வியாழன், 10 டிசம்பர், 2009

வீடு

சோமாஸ்கந்தர்களும்
பிரியாவிடையும்
உற்சவமூர்த்தியும்
எழுந்த கோயில்....

உயிர் உறையும் கிண்ணங்கள்...
அறுபதோ.,எழுபதோ.,
நூறுவரையோ வாழ....

எல்லைத்தகராறு.,
மீறி வளரும் கிளை வெட்டல் .,
முகம் காண ஒவ்வாமை
இத்தனையும்...

அன்பு பலகணிவழி
காற்றாகக் கசிந்து...
அவ்வப்போது உள்நுழையும்
சூரிய வெளிச்சமாய் நட்பும்...

சிறுமலைதெய்வமும் சந்தனக்கூடும்
லட்டும் பஞ்சாமிர்தமும்
சிலுவையும் பிறையும்
கோபுரமுமாய் உள்ளே...

ஜனனத்தில் மகிழ்ந்து
மரணத்தில் துடித்து
அதன் யாக்கைக்குள்ளும்
ஒரு ஆன்மா ..

தொட்டிச்செடியும்
தோட்டச்செடியும்
குண்டு தெறித்து மரிக்காமல்
வாழும் பேறு...

லட்சியமும்., கடமைகளும்.,
குறிக்கோள்களும்
ஒவ்வொரு செங்கல்லுள்ளும்
உறைபவராய் ஊடுருவி...

காதல் கூடல் குழந்தை இன்பம் கொடுத்து
கூதல் மழை கோடை மாசு சேறு வழித்து
ஹிரண்ய கர்ப்பமாய் அணைத்து ...

ஒவ்வொரு வீடும் வாழ்ந்து
வெளியேறும் போதும்
உயிர் நீங்குவதாய் துடிக்க ..,
வலியோடு வெளியேறி ...

எப்போது சென்றாலும்
என் துடிப்புக்கு இணையாக
அதன் இமைக்காத கண்ணும்.,
இதயத் துடிப்பும் உயிர்ப்புடன்....

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

64 கருத்துகள்:

  1. நல்லா இருக்குங்க கவிதை.... வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. லட்சியமும்., கடமைகளும்.,
    குறிக்கோள்களும்
    ஒவ்வொரு செங்கல்லுள்ளும்
    உறைபவராய் ஊடுருவி...


    ஒவ்வொரு வீடும் வாழ்ந்து
    வெளியேறும் போதும்
    உயிர் நீங்குவதாய் துடிக்க ..,
    வலியோடு வெளியேறி ...

    அழகான கவிதை....

    போட்டியில் வெற்றி பெற
    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. //உயிர் உறையும் கிண்ணங்கள்..//

    //ஜனனத்தில் மகிழ்ந்து
    மரணத்தில் துடித்து
    அதன் யாக்கைக்குள்ளும்
    ஒரு ஆன்மா ..//

    அருமை அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாக இருபதில் ஒருவர் நீங்கள்.

    "கூதல் மழை கோடை மாசு சேறு வழித்து"

    ரொம்ப கோர்வையா அழகா இருக்கு சகோதரி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. பழுத்த கிழவிகள்
    கூடத்தில் அமர்ந்து
    அவரவர் மச்சுவீட்டின்
    பழையபுராணம் பேசிக்கொண்டிருக்க
    கதை கேட்க்கும் சிறுமிபோல்
    கவனமாய் கேட்டுகொண்டிருந்தது
    பெயிண்ட் மணத்துடன்
    புதிய வீடு.

    போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    (வரிசையில் கொஞ்சம் கொஞ்சமா நான் பின்னாடி போயிகிட்டு இருக்கேன்)

    பதிலளிநீக்கு
  6. போட்டியில் வெற்றி பெற
    வாழ்த்துகள்...

    மிக அருமையாக வடிவு பெற்றிருக்கிறது தேனம்மை நீர் பூச்சிகளின் சலனங்களுடன் ஒரு சப் டெக்ஸ்ட் இருக்கிறது இந்தக் கவிதையில் அறிய முடிகிறவர்கள் ஆனந்திக்கட்டும்

    பதிலளிநீக்கு
  7. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  8. வெற்றிக்கு வாழ்த்துகள்.. உங்களுக்கு கிடைக்காமல் வேறு யாருக்கு?

    பதிலளிநீக்கு
  9. வீடு கவிதை உண்மையில் அனுபவ பதிவு.வீடுதான் நம் உலகம்.வாடகை வீட்டிலிருந்து வெளியேறும் போது (அ)
    வேறு வீட்டுக்கு குடி புகும்போது ஏற்படும்
    அந்த பிரிவு துயர் சொல்லி மாளாது. ஒவ்வொரு
    செங்கல்லோடும் பேசியது ,அது பேசியவர்களால்
    தான் உணரமுடியும்.வாழ்க்கையை அணு அணுவாக
    இரசிக்கத் தெரிந்தவர் நீங்கள் என்பதை கவிதைகளில் உணரமுடிகிறது.உங்களால் நானும்
    தவறவிட்ட நாட்களை எண்ணி ஆதங்கப் படுகிறேன்
    வெற்றிக்கு வாழ்த்துகள் தேனம்மை
    பாலா

    பதிலளிநீக்கு
  10. //ஒவ்வொரு வீடும் வாழ்ந்து
    வெளியேறும் போதும்
    உயிர் நீங்குவதாய் துடிக்க ..,
    வலியோடு வெளியேறி ...//

    நிச்சயம் வெற்றி தோழி....வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. நன்றி இரவுப்பறவை

    முதல் முறையா வந்து இருக்கீங்க

    நன்றி உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

    நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    நிலாப் பகல்கள் மழை நேரத்து ஈசல்களையும் சாயங்காலங்களையும் நினைவூட்டுகிறது இரவுப் பறவை

    நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  12. //ஜனனத்தில் மகிழ்ந்து
    மரணத்தில் துடித்து
    அதன் யாக்கைக்குள்ளும்
    ஒரு ஆன்மா ..//

    அருமையான வெளிப்பாடு.

    //ஒவ்வொரு வீடும் வாழ்ந்து
    வெளியேறும் போதும்
    உயிர் நீங்குவதாய் துடிக்க ..,
    வலியோடு வெளியேறி ...//

    சுவர்களுக்கு மனம் இருந்தால், வீடுகள் இல்லங்கள் ஆகின்றன. நல்லா எழுதியிருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி தினேஷ்
    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்
    நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பிரியம் சுழித்தோடும் வெளியின் நேசத்துக்கும் நேசக் கோபத்துக்கும் ஈடாகுமா நவாஸ் இது

    பதிலளிநீக்கு
  15. நன்றி விஜய்
    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

    உங்க காதல் எக்ஸ்டஸியும்
    வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. நவாஸ் பின்னூட்டத்தையே நேசன் மாதிரி கவிதையாவே எழுதுறீங்க

    அருமையா இருக்கு சகோதரரே

    பதிலளிநீக்கு
  17. //பின்ன உடலின் ஸ்கலிதங்கள் //
    உண்மையிலேயே அற்புதம் நேசன்

    நீங்கள் எது எழுதினாலும் அற்புதமாக மாற்றி விடுகிறீர்கள் ...

    சப் டெக்ஸ்டைப் புரிந்து கொண்டதற்கு நன்றி நேசன்

    நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. நன்றி புதுகைத்தென்றல்
    உங்கவாழ்த்துக்கு

    புதுகைத்தென்றல் அரசியல் விஷயம் கூட கலக்குறீங்க
    ஹைதை பிரியாணி மாதிரி ஹைதை அரசியல்லையும் நல்லா மசாலா காரமா இருக்கு

    எப்ப இந்த மாணவர்கள் உணர்வாங்களோ தெரியல

    பதிலளிநீக்கு
  19. நன்றி பட்டியன் உங்க வாழ்த்துக்கு

    தலைவன் வாழ்ந்த இடமும் படமும் அற்புதம் பட்டியன்

    போட்டிக்காக எழுதிய நெல்சன் மாணிக்கம் சாலையும் நல்லா இருக்கு

    வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நன்றி பாலா உங்க வாழ்த்துக்கு

    கன்றுடன் தொடரோட்டம் நல்லா இருக்கு பாலா அருமை

    பதிலளிநீக்கு
  21. நன்றி புலிகேசி உங்க வாழ்த்துக்கு

    //தன் சந்ததி தங்குவதற்கு வீடு என யோசிக்கிற எவரும் பிற்கால சந்ததியின் உணவுக்கு என்ன வழி என யோசிப்பதில்லை.//

    உண்மை புலவரே உண்மை

    பதிலளிநீக்கு
  22. நன்றி சித்ரா உங்க வாழ்த்துக்கு

    சித்ரா எலியைப் பத்தி எழுதியே இவ்வளவு கூட்டம் வந்துடுச்சே
    நீங்க புலியைப் பத்தி எழுதி இருந்தா என்ன ஆகியிருக்கும்

    ரொம்ப எக்ஸ்பிரஸ்ஸிவ் மா உங்க ஆர்ட்டிக்கிள்

    பதிலளிநீக்கு
  23. அதான் அக்கா, ஒண்ணும் புரியவில்லை. எல்லா புகழும் இறைவனுக்கே.
    ஆஸ்கார் கிடைச்ச மாதிரி, குஷி. அதான் இப்படி.
    ஹி,ஹி,ஹி,.......

    பதிலளிநீக்கு
  24. "தொட்டிச்செடியும்
    தோட்டச்செடியும்
    குண்டு தெறித்து மரிக்காமல்
    வாழும் பேறு..."

    இந்த பாக்கியம் என் மக்களுக்கு இல்லாமல் போனது துரதிஷ்ட வசமானது...!

    இந்த போட்டியின் பரிசு இந்த கவிதைக்கென கொடுக்கபடப்போவதில் அதன் மேன்மை கூடட்டும்..

    அன்புடன் சக்தி..!

    பதிலளிநீக்கு
  25. போட்டியில் வெற்றி பெற
    வாழ்த்துகள்!!!!
    நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  26. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, வீடு எவ்வளவு அருமையான காட்சிகள், அருமையாக கவிதையில் அவை விரிகின்றன.

    பதிலளிநீக்கு
  27. வீடுவரை உறவென்பார்கள்,
    நீங்கள் வீட்டையே உறவாக்கி
    உயிர்ப்பித்திருக்கிறீர்கள்...
    நல்ல வீடு பேரு...


    வெற்றியடைய வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. அழகான கவிதை....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  29. Excellent Piece Thenu. I was reminded of all the houses we spent in childhood.

    Our prayers and best wishes.

    Loving Brother

    பதிலளிநீக்கு
  30. Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

    பதிலளிநீக்கு
  31. //ஜனனத்தில் மகிழ்ந்து
    மரணத்தில் துடித்து
    அதன் யாக்கைக்குள்ளும்
    ஒரு ஆன்மா ..//

    ஆஹா அருமையானதொரு கவிதை... அனுபவக் கடலில் அகழ்ந்தெடுத்த முத்துக்களாய் அழகானதொரு கவிதையும் கூட ...

    வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  32. கவிதை அருமையாக இருக்கு.போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  33. சித்ரா வெட்டிப் பேச்சு அருமை புள்ள நல்லா இருக்கு அதுதான் கடவுள் உனக்கு குடுத்தவரம்

    பதிலளிநீக்கு
  34. அற்பு அருஞ்சொற் பொருளுடன்
    மிக அருமையாய் இருக்கு சக்தி வேல்

    நன்றி சக்தி வேல் உங்க பாராட்டுக்கு

    நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. நன்றி சுவையான சுவை உங்க பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  36. நன்றி யாத்ரா உங்க பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    //நீர்த்திரை விழிகளுடன்
    தூசு படிந்த நிழற்படத்தை
    முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்//

    ஆரம்பமே அருமையாய் இருக்கிறது யாத்ரா
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. நன்றி சந்தான சங்கர் உங்க பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    உங்க ஓரடிக் கயிறு கவிதை அருமை

    வாழ்த்துக்கள் நண்பரே

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. ஆரம்பமே அருமை.எப்பவும்போல அசத்தல் கவிதை.வாழ்த்துக்கள் தேனு.

    பதிலளிநீக்கு
  39. உங்க எட்டு காதலர்களும் அருமை தியா ஆனால் பாதணிதான் கொஞ்சம் சோகத்தோடு
    கூடியதா இருக்கு தியா

    நன்றி தியா உங்க வரவுக்கும் பாராட்டுக்கும்

    பதிலளிநீக்கு
  40. இயக்குனர் சேரனுடன் சந்திப்பு
    சாரு நிவேதிதாவுடன் விருந்துன்னு எங்கேயோ போயீட்டீங்க சூர்யா

    நன்றி உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  41. ரொம்ப நன்றி மெய்யர்

    அவ்வப்போது வந்து படித்து வாழ்த்துவதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  42. வெனி முதல் முறையா என் வலைத்தளத்துக்கு வர்றீங்க
    வாங்க
    "பா"பட விமர்சனம் அருமையா இருக்கு இனிமேதான் பார்க்கணும்
    அதென்ன லிங்க் மாற்றிக்கலாமான்னு கேக்குறீங்க கடலை மிட்டாயா

    பதிலளிநீக்கு
  43. கவிநா என் வலைத்தளதுக்கு முதல் முறையா வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றி மா

    //பெண்ணாகப் பிறந்து
    மண்ணாகிப் போன வயிற்றால்...//

    நிஜமாகவே வருத்தம் தந்த வரிகள் காயத்ரி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  44. "காதல் கூடல் குழந்தை இன்பம் கொடுத்து
    கூதல் மழை கோடை மாசு சேறு வழித்து"
    நல்ல சொற்கட்டு.. காவடிச்சிந்து முயற்சி பண்ணி பாருங்கள்.
    ஒவ்வொரு வீடும் வாழ்ந்து
    வெளியேறும் போதும்
    உயிர் நீங்குவதாய் துடிக்க ..,
    வலியோடு வெளியேறி ...
    வீடு என்பது ஒரு வரலாறின் , ஒரு குடும்ப நிகழ்வுகளின் மௌன சாட்சி.. அதை விட்டுப் பிரியும் வலி அதை உணர்ந்து பார்த்தவகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதை கவிதையாக்கியதற்காக நன்றிகள்

    உங்கள் கவிதைகள் மண்ணில் வேறூன்றி உள்ளது..பரிசு கிடைக்க வாழத்துகள்

    பதிலளிநீக்கு
  45. சஷிகா (ச)த்யா(ஷி)வானிமேன(கா)

    ரொம்ப நன்றிமா உங்க வாழ்த்துக்கு

    ரவைப் பணியாரம் ப்ராக்கோலி சுப்பர்ப்மா

    பதிலளிநீக்கு
  46. நன்றி ஹேமா உங்க வாழ்த்துக்கும் வருகைக்கும்

    குடையும் மழையும் அருமை ஹேமா

    காற்புள்ளி அரைப்புள்ளி எப்படி ஹேமா

    எங்கேயோ போயிட்டீங்க

    பதிலளிநீக்கு
  47. நன்றி வெற்றிவேல் ஸார்

    இரண்டாவ்து முறையாவும் என் வலைத்தளத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி

    காவடிச் சிந்து முயற்சிக்கிறேன்

    புது வலைத்தளம் தொடங்கி விட்டீங்க போலத் தெரியுதே

    நறும்புனல் நன்குதொடர வாழ்த்துக்கள் ஸார்

    பதிலளிநீக்கு
  48. உங்க வாழ்த்துக்கு நன்றி உழவரே

    உண்மைதான் உழவரே

    மொட்டை மாடியிலாவது ஜன்னலோரத்துலேயாவது கொஞ்சம் பசுமை வளர்க்க வேண்டும் சுவாசிக்கவாவது

    பதிலளிநீக்கு
  49. வாவ்!கலக்கி இருக்கீங்க தேனு!வெற்றி பெறும் மக்கா!

    சித்தப்பாவும் மகாவும் சொன்னார்கள் தேனு.ரொம்ப நெகிழ்வாக இருந்தது."குடு,குடுன்னு ஓடி வந்து கைகளை பற்றி கொண்டார்கள் அப்பா"என்று மகா சொன்னது,கவிதையாக இருந்தது.வேலைப் பளு மக்கா.உங்கள் மின் முகவரி வேணும் தேனு.ஆசுவாசபடும் போது கடிதம் எழுதணும்.அம்மாவிற்கு என் வணக்கத்தை தெரிய படுத்துங்கள்.

    rajaram.b.krishnan@gmail.com

    பதிலளிநீக்கு
  50. கல்லும் மண்ணும் கலந்த வீடு உணர்வுகளால் உயிர்ப்பைடைகிறது. உங்கள் வரிகளால் வீடு உள்ளத்திலும் நிறைகிறது. வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் !

    பதிலளிநீக்கு
  51. நல்லாயிருக்குங்க.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  52. ரொம்ப நன்றி மக்கா
    உங்க ஆசீர்வாதம் எல்லாம் இல்லாமலா
    உண்மையிலேயே மஹா அப்பாதானா நீங்கள் அப்ப சரி... நல்ல பிள்ளை மஹா..
    சிவகங்கையிலே இருந்து நீங்க வந்தால் உங்க கிட்ட கையெழுத்து வாங்கி புத்தகம் வாங்கலாம்னு இருந்தேன்
    அதுக்கு மஹா திருமணத்துல நேசன் சொன்னது மாதிரி வாங்கிக்கலாம் சரிதானே மக்கா

    பதிலளிநீக்கு
  53. அரவிந்தன் முதல் முறையா என் வலைத்தளத்துக்கு வர்றீங்க ..வாங்க ..
    நன்றி உங்க பாராட்டுக்கு..

    மொழியும் ஒலியும் ஓய்வெடுக்கும் சாமத்தின் நிலவறைகள் என்ற உங்கள் கவிதையும் அருமை அவனி அரவிந்தன்..

    உங்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  54. வாங்க அஷோக்
    முதல் முறையா என் வலைத்தளத்துக்கு வந்து இருக்கீங்க
    உங்க பாராட்டுக்கு நன்றி
    தகுந்த சமயத்தில் பாரதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள் அஷோக் உங்களை அகநாழிகையில் பார்த்து இருக்கிறேன் என நினைக்கிறேன்

    சாருவைப் பற்றிய குமுதம் காழ்ப்புணர்ச்சி தேவை இல்லாததுதான்
    நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  55. தேனம்மை அக்கா , நல்ல அருமையாக உள்ளது .

    வாழ்வில் தத்துவத்தையும் வீட்டின் உறவுகளையும் அற்புதமாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள் .

    வைர வரிகள் ,

    பதிலளிநீக்கு
  56. முதல் முறையாய் என்னோட வலைத்தளத்துக்கு வந்து இருக்கீங்க ஸ்டார்ஜன் வாங்க
    உங்க வாழ்த்துக்கு நன்றி
    பிரியமுடன் வசந்துக்கு பிறந்த நாள் வாழ்த்தும் காதல் கவிதையும் போட்டிக்கான மழை கவிதையும் நல்லா இருக்கு ஸ்டார்ஜன்
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  57. வீட்டின் குணம் வசிப்பவர்களுக்கும், வசிப்பவர்களின் குணம் வீட்டுக்கும் வருவதாய் சொல்வார்கள்.

    வீடு பற்றிய உங்கள் உணர்வு அருமை. உங்கள் பிற கவிதைகளையும் படிக்கத் தூண்டுகிறது.

    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  58. நன்றி பால குமார்
    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க
    உங்க வாழ்த்துக்கு நன்றி

    ஹட்ஸனுக்கும் மெர்சிக்கும் திருமண வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  59. நமது ரகசியங்கள் அனைத்தையும் கட்டிக் காக்கும் ஒரே வினோத நட்பு "வீடு" தான்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  60. அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  61. நன்றி சாம்ராஜ்யப் பிரியன்.

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  62. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)