkal..Akka.. :)

    பதிலளிநீக்கு
  17. காரைக்குடில இல்லைங்கிற குறையை அழகாய் தீர்த்து வைத்தீர்கள்..

    ரெம்ப அழகா நிகழ்ச்சி பற்றி எழுதுறிங்க.. எங்கேயாவது நிருபர் வேலை பார்த்திங்களோ?

    பதிலளிநீக்கு
  18. kambam vizha kuriththa katturai arumai. kalluri kaalaththil naangalum. karaikudiyila neengal? solli irunthal en illa mugavari thanthiruppeney. pooi paarththu vanthirukkalamey?

    பதிலளிநீக்கு
  19. உண்மை உமா சில விஷயங்களை அனுபவங்களே புரிய வைக்கின்றன

    பதிலளிநீக்கு
  20. நன்றி வினோத்கௌதம் ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க... வேலைகள் அதிகமா

    பதிலளிநீக்கு
  21. நன்றி அம்பிகா இளம்பிறை மணிமாறன் பேச்சு கேட்டு இருக்கீங்களா ...அருமை

    பதிலளிநீக்கு
  22. நன்றி ராகவன் உங்க தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஸ்ரீராம் இதோ வருகிறேன் தமிழில் நனையுங்கள்

    பதிலளிநீக்கு
  24. நன்றி சீமான் கனி உங்கள் கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  25. அருமையான பகிர்வு. தொடர்ந்து பதிவிடுங்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  26. நன்றி மயில் ராவணன் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  27. அவ்வப்போது வந்து படித்து பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி முனியப்பன் சார்

    பதிலளிநீக்கு
  28. நன்றி நேசன் உண்மை கம்பர் விழா எல்லோரும் ஒருமுறையாவது காணவேண்டிய நிகழ்வு ...தொலைக்காட்சி பட்டி மன்றத்துக்கும் இந்த இலக்கியப் பட்டி மண்டபத்துக்கும் சம்பந்த்தமே இல்லை

    பதிலளிநீக்கு
  29. மிக்க நன்றி ஆனந்தி இந்த மாதிரி ஊக்குவிக்கும் சொல்தான் எங்களை எழுதத் தூண்டுது

    பதிலளிநீக்கு
  30. நன்றி செந்தில்நாதன்
    நிருபர் வேலை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை அந்தக் குறைதான் இது செந்தில்..

    நாங்கள் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்தபோது ஆனந்த விகடன் பத்ரிக்கையின் மாணவர் நிருபர்களை தேர்ந்தெடுத்தார்கள் ..அதில் மூன்றாம் ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது

    பதிலளிநீக்கு
  31. நன்றி குமார் உங்க அன்புக்கு நானும் அந்த ஊர் என்பதால் பார்த்திருப்பேன் ...முகவரி தாருங்கள் அடுத்தமுறை கட்டாயம் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  32. நன்றி ஸாதிகா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  33. நன்றி சை கொ ப உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  34. நன்றி அக்பர் உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  35. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  36. நல்ல பதிவு அக்கா, அப்புறம் என்ன போட்டோவ மாத்திடீங்களா உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. கம்பனின் கட்டுத்தறியும் கவிபாடியது போல நாமும் தட்டச்சுவிசையில் கவிபாடுவோம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  38. திரு. அய்க்கண் ஐயா அவர்கள் எங்கள் உறவினர். திரு.நாகப்பன் ஐயா அவர்களின் நகைச்சுவை ததும்பும் உரையினைக்கல்லூரியிலும், திருவிழா மேடைகளிலும் கேட்டு ரசித்ததுண்டு.பழைய நினைவுகளில் நனைய வைத்த பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  39. நல்ல இருக்கு இந்த பதிவு!

    பதிலளிநீக்கு
  40. என் பின்னோட்டம் எங்கே? நீங்க மிகவும் அழகாய் இருக்கிறீர்கள் என்று சொல்லி இருந்தேன் .போடலியா க்கா

    பதிலளிநீக்கு
  41. நன்றி சசி உங்க வாழ்த்துக்கு ..ஆமாம் போட்டோ மாற்றி விட்டேன் சசி

    பதிலளிநீக்கு
  42. நன்றி விஜய் உண்மையும் அதுதான்

    பதிலளிநீக்கு
  43. நன்றி சாந்தி உங்க கருத்துக்கு ..அய்க்கண் ஐயா உங்க உறவினரா..அருமை..

    பதிலளிநீக்கு
  44. நன்றி பிரியா உங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  45. பத்மா சிலசமயம் பின்னூட்டம் வெளியிடும் போது வருவதில்லை சிலசமயம் எர்ரர் கோடு என்று ப்ளாகர் தின்று விடுகிறது

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)