வெள்ளி, 5 மார்ச், 2010

சாயம் போன வானவில்கள்

1985 மார்ச் புதிய பார்வைகள் இதழில் வெளி
வந்தது ..இது என்னுடைய 150 ஆவது இடுகை...

நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்..
எங்களுடைய ஒட்டகங்கள்
எலும்புக்கூடுகளாய்
நின்று போயின..
சித்தன்ன வாசல்கள்
எலிப்பொந்துகளால்
வவ்வால்களால் சீழ் பிடித்து..


நாங்கள் கடற்கரைக்
கோயில்களானோம்..
அலைக்கரையான்களுக்கு
எங்களை அரிக்கக்
கொடுத்துவிட்டு..
எங்கள் நம்பிக்கைகளின்
கற்புகளைக் காப்பாற்றிக்கொண்டு..

காற்றுக்கு சங்கீதத்தைக்
கற்றுக்கொடுத்து மலடுகளாய்..
எங்களின் வீணைகள்
ஸ்பரிசிக்கப்படுவதற்கு முன்னமேயே
தந்திகள் அறுக்கப்பட்டன..

நாங்கள் உருவாக்க
நினைத்ததென்னவோ
அஜந்தாக்கள்தான்..
கிடைத்தவை கரி அடைத்த
பூதப் பிரசவங்கள்..

நாங்கள் அர்ஜுனர்களாகிப்
பாதை திரும்பிக் கொண்டிருக்கிறோம்..
எங்கே எங்களின் அந்த
இதிகாசக்கண்ணன்...?

கோவர்த்தன கிரியைத்தூக்குதல்..,
ஆதிஷேஷன் மேல் நடனமாடல்..,
அரக்கியை அழித்தல் என்ற
இந்திரஜால வித்தைகளை
எம்மைப்போன்றோர்க்குக்
கற்றுத்தரட்டும்..

நாங்கள் கப்பல்களாய்த்
தயாராய்க் காத்திருந்து..
நிமிஷ நேரத்தில்
ஜல்லிகளாய்த்தூர எறியப்பட்டு..

பக்கத்து மேகங்களைப்
பார்த்து பரவசித்தபோது
எங்களை அபிஷேகித்தது
எரிமலைகுழம்புதான்
நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்
எங்களுடைய ஒட்டகங்கள்தான்
எலும்புக்கூடுகளாய்
சீழ்பிடித்துப் போயின

48 கருத்துகள்:

  1. 1985-லயும் நீங்க தான் எழுதுனீங்களா?

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. 85-ல் ‘புதிய பார்வைகள்’-ல் வெளிவந்த கவிதை!! 25 ஆண்டுகளுக்கு பின்னும் புதிய பார்வை?????

    150-க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  4. 150 ஆவது இடுகையா? வாழ்த்துக்கள் தேனம்மை.
    முதல் வாழ்த்து கொடுக்க முடிந்ததற்கு எனக்கு ஒரு வாழ்த்து

    பதிலளிநீக்கு
  5. படிக்க நல்லாயிருக்கு தேனம்மா

    விளக்கம்ம் சொல்ல முடிஞ்சா சொல்லுங்களேன்..

    :(

    பதிலளிநீக்கு
  6. 1985 லேயேவா.. இது எது குறித்த கவிதை என்று புரியவில்லை.. ட்யூப் லைட்:) ஆனாலும் பிடிச்சிருக்கு..

    150 வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. 150 க்கு வாழ்த்துக்கள்.
    1985 லேயேவா???

    பதிலளிநீக்கு
  8. 150க்கு வாழ்த்துகள். இந்தக் கவிதைக்கு இப்போதைய கண்ணோட்டத்தில் ஒரு கவிதை எழுதியிருக்கலாமே:)

    பதிலளிநீக்கு
  9. என்னது 1985 ஆஆஆ???
    நான் அப்போ ஒரு வயசு குழந்தைங்க!!... :-0
    150வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
    ரொம்ப தாமதமாகத்தான் உங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் போலும்...
    பழைய கவிதைகளையும் படிக்கத் துவங்குகிறேன் :)

    பதிலளிநீக்கு
  10. ஹல்லோ பிரபு அப்ப நான் 2 வயசு குழந்தை.... :)

    தேனம்மை அவர்களுக்கு 150 க்கு வாழ்த்துக்கள்... இன்னும் எழுதி குவிக்கவும்.. :)

    பதிலளிநீக்கு
  11. 1985 இந்த வரிகள் உங்களின் உண்மையான பயணத்தின் வெளிப்பாடா என்பது எனக்கு தெரியவில்லை . மிகவும் அருமை வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  12. 150 இடுகைக்கு வாழ்த்துக்கள். கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள், கவிதைக்கும், 150- க்கும்.

    பதிலளிநீக்கு
  14. 150-க்கு வாழ்த்துக்கள் தேனம்மை,
    புதிய பார்வைகள் இன்றும் புதிதாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  15. 150 க்கு வாழ்த்துக்கள். கமெண்ட் டேப் இப்படி எழுவது வேகமாகவும், வசதியாகவும் உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. 150 க்கு வாழ்த்துக்கள். கமெண்ட் டேப் இப்படி எழுவது வேகமாகவும், வசதியாகவும் உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாவ்.... 150- வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
    அக்கா., 1985 அப்போ நான் பிறக்கவே இல்ல.. ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க வாழும் சரித்திரம்.. உங்கள் கலைப்பணி சிறக்க வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  18. கவிதை அருமை சகோதரி.ஒன்றரை சத இடுக்கைக்கு வாழ்த்துக்கள்.விரைவில் 200 தொடவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. நல்ல அம்சமான கவிதை,தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. 150 இடுகைக்கு வாழ்த்துகள் தேனம்மை அக்கா.

    கவிதையில கலக்குறீங்க போங்க.

    விரைவில் 200, 300 தாண்ட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. 150 வது இடுகைக்கு என் மனப்பூர்வமான நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துகள்...........

    உங்களின் பதிவுகள் இப்படியே போனால் விரைவில் 500தொடும்.

    ஆனால்....

    ஒரு சிறு வேண்டுகோள்
    ஒரு பக்கத்தில் முழுமையான பதிவும் தெரியும்படி வைத்துள்ளீர்கள்.

    அது படிக்க கடினமாக இருக்கு .......

    கொஞ்சம் பாருங்களேன் please....

    பதிலளிநீக்கு
  23. நல்லா எழுதி இருக்கிறிங்க. room mariyathala net problem. athan adikkadi vara mudiyala. enathu manasil (http://vayalan.blogspot.com) siru nanri. mudinthal padiyungal

    பதிலளிநீக்கு
  24. வாவ்!

    verigood மக்கா.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. 1985- எனக்கு அப்ப பேச்சுக் கூட வரலைங்க...ஒரு வயதுக் குழந்தை...

    உங்க 150க்கு வாழ்த்துக்கள்..மேலும் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  26. பழம்பெரும் எழுத்தாளர்!! 150க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. ஆமாம் அண்ணாமலையான் நம்பலையா நீங்க

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராம லெக்ஷ்மி

    நன்றி நாய்க்குட்டி மனசு

    பதிலளிநீக்கு
  29. முதிர் கன்னி.,இளம் விதவை .,ஈழப்பிரச்சனை எல்லாத்துக்கும் பொருந்தும் வசந்த்

    பதிலளிநீக்கு
  30. வசந்துக்கு சொன்ன பதிலேதான் உங்களுக்கும் பட்டியன்

    பதிலளிநீக்கு
  31. நன்றி அம்பிகா


    நன்றி வானம் பாடிகள்

    பதிலளிநீக்கு
  32. நன்றி ஒரு வயசுக் குழந்தை பிரபு
    :)))))

    நன்றி ரெண்டு வயசுக் குழந்தை அஷோக்
    :)))))

    பதிலளிநீக்கு
  33. நன்றி ராம்

    நன்றி அமைதிச்சாரல்

    பதிலளிநீக்கு
  34. நன்றி சிவாஜி சங்கர்

    நன்றி ஸாதிகா

    பதிலளிநீக்கு
  35. நன்றி ரிஷபன்

    நன்றி தியாவின் பேனா

    பதிலளிநீக்கு
  36. நன்றி குமார்

    நன்றி ராஜாராம்

    பதிலளிநீக்கு
  37. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு
  38. பிறக்காத குழந்தை சிவாஜிக்கும் பேசக் கூடத்தெரியாமல் இருந்த பச்சைக்குழந்தை புலிகேசிக்கும் நன்றிகள் பல... ஹாஹாஹா ...எங்கே நீங்கள் படிக்காமல் விட்டுப்போய் விடுமோனுதான் பதிவு செய்தேன்

    பதிலளிநீக்கு
  39. ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா. மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள் ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  40. ஹ்ம்ம்... நானும் அஷோக்கும் குழந்தைகளா இருக்கும் போதே கவிதை வானத்தில் வானவில் வரைஞ்சிருக்கீங்க....
    1985லேயே எவ்ளோ தீர்க்கமான எழுத்து :)
    அது என்னவோ உங்க வலைப்பூவுக்கு வந்தா உண்மையிலேயே குழந்தையாகிடுறென் போல, உங்க மீன்களுக்கு உணவு போட்டு விளையாடிட்டு இருக்கேன் ஹா ஹா :)
    சரி.. நீங்க எப்போ எழுத ஆரம்பிச்சீங்க... 85ல் ஆரம்பித்திருந்தால்கூட வெள்ளிவிழா தொடுதே.. :)
    சொல்லவே இல்லயே.. :)

    பதிலளிநீக்கு
  41. அடடா...

    1985 ஆம் ஆண்டிலேயே விளையாட்டு தொடங்கியாச்சா...

    இருப்பினும், இன்றும் படிக்கும் போது புதிதாக உள்ளது...

    150 வது படைப்பிற்கு வாழ்த்துக்கள்...

    தாங்கள் மென்மேலும் இது போன்ற பல நூறு படைப்புகள் படைக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சம்....

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)