வியாழன், 31 டிசம்பர், 2009

தொடர்கிறது

ஒரு சுண்டல் காகிதமோ .,
வறுகடலைப்பொட்டலமோ.,
பஜ்ஜி தோய்ந்த பேப்பரோ .,
எதையும் விட்டு வைப்பதில்லை நீ... !
எழுத்துக்களில் காதல் உனக்கு...
ஏழேழு பிறப்பிலும்..
நீ அதை தொடர்கிறாயா ..
அது உன்னைத்தொடர்கிறதா ..
தெரியவில்லை.. !!
பெட்டிக்கடையிலிருந்து .,
ஹிக்கின் பாதாம்ஸ் .,
லேண்ட்மார்க் .,பபாஸி வரை
எங்கெங்கும் நீ அதன் பின்னால்... !!
கருக்கலிலும் அந்தி இருட்டிலும்...
பின்னிரவிலும் மெழுகுவர்த்தி
தலை சுட்ட போதும் ...!!
அமேசானின் ஸாப்போவிலும்...
கின்டிலிலும்., கணினியின் கணப்பிலும்.,
செல்போனிலும் கூட
இடையறாது நேசிக்கிறாய் நீ...!!
படுக்கையறையிலும்.,
பாத்ரூமிலும்.,
ஏன் அலுவலகத்தில் கூட ....!!

இப்போது மட்டுமென்ன
ஒரு புத்தாண்டு வாழ்த்தைத்தானே
வாசித்துக்கொண்டு இருக்கிறாய்....!!
வார்த்தைகளுக்கு
வாழ்க்கைப்பட்டவனு(ளு)க்கு
வார்த்தைகளாலே ஒரு
வாழ்த்துப் பூங்கொத்து.....!!
இந்தா பிடித்துக்கொள்......!!

"புத்தாண்டு வாழ்த்துக்கள்....!!!!!!"

அன்புடன் சும்மா....

64 கருத்துகள்:

  1. அம்மா, வார்த்தை பூங்கொத்த பிடிக்க முடியாது வேனும்னா கேட்டுக்கலாம்.. அதனால
    ”இந்தா கேட்டுக்கொள்”
    என மாற்றலாமா?

    பதிலளிநீக்கு
  2. வார்த்தைகளை கண்களாலே வாசித்துப் பிடித்துக் கொள்ளலாமே அண்ணாமலையானே

    பதிலளிநீக்கு
  3. கண்ணால படிக்க முடியும். பிடிக்க?

    பதிலளிநீக்கு
  4. அக்கா எப்படி இப்பிடியெல்லாம்

    எப்பவும் அதிரடி தானா

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. தொடரட்டும்

    கவிதை ஒரு சிற்பத்தை மலை பாறையிலேயே செதுக்கி பர்ர்க்க முயலும் சிற்பியைப் போல்
    அதன் இடத்தில் இருந்தே வாழ்த்தை வாசிப்பை நேசிப்பவருக்கு தந்து செல்கிறது

    வாழ்த்துகள் தேனம்மை தங்கள் உறவுகளுக்கும்

    பதிலளிநீக்கு
  6. ////இந்தா பிடித்துக்கொள்......!!

    "புத்தாண்டு வாழ்த்துக்கள்....!!!!!!"////

    இறுக்கிப் பிடித்து பத்திரப்படுத்திவிட்டேன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்தோடு எல்லா வளமும் பெற்று சந்தோசமாய் இனி வரும் எல்லா நாட்களும் அமைய மனதார வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஹி ஹி.. வாழ்த்து இப்படியும் சொல்லலாமா.. :) நல்லாருக்குங்க..!

    புத்தாண்டு வாழ்த்துகள்
    மறக்கவியலா ப்ரியங்களுடன்
    ~~சிவாஜி சங்கர்~~

    பதிலளிநீக்கு
  8. திரும்பி ஒரு சுண்டல் காகிதம்....பதில் வாழ்த்து எழுதிதான்....
    "புத்தாண்டு வாழ்த்துக்கள்..."

    பதிலளிநீக்கு
  9. இந்த புத்தாண்டு பரிசாக “கவிதைப்புயல்” என்ற பட்டம் வழங்குகிறேன்...(தனிப்பட்ட முறையில கவர் அனுப்பிடுங்க)

    பதிலளிநீக்கு
  10. எதையும் விட்டு வைப்பதில்லை நீ... !
    எழுத்துக்களில் காதல் உனக்கு...
    இப்படித்தான் அலைஞ்சு படிச்சு இப்ப வலைத்தளம் வரை வந்தாச்சு.. நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  11. அருமையான, புதுமையான புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நான் எதையும் படித்திருக்கிறேன் சுவாரசியமாக, பாடப்புத்தகத்தை தவிர. தற்போது சோன்பப்டி வாங்கிய காகிதத்தில் எப்போதும் புரியாத கால்குலஸ்! எழுத்துலகின் பெண் ஹெர்குலிஸாக வலிமை பெற்றுவரும் தேனம்மைக்கு 1000 சுண்டல் மற்றும் சமோசா மடித்த பேப்பர் வாழ்த்துகள்!

    செல்வக்குமார்

    பதிலளிநீக்கு
  13. பூங்கொத்துக்கு நன்றி.. திரும்பி அதை கொடுக்கும் அளவுக்கு கவிதை தெரியாதலால்.. Simply

    புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. அண்ணாமலையானே..
    அஸிஸ்டெண்ட் ப்ரொபஸர்ல..
    அதான் எல்லாம் கேள்வி மயம்..
    நான் இந்த பரிட்சைக்கு வரல ..

    வலைவீசிப் பிடித்தான் என்றால் எங்கே வலை என்று கேட்கும் பேராசிரியரிடம் என்ன சொல்ல..?

    பதிலளிநீக்கு
  15. நன்றி விஜய்

    நம் எல்லோருக்கும் நல்ல ஆண்டாய் மலரட்டும்

    பதிலளிநீக்கு
  16. நன்றி நேசன்

    அலையில் மிதக்கும் இலை போல இருக்கிறேன் என் இருப்பை உணர்த்த ..

    சூரியன் என் மேல் அவ்வப்போது தவழ்ந்து கொண்டு இருக்க.. ஏந்திச் செல்கிறேன் நான் ..


    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. நன்றி நவாஸ்

    உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. நன்றி சிவாஜி சங்கர்
    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    முகப் புத்தகத்தில் கடற்கரை பிடித்த கவிஞர்கள் பற்றிக்கேட்டிருந்தார்

    அதில் நேசன் விஜய் மற்றும் உங்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளேன்

    மிக அற்புதமான எழுத்து உங்களுடையது

    பதிலளிநீக்கு
  19. நன்றி ராம்
    நலமும் வளமும் பெற்று வாழ்க

    அப்பாடா கை தொடைக்க பேப்பர் தேடிக்கிட்டே இருந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  20. நன்றி மாஸ்டர்

    விருதை விலை கொடுத்து வாங்க மாட்டோம் அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  21. நன்றி ரிஷபன்
    யார் அந்த வண்ணத்துப் பூச்சி
    யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்
    சொல்லுங்க ரிஷபன்
    நல்லா இருக்கு

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. நன்றி தமிழுதயம்

    உங்க வாழ்த்துக்கு நன்றி

    வசந்த மாளிகை அருமை

    பதிலளிநீக்கு
  23. நன்றி செல்வா
    அண்ணாமலையான் முதல் பட்டம் கொடுத்தார் நீங்க ரெண்டாவது பட்டம் கொடுக்குறீங்க
    நன்றி

    ஆனா ஹெர்குலிஸால சுமக்க முடியல
    எனவே அவார்டை வாங்கிக் கிட்டு இன்னும் 1000 சுண்டல் பார்சல் கொடுங்க

    பதிலளிநீக்கு
  24. நன்றி பட்டியன்
    அடடா உள்ளம் கொள்ளை போன மகாபலிபுரத்தில்போன வாரமே நான் சென்றிருக்க வேண்டியது
    எனக்கு பதிலாக நீங்கள் சென்று வந்து என் உள்ளங்கவர் சிவகாமி மாமல்லர் பற்றி வேறு கூறி விட்டீர்கள் பட்டியன்
    நாளை அல்லது பொங்கல் தினம் அங்கேதான் செல்லணும்
    நன்றீ பகிர்வுக்கு

    புத்தாண்டு வாழ்த்துக்கள் பட்டியன்

    பதிலளிநீக்கு
  25. உங்க ஊருக்குப் பக்கத்துலதான் பிச்சாவரம்

    அங்கே இருக்கும்போது போட்டுல மிதந்து இருக்கோம் ..ஒரு இலை மாதிரி பாக் வாட்டர்ஸ்ல

    பதிலளிநீக்கு
  26. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் என்ற ஷேக் முகைத்தீன்

    பதிலளிநீக்கு
  27. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. உங்களுக்கும் என் கை நிறைந்த பூங்கொத்து தேனு.மனம் நிறைந்த ஆங்கிலப்
    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி ஹேமா புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.. எப்படி இருக்கீங்க ஹேமா நலமா?

    பதிலளிநீக்கு
  31. அன்பின் தேனம்மை

    இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  32. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  33. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் தேனு மக்கா!

    அருமை.

    பதிலளிநீக்கு
  34. புத்தாண்டு வாழ்த்துகள்
    அக்கா

    பதிலளிநீக்கு
  35. படிக்கின்ற சுகமே தனி. அது சுண்டல் மடித்த காகிதமானாலும் ,துண்டு காகிதமானாலும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  36. நன்றி முனியப்பன் சார்
    மிக அருமை முனியப்பன் ஸார்
    உங்க இலவசம் பற்றிய இடுகை ரொம்ப விஷயங்களின் தொகுப்பாக இருக்கிறது
    ஒரு ஆவணம் போல் தயாரித்து இருக்கீங்க வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  37. நல்லா இருக்குது அக்கா!!

    //இப்போது மட்டுமென்ன
    ஒரு புத்தாண்டு வாழ்த்தைத்தானே
    வாசித்துக்கொண்டு இருக்கிறாய்....!!//

    :) புடித்தது

    பதிலளிநீக்கு
  38. மிக்க நன்றி வானம் பாடி அவர்களே எதிர்பார்க்கவே இல்லை எனக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுப்பீர்கள் என்று

    இந்த வாழ்த்து இன்னும் என்னை செம்மையாக
    எழுதத் தூண்டுகிறது

    நன்றி வானம்பாடி அவர்களே மற்றும் சீனா சார் அவர்களே

    பதிலளிநீக்கு
  39. நன்றி சூர்யா
    என்னோட வலைத்தளத்துக்கு முதல் முறையா வர்றீங்க நன்றி
    புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்
    நலமே பொலிக

    பதிலளிநீக்கு
  40. அஷோக் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    உண்மை அஷோக் தனித்தே இருப்பதே தவத்தின் உச்சம் அருமையா சொல்லி இருக்கீங்க

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  41. இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி பாரா

    அருமை பாரா எப்படியோ எல்லாமே கைக்குள்தான் சின்னைப்பிள்ளைகளுக்கு

    பதிலளிநீக்கு
  44. உங்க புத்தண்டு வாழ்த்தும் நல்லா இருந்தது பாலா

    பதிலளிநீக்கு
  45. நன்றி கலகலப் பிரியா
    ரொம்பநாள் ஆச்சு நீங்க இங்கே வந்து

    என்ன இது கலகலப் பிரியா ரொம்ப சோகம்

    நீங்க லகலகனு சொன்னாதான் நல்லாஇருக்கு

    தினமணி,காம் செய்தியில் உங்க ப்லாக் நல்லா இருக்குன்னு போட்டு இருக்காங்கம்மா

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  46. நன்றி பாலா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  47. புத்தகக் கண்காட்சி பற்றி அருமையாய் பதிவு செய்து இருகீங்க சூர்யா பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  48. என்றும் வாசகன்
    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி
    உங்க ப்லாக் ரொம்ப உபயோகமுள்ள தகவல்களால் நிறைந்து இருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  49. நன்றி புலிகேசி

    எனக்கும் பசங்க் படம் பிடிச்சு இருந்துச்சு புலிகேசி மற்ற உங்க எல்லா கருத்துக்களும் அருமை

    பதிலளிநீக்கு
  50. நன்றி அப்துல்லா

    சக வலைப் பதிவர் சிங்கை நாதன் நலமுடன் இருப்பதுகுறித்து அறிந்து மகிழ்ந்தேன் அப்துல்லா

    பதிலளிநீக்கு
  51. புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  52. நன்றி மா
    புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரியா

    ரவை கேக்,, புகைப்படம்,, மிஸ் ப்லாகர் என்று அசத்தலா இருக்கு உங்க வலைத்தளம்

    பதிலளிநீக்கு
  53. வார்த்தைகளுக்கு
    வாழ்க்கைப்பட்டவனு(ளு)க்கு
    வார்த்தைகளாலே ஒரு
    வாழ்த்துப் பூங்கொத்து.....!!வாழ்த்து அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  54. I too am an addict to printed matter. It may be my elder brother's seventh standard science book or kadalai paper. I just read it.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)