புதன், 24 பிப்ரவரி, 2010

நாராயணன் O M S

சில பேரை நாம் சந்திக்கும் போது தெரியாது .,
இவர்கள் நம் வாழ்வில் சில நாட்கள் உடனிருந்து
உதவி செய்து நீங்காது நினைவிலிருப்பார்
களென்பது. .அவர்களுள் ஒருவர் திரு நாராயணன்
அவர்கள்.. நடைப்பயணமாக 36 ஆண்டுகள் சென்று
வந்த பின் தன்னுடைய அனுபவமும் வழிகாட்டு
தலும் பிறருக்கு உதவட்டுமென சேவை செய்பவர்
களுள் இவரும் ஒருவர். "ஓம் சேவகா சர்வீஸ்"
என்பது இவரது சேவை அமைப்பு..
இவர் ஏற்பாடு செய்த வேனில் எங்கள் பொருட்
களை எல்லாம் எடுத்து ஒரு ட்ரைவர் .,ஒரு
உதவியாளர் உடன் வந்தார். கிளம்பும்போது
நம்முடைய படுக்கை .,உடைகள்., பை போன்ற
சாமான்களை ஏற்றிவிட வேண்டும்.. கையில்
ஒரு ஜோல்னா பை போதும்..



படுக்கையை எங்கள் அம்மா நாங்கள் செல்லும்
முன்பே தயார் செய்து வைத்து இருந்தார். பழனி
அண்ணனிடம் கொடுத்து அலசி காயவைத்து
கட்டி தயாராய் இருந்தது ..ஒரு டார்பாலின் ஷீட் .,
அதனுள்ளே ஒரு சென்டெக்ஸ் சமுக்காளம்.,
குட்டித்தலையணை., ஷால்., ஸ்வெட்டர்., மப்ளர்.,
டர்க்கி டவல் எல்லாம் ..மூவருக்கும் மூன்று
ஜோல்னாபைகள். அதில் விபூதிப்பை., சீப்பு.,
சின்ன துவாலை., தண்ணீர் பாட்டில் .,
பிஸ்கட்டுகள் சீனி கலந்த பொரிஅரிசி மாவு .,
நல்லெண்ணை குட்டி பாட்டில்., பிரஷ்., பேஸ்ட்,
காதுக்கவசம்(ஏர் காப்)., டார்ச் லைட்., சில
பாலிதீன் பைகள் .,ரப்பர் பாண்டுகள்., ஒரு சின்ன
மக் ..நாங்கள் மூவரும் எங்கள் செல் போன்.,
சார்ஜர் .,மணிபர்ஸ் போன்றவை வைத்துக்
கொண்டோம்.. தம்பிகளிருவரும் நல்ல பட்டை
பெல்ட்டில் பணம் வைத்துக் கொண்டார்கள்.
பயணத்தின் போது தாய் செய்வதை யாரும்
செய்ய முடியாது என முத்தி அக்கா சொல்வது
ஞாபகம் வந்தது ..
ஒவ்வொரு4 அல்லது5 கிலோ மீட்டர்களுக்கும்
கிளம்பும் முன் திரு நாராயணன் சேரவேண்டிய
இடத்தின் தூரமும் அடையாளமும் சொல்லி
விடுவார்கள்.. பெட்ரோல் பங்க்., ஸ்கூல் அல்லது
பாங்க் என்று.. அதற்கு பக்கத்திலேயே இறைவன்
திருவுருவமும் பேனரும் தாங்கிய வேன் நிற்கும்..
போன் இருந்ததால் அவரை அவ்வப்போது தொடர்பு
கொள்ள வசதியாக இருந்தது ..தங்கிய எல்லா
இடத்திலும் பாட்டரி ரீசார்ஜ் செய்து கொள்ள
முடிந்தது.. வேனில் கூட.. கிளம்பும் முன்பே ஒரு
தங்குமிட அட்டவணை கொடுத்து விட்டார்கள்.
மணிப்படி கூட இருந்தது அது .. எல்லா ஊர்களும்
எல்லா தரப்பு மக்களும் அவருக்கு பழக்கமென்பதால்
சென்ற இடத்திலெல்லாம் எங்களுக்கு மிக
அருமையான ஓய்விடங்கள் கிடைத்தன..
தென்னத்தோப்பு., பள்ளிக்கூடம்., காட்டன் மில்.,
பெரிய தொழில் அதிபர்களின் வீடுகள்., நல்ல
சேவை மனம் படைத்த நடுத்தர வர்க்க மக்களின்
வீடுகள் கூட ..ஒரு நாளைக்கு நாலு வேளையும்
ஐவகை .,அறுசுவை உணவு .,குளிக்க பம்ப்செட் .,
தண்ணீர் எல்லாம் இலவசமாக.. இளநீர்., காபி .,டீ
சுக்கு காபி., வடை., கூட சிலசமயம் ..வந்த அனை
வருமே ஏதோ ஒன்றை கொடுத்துக்கொண்டே
இருக்க விரும்பினோம்..அது ரெண்டு மூணு
நாளில் எல்லோர் உள்ளக் கிடக்கையும் என்னுடன்
பகிர வைத்து நிறைய நட்புகளையும் உருவாக்கியது.

முதல் நாள் மட்டும் நானும் என் தம்பியும்
வள்ளியம்மை என்ற ஆச்சியும் சிறிது வேகமாக
முன்னே சென்று விட்டோம் .. பின்னே செல்லக்
கூடாது.. அன்றைக்கு எங்களுக்கு தங்கள் வீட்டில்
நல்ல ரஜாய்கள் ., சமுக்காளங்கள், போர்வைகள்
எல்லாம் கொடுத்து தங்கள் வீட்டின் சிட் அவுட்டில்
இடம் கொடுத்தது ஒரு முஸ்லீம் அன்பரும் அவர்
மனைவியும் ..அவர் மகனுக்கு திருமணமாகி விட்ட
தால் உள்ளே படுக்க இடமில்லை.. அவர் நல்ல
மனத்தையும் எல்லாமுமான கடவுளின் கருணை
யையும் வியந்து கொண்டே உறங்கினோம் ..

காவடிகள் சென்ற வழியில் செல்வது ஐதீக
மென்பதால் கரும்புக்காடு., நெல் வயல்., வரப்பு.,
கம்மாய்க்கரை., மடு எல்லாம் நடந்தோம்..
நாட்டார் காவடி வில் போல சென்றது ..ரொம்ப
கட்டுக்கோப்பு.. நகரத்தார் காவடி மயில் போல்
முன்னும் பின்னும் சென்றது.. உடல் உறுதியை
விட மன உறுதிதான் நடத்தியது.,
பெரும்பாலானோரை ...நாம் சொங்கி மாதிரி
நடக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
வியக்க வைத்தார்கள்..

பெண்கள் செல்வதற்கு முன் யோசிக்க வேண்டும்.
பம்ப் செட் போன்ற பொது இடங்களில் குளிப்பது .,
உடை மாற்றுவது ., இயற்கை உபாதையை
செல்லும் இடம் வரை பொறுக்க வேண்டும்..
என் அம்மா சோப்பு போடக்கூடாது., உடையோடு
குளித்து நடக்கவேண்டும் என்று சொன்ன
ரூல்ஸை எல்லாம் மீற வேண்டியதாகிவிட்டது..
ஏனெனில் நம்மை நமக்கே பிடிக்காமல் போகக்
கூடிய அபாயம் இருக்கிறது ..கண்ணாடி மட்டும்
பார்க்கவில்லை ஆண்டியாக வாழ்வதும் சுலபமில்லை.

சிலருக்கு நன்றி பாக்கி இருக்கிறது :-
1. கல்லும் முள்ளூம் காலுக்கு மெத்தை என்றும்
கல்லும் முள்ளும் கண்ணுக்கு வெளிச்சம் என்றும்
பாடிச் செல்லும் பக்தர்களை ஏமாற்றக்கூடாது
என்று வேகாத சோற்றில் புளிக்குழம்பைப்
கொட்டியது போல் வருடாவருடம் ரோடு
போடும் பொதுப்பணித்துறை..
2.சாலையின் வெள்ளைக்கோட்டில் நடக்காதீர்கள்
என்று அவ்வப்போது பாரா வந்த போலீஸ்
வண்டிகள் (ரோடே லங்கோடு.. அதில் ஓரம் ,,
கரம்பை ., ஜல்லி., கருங்கல் மற்றும் சரளைக்கல்.
இதில் எங்கு நடக்க )..
3.ரோடு முழுக்க அன்ன தாதாக்கள்... தண்ணீர்
பாக்கட்டுக்கள் ..சாப்பாடு .,பிஸ்கட்., இனிப்புகள்.,
காபி., டீ .,பால் என்று உண்ணத்தகுந்த அனைத்
தையும் கொடுத்த பொதுமக்கள்(நம்மால் லக்கேஜ்
தூக்க முடியாத காரணத்தால் உணவு வகையறா
வைக்கண்டாலே ஓடினோம்.. ஜோல்னாப்பையை
கூட வேனில் போட்டு.. ஒரு செல் போன்., பணம்.,
தண்ணீர் பாக்கெட் இதுதான் .. நம் உடம்பைத்தூக்கி
நடப்பதே சிரமம் ..இது வேறா என்று..
4. கொடுத்த சாப்பாட்டை எல்லாம் உண்டும்.,
சிதறியும்., இயற்கை உபாதைசெய்தும் தடுமாறச்
செய்த பக்த மகா ஜனங்கள்..
5.இவற்றையெல்லாம் லஞ்சமோ.,மேல்வரும்
படியோ இல்லாமல் துப்புரவு செய்த துப்புரவுப்
பணியாளர்கள். இவர்களுக்கு உண்மையிலேயே
நெஞ்சார்ந்த நன்றிகள்..

அம்மாவைப் போன்ற அன்போடு அழைத்துச்சென்று
கடைசிவரை இருந்து சரி பார்த்து அனைவரும்
வந்தபின் கிளம்பி வீடுவரை பொருட்களை பத்திர
மாகக்கொண்டு சேர்த்த திரு நாராயணன் அவர்கள்.
எந்தபிரதிபலனும் இல்லாமல் எங்களுக்கு உதவிய
மருதிப்பட்டி வாழ் முஸ்லீம் சகோதரன், இவர்களை
எல்லாம் சேர்த்து நல்ல மனிதர்களையும் அனு
பவங்களையும்.,சில சம்பவங்களில் , 'எவ்வளவு
நல்ல வாழ்வு கொடுத்து இருக்கிறேன் பார் உனக்கு'
என உணர்த்திய எல்லாம் வல்ல இறைவன்....
அனைவருக்கும் வார்த்தைகளால் நன்றி மட்டும்
போதுமா ..?சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!!

50 கருத்துகள்:

  1. //http://www.youtube.com/watch?v=nyeJ2dhtvjQ//

    plz watch the funny video in youtube...

    பதிலளிநீக்கு
  2. please check my blog... :)) kalakkal video.

    malaikku poi vantheengalaa.. saami saranam.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு

    ஆமா.. ரோடு போட்டவங்களுக்கும், போலிசுக்கும் நன்றி சொல்வது வஞ்சப்புகழ்ச்சியா? அப்படீன்னா துப்புரவு செய்தவங்க அந்த லிஸ்ட்ல இருக்கக் கூடாதே.. :)

    பதிலளிநீக்கு
  4. அனுபவங்கள்...பாடங்கள். ரோட் வர்ணனையும், நல்லதும் கேட்டதும் சொன்னதும் ரசிக்க வைத்தது..ஆண்டியாக வாழ்வதும் சுலபமில்லை....உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டு விஷயங்கள் விட்டுப்போய் விட்டது

    இந்த முறை க்ரோசின் சாக்ஸ் சில பேர் ஹவாய் செருப்பு இவற்றுடன் பயணம் செய்தார்கள்
    அடுத்த வருடம் இதை அதிக அளவில் பார்க்கலாம்

    அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸின் வேன் வந்து அங்ககே நடக்க இயலாதவர்களுக்கு காலில் பேண்டேஜ் போட்டுவிட்டு மருத்துவ சேவை செய்தார்கள்

    ஹிஹிஹி நானும் சில இடங்களில் பேண்டேஜ் போட்டுக்கொண்டு நடந்தேன்

    பதிலளிநீக்கு
  6. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!!


    சரியாக சொன்னீர்கள். சரியான நேரத்தில் சரியாக செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் தொண்டு

    பதிலளிநீக்கு
  7. வித்யா வருகைகும் கருத்துக்கும் நன்றி அருணா சாய்ராம் கேள்விப்பட்டு இருக்கேன் இன்றுதான் கேட்டேன்.. கம்பீர நாட்டை கம்பீரம்.. காளீங்க நர்த்தன தில்லானா.. நர்த்தனம் ..காதுக்குள் ..செண்டைக்கொட்டும் ஒவ்வொரு செல்லிலும் கொட்டுது வித்யா..நான் பூரம் பார்த்து இருக்கேன்.. அதில் குடைகளும் கொடிகளும் மாற்றுவார்கள் .

    பதிலளிநீக்கு
  8. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!!

    ......உண்மைதான் அக்கா.

    பதிலளிநீக்கு
  9. நன்றி பட்டியன் வருகைக்கும் கருத்துக்கும் ஆனா அது உண்மையிலேயே நெஞ்சார்த்த நன்றிகள்னு எழுதி இருக்கேனே

    பதிலளிநீக்கு
  10. நன்றி ராகவன் ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. நன்றி ராம் வரவுக்கும் வாழ்த்துக்கும் உண்மைதான் ஆண்டிகள் என்கிறோம் ரொம்பக்கஷ்டம் சடா முடி .,கிடைத்ததை உண்பது .,கிடைத்த இடத்தில் படுப்பது எல்லாம்

    பதிலளிநீக்கு
  12. உண்மை தமிழ் உதயம் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேனகா

    பதிலளிநீக்கு
  14. உண்மைதான் சித்ரா எல்லோருக்கும் முடிந்த வரை உதவ வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. இன்ட்ரஸ்டிங்கா எழுதுறீங்க நல்லா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  16. நன்றி சுவையான சுவை வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ..!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

    பதிலளிநீக்கு
  18. //சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!!//

    சரியும் சிறப்பும்.

    அருமையான பகிர்வு தேனம்மை.

    பதிலளிநீக்கு
  19. "ஆண்டிகள் என்கிறோம் ரொம்பக்கஷ்டம் சடா முடி, கிடைத்ததை உண்பது,கிடைத்த இடத்தில் படுப்பது எல்லாம்" அதெல்லாம் உங்க கோனத்துல, அவங்களுக்கு அது பழகுன விசயம்... (ஆமா போற வழியெல்லாம் நீங்க எல்லாரும் போட்ட குப்பைய என்ன பன்றது?)

    பதிலளிநீக்கு
  20. //சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!! //
    இந்த கடைசி வரிக்கு சொந்தக்காரர், முதல் வரியில் நீங்கள் குறிப்பிட்டிருந்த நாராயணனோ? அட! ஆமாம்!

    பதிலளிநீக்கு
  21. s u feel and write ,that's y its really interesting. keep it up. i had such experience before four years. when ever i had pain, lord murugan send his peacock to me to pickup without pain. s . i went the place which already in the list and rest there and continue our walk . s its really a saint life without any thinking. good experience.

    பதிலளிநீக்கு
  22. நீங்களும் என்னைப் போலவே மனிதஹ்தில் கடவுள் தேட ஆரம்பிச்சிட்டீங்க....

    பதிலளிநீக்கு
  23. //அனைவருக்கும் வார்த்தைகளால் நன்றி மட்டும்
    போதுமா ..?சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!! //

    சரியா சொன்னீங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  24. வழக்கமான நடைமுறை பயணங்களே பாடங்கள் பல தரும். நடை பயணம் இன்னும் அதிகமாக!!

    க்ரோசின் சாக்ஸ் என்பது என்ன அக்கா?

    பதிலளிநீக்கு
  25. பகிர்வு நன்று. ஆமா, O M S - அப்படின்னா என்ன.

    பதிலளிநீக்கு
  26. 'எவ்வளவு
    நல்ல வாழ்வு கொடுத்து இருக்கிறேன் பார் உனக்கு'
    என உணர்த்திய எல்லாம் வல்ல இறைவன்....
    மனதைத் தொட்ட வரிகள்

    பதிலளிநீக்கு
  27. நல்ல பயண கட்டுரை படித்த அனுபவம்.
    //அனைவருக்கும் வார்த்தைகளால் நன்றி மட்டும்
    போதுமா ..?சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    நாமும் பிறருக்கு உதவுவதே சரியும் சிறப்பும்..!!! //
    :-)))

    பதிலளிநீக்கு
  28. ஆண்டியா இருப்பது பழகிப்போன விஷயமா அண்ணாமலையான்.. ரெண்டு நாள் பழகிப் பாருங்க.. வீட்டுக்கு ஓடி வந்துடுவீங்க .

    உண்மை.. நாங்க எங்குமே குப்பை போடாட்டாலும் தண்ணீர் பாக்கெட்டுகளைப்போட்டோம்.. தங்குமிடங்களில் எங்களால் போடப்பட்ட குப்பையும் இருக்குமே.. ஆனால் வீடுகளில்தானே தவிர ரோடுகளில் அல்ல..

    பதிலளிநீக்கு
  29. ஆமாம் செல்வா சரியா சொன்னீங்க பே இட் பார்வர்ட் படம் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டே இருக்கலாம் நல்லவை மல்டிபிள் ஆகும்

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் சரவணன்.. உண்மை.. நினைத்ததை உடனே பகிருகிறேன் ...

    நடக்க ஆரம்பிக்கும் போதே இடது கால் ரொம்ப வலி... எல்லோரும் சொன்ன அட்வைஸ் என்னன்னா "காலை ஊனி நட "எனவே கால்வலிக்கு பாதி அதுதான் காரணம் ..கருங்கல் ஜல்லி முள்ளாய்க்குத்துதே என எவ்வி நடந்தால் அவ்வளவுதான் நடக்கவே முடியாது..

    என் தம்பியும் நானும் நடந்தபோது மிக தாமதமாக ஒரு இடத்துக்கு சென்றோம் .அங்கே எங்கள் குழுவினர் முன்பே சென்று விட்டனர்.. அங்கு ஒரு பெண் "ஏன் இவ்வளவு சீக்கிரமாக வந்துட்டீங்க "என கலாய்த்தார்.. அதற்கு என் தம்பி "ஒரே பூவாய்த்தூவி(ஜல்லி) பளிங்குத் தரை போட்டு இருந்தாங்க அதுதான் .." என பதிலுக்கு கலாய்க்க சிரிப்பலை ... ஆனால் இறைவன் கருணைதான் சரவணன் 160 கிலோமீட்டர் நடந்தது ..

    பதிலளிநீக்கு
  31. நன்றி உங்க வாழ்த்துக்கு ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  32. நன்றி உங்க வாழ்த்துக்கு அக்பர்

    பதிலளிநீக்கு
  33. ஹுசைனம்மா க்ரோசின் பக்கத்துல கமா விட்டுப்போச்சு எல்லாரும் நடந்து அலுக்கையில் காய்ச்சல் வந்து மாத்திரை போட்டுத்தான் தினம் நடந்தோம் மேலும் டர்பைன் லிக்விட் மற்றும் ஆயில் நல்லெண்ணைக்காப்பு விபூதிக்காப்பு என்று காலை போஷித்து கண் போல் பார்த்துக் கொண்டோம் அப்படியும் பலருக்குக் கொப்புளங்கள்

    பதிலளிநீக்கு
  34. வாங்க சைவக்கொத்துப்பரொட்டா நன்றி உங்க வாழ்த்துக்கு ஓம் (O M S ) சேவகா சர்வீஸ் என்பதுதான் அது

    பதிலளிநீக்கு
  35. நன்றி அப்துல்லா உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  36. நன்றி ரிஷபன் உள்ளபடியே அதுதான் உண்மை நான் உணர்ந்தது சென்ற போதும் வந்த பின்னும்

    பதிலளிநீக்கு
  37. நன்றி அம்பிகா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  38. /// ஆண்டியாக வாழ்வதும் சுலபமில்லை.///
    சொல்ல போனால், அதுவும் ரொம்ப கஷ்டம் தாங்க.

    பயணங்கள் என்றாலே பல அனுபவங்கள் என்பது என் கருத்து. எனக்கு மிக பிடித்த விஷயங்களில் ஒன்று புது இடங்களுக்கு பயணம் செல்வது. நம்மை நாமே புதிதாக உணரலாம் அப்போது.

    நல்ல பதிவு. தொடருங்கள்...!

    பதிலளிநீக்கு
  39. நன்றி சூர்யா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  40. நன்றி அறிவு ஜீவி உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  41. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)