ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஐந்தொகை

* அழகனோ அழகியோ இல்லை
காதல் மட்டும்
அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை
வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....


* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேஷ தினங்களில்
அநேக பலகாரங்கள்
ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...


* தொட்டாற்சிணுங்கியின்
செல்லச் சிணுங்களில்
உயரப் பறக்கும் தட்டான்கள் ....
* வார்த்தைக் கல்லில் அடிபட்ட
மௌனச்சிறகாய் மனசு.....

* எல்லாவற்றையும் கடைந்து., கடந்து
எது விஷம் .,? எது அமிர்தம்.,?
யார் தேவர்.,? யார் அரக்கர் .,?
* அது அதுவாய் வரும்வரை
அததனோடு போராட்டம்....

* சொல்லப்படாத பாசம்
பிரமிடுக்குள் மம்மியாய்
தலைமுறைகடந்தும்.....
* வாசிப்புக்குப்பின் ஓட்டு மட்டும் போடுவதோ.,
பின்னூட்டம் மட்டும் இடுவதோ .,
பாதி சாக்லேட் மட்டும் தருவதாய்....

43 கருத்துகள்:

  1. நன்றி நவாஸ் பாதி சாக்லெட் மட்டுமாவது தந்ததுக்கு :-)

    பதிலளிநீக்கு
  2. நம்மல்லாம் எத கொடுத்தாலும் முழுசாத்தேன்...

    பதிலளிநீக்கு
  3. //அது அதுவாய் வரும்வரை
    அததனோடு போராட்டம்....//

    இது ரொம்ப நல்லா இருக்கு, நல்லா சொல்லியிருக்கீங்க!!

    பதிலளிநீக்கு
  4. ஐந்தொகையும் தைத்தது மனதில்

    புதுசு புதுசா யோசிக்கிறீங்களே (வடிவேலு பாணியில் படிக்கவும்)

    (விசேஷம் என்று இருக்கவேண்டும்)

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹைஸ்பீட் கந்தசாமி முழு சாக்லேட்டுக்கு

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஷஃபி முதல் முறையா என்னோட தளத்துக்கு வந்ததுக்கு

    உங்க பதிவில் புதுமையான அருமையான பகிர்வு வித்யாசமா இருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. முரண்களுடன் தான் நாம் வாழ்கிறோம் /////////
    எல்லாமே முழுசாய் கிடைத்து விட்டால் அதன் அருமை தெரியாதே.

    பதிலளிநீக்கு
  8. நன்றி சிவாஜி

    தன்னினமுண்ணி நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் தமிழுதயம்

    உங்க பதிவில் தினம் தினம் மிக அருமையான பகிர்வு தமிழுதயம்

    எனக்கு நீங்க எழுதுறது எல்லாமே பிடிச்சு இருக்கு தமிழுதயம்

    பதிலளிநீக்கு
  10. //சொல்லப்படாத பாசம்
    பிரமிடுக்குள் மம்மியாய்
    தலைமுறைகடந்தும்.///

    அருமை!

    பதிலளிநீக்கு
  11. வார்த்தைக் கல்லில் அடிபட்ட
    மௌனச்சிறகாய் மனசு.....

    வார்த்தைகள் அதுவாய் வந்து அழகாய் வலி..பிரியம்.. கவிதை எல்லாம் சொல்லிச் செல்கிறது..

    பதிலளிநீக்கு
  12. Thanks NAVAAAASSSSSSSSSS !!!!!!!!

    u submit my article for votig and vote for it

    thanku very much .....NAVAS

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஆயில்யன்

    என்னோட வலைத்தளத்துக்கு முதல்முறையா வந்து இருக்கீங்க

    வெட்கம் பத்தி படிச்ச அத்தனை பேருக்கும் எப்பிடி சொல்லி வைச்ச மாதிரி இவ்வளவு வெட்கம் வந்துருக்கு

    எனக்கும் கூடத்தான் ஆயில்யன்

    பதிலளிநீக்கு
  14. நன்றி மைதிலி
    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க
    உங்க நண்பர்களோட எங்களையும் சேர்த்துகிட்டதுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. நன்றி ரிஷபன்

    வாழும் காலம் வரை அனைவரையும் நேசித்து வாழ நீங்கள் சொல்லி இருப்பது நல்ல கருத்து

    பதிலளிநீக்கு
  16. * வாசிப்புக்குப்பின் ஓட்டு மட்டும் போடுவதோ.,
    பின்னூட்டம் மட்டும் இடுவதோ .,
    பாதி சாக்லேட் மட்டும் தருவதாய்.... .......அக்கோவ், உங்களுக்கு முழு சாக்கலேட் என்ட்ட இருந்து கொடுத்து இருக்கேன். உங்க கவிதை போலவே நல்லா இருந்ததா?

    பதிலளிநீக்கு
  17. தினமும் எப்படி வித்தியாசமா சிந்திக்கிறிங்க..!!

    பதிலளிநீக்கு
  18. //தொட்டாற்சிணுங்கியின்
    செல்லச் சிணுங்களில்
    உயரப் பறக்கும் தட்டான்கள்//

    wonderful!

    பதிலளிநீக்கு
  19. தேனம்மா தினம் தினம் வித்யாசமான சிந்தனைகள்

    இன்றைக்கு மிக பிடித்திருக்கிறது கவிதை...!

    பதிலளிநீக்கு
  20. //சொல்லப்படாத பாசம்
    பிரமிடுக்குள் மம்மியாய்
    தலைமுறைகடந்தும்.....//

    படக்குன்னு இந்த மாதிரி ஒரு வரியை அடிக்கடி எழுதி அசத்தறீங்க. ஏதோ ஒரு கல் பிறழ வேண்டும், ஏதோ ஒரு பட்டாம்பூச்சி மலர் மாறி அமர வேண்டும், ஒரு மிகச் சிறிய மாற்றம்தான். நீங்கள் உயரம் தொடுவீர்கள்! விடாமல் எழுதுங்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  21. :)பன்னிரண்டு மணி முள்
    சாரையும் நாகமும்...
    இந்தக் கவிதை

    பிப்ரவரி 29 முயற்சி இது
    தொடருங்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. //
    * நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
    விடுதியில் இருக்கும் என் மகன்
    உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
    * விஷேஷ தினங்களில்
    அநேக பலகாரங்கள் ஒருபோதும்
    உண்ணக்கேட்காத சாமிக்காய்...//

    நல்ல சிந்தனை..பலரது அனுபவமும்

    பதிலளிநீக்கு
  23. கவிதை மிக மிக அருமை.. எல்லா வரிகளுமே ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு..

    ஆனாலும் பாதி சாக்லேட்தான்.. இப்போதைக்கு.

    பதிலளிநீக்கு
  24. அற்புதமான கவிதை வாசித்த அனுபவம்..கவிதை உங்கள் கைசொடுக்கில் இருப்பதாக அறிகிறேன்.அருமையான வளம்..தமிழ் மொழியில் நல்ல ஆளுமை உங்களுக்கு இருப்பது நன்கு தெரிகிறது.தங்கள் கவிதைகளை உயிர்மை க்கும் அனுப்பவும்.உயிர்மை, காலச்சுவடில் வெளிவந்தால், தங்கள் கவிதைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்..உயிர்மை எனது முதல் விருப்பம். செய்யவும் அன்புடன் அ.வெற்றிவேல்

    பதிலளிநீக்கு
  25. இனி முழு சாக்லேட் தந்தா என்ன தராட்டா என்ன...?!!
    முதல் நான்கும் நன்றாக உள்ளது. ஐந்தாவதில் ஆதாயம் கலந்து விட்டதால் போட்டியில் இல்லை!!

    ஆனாலும் முழு சாக்லேட்...

    பதிலளிநீக்கு
  26. ரொம்ப நல்லா இருக்குங்க..::))

    //காதலிப்பவரை கைபேசியுடன்
    அலைபவரை வெறுக்கிறோம்
    நாம் காதலிக்கும்வரை ....//

    அட கை பேசி இல்லாதப்போ வெறும் பேசினாலே வெறுப்பாங்க..::))

    பதிலளிநீக்கு
  27. நன்றி சித்து முழு சாக்லேட்டுக்கு நான் உனக்கு சாக்லேட் கடையே கொடுத்து இருக்கேனே

    பதிலளிநீக்கு
  28. நன்றி வினோத் உங்க சாலை பாதுகாப்பு பற்றிய இடுகை ரொம்ப உபயோகமானது

    பதிலளிநீக்கு
  29. நன்றி பாரா உங்க உள் அருமை

    எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிடுறாங்க

    இனி எனக்கு என்னமிச்சம் இருக்கு பாரா 'கவிப்பெரும் சோழன் பாரா' இதுதான் நான் சொல்ல விழைவதுவும்

    பதிலளிநீக்கு
  30. நன்றி வசந்த் என்ன உங்க நிசப்தத்தை படிக்க முடியவில்லை புதுசா இப்போதான் ஆரம்பிச்சு இருக்கீங்களா

    பதிலளிநீக்கு
  31. நன்றி செல்வா உங்க பாராட்டுக்கு

    என்ன செல்வா திருப்பாவை திருவெம்பாவை பாதியிலேயே நிக்கிது புதுசு ஒண்ணும் போடலயா

    பதிலளிநீக்கு
  32. நன்றி கோபி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோபி கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  33. நன்றி நேசன் புது புகைப்படம் என்ன ஆச்சு நல்லா இருந்துச்சே

    பதிலளிநீக்கு
  34. நன்றி புலிகேசி குடும்பத்தாருடன் கவலைகளை மறந்து பொங்கல் கொண்டாடி விட்டு வரவும்

    பதிலளிநீக்கு
  35. நன்றி பட்டியன் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  36. நன்றி வெற்றிவேல் சார் முயற்சி செய்கிறேன் கருத்துக்கு நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. நன்றி ராம் முழு சாக்லேட்டுக்கு புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  38. நன்றி ஷங்கர் டவுன் சிண்ரோம் உள்ள குழந்தைகள் மனதை கலங்கடித்த பதிவு ஷங்கர் என்ன செய்ய முழுமையான அன்பு ஒன்றுதான் ஒரே தீர்வு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)