மூடி மூடித் தூறும்
மழையாய் முகிழ்ந்துகொண்டே
இருந்தது காதல்....
பருகப் பருகத் தீராமல்
வழிந்துகொண்டே இருந்தது
உன் விழிவழி அமிழ்தம்....
காதலுடன்
புன்னகைக்கிறாயா
கருணை சிந்துகிறாயா...
ஒவ்வொரு ஈராவிலும்
உனைக் கண்டு பிடிக்கிறேன்
டார்வினிஸப் பரிணாமம்....
உருவாய் அருவாய்
இருந்திலாத நிலையிலும்
உனை உணர்ந்து....
அசரீரியைப் போல
அவ்வப்போது
வாய்ஸ் மெஸேஜிலும்...
ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் காதலை...
வாசமில்லாவிட்டாலும்
பாசமாய் விரித்துக்
கொண்டே இருக்கிறாய்
பூப்போன்ற உன் பார்வையை....
உன் கண் குடுவைக்குள்
அடர்த்தியான திரவமாய்
அயர்ந்தது மூளை....
சிலிக்கான் சில்லுகளில்
ஒவ்வொரு மெகாபைட்டிலும்
ஒவ்வொரு கிகாபைட்டிலும் நீ...
என் தவறையெல்லாம்
களைந்து எறியும்
நார்ட்டனும் சிமெண்டெக்கும் நீ...
கண்ணாடிக்குள் கண்ணும்
மீசைக்குள் உதடும் ஒளித்த
மேகத்துக்குள் நிலவா நீ....
மரத்துள் மலர்ந்த
மல்லியா நீ ...
என் மனத்து மல்லி ...
மழையாய் முகிழ்ந்துகொண்டே
இருந்தது காதல்....
பருகப் பருகத் தீராமல்
வழிந்துகொண்டே இருந்தது
உன் விழிவழி அமிழ்தம்....
காதலுடன்
புன்னகைக்கிறாயா
கருணை சிந்துகிறாயா...
ஒவ்வொரு ஈராவிலும்
உனைக் கண்டு பிடிக்கிறேன்
டார்வினிஸப் பரிணாமம்....
உருவாய் அருவாய்
இருந்திலாத நிலையிலும்
உனை உணர்ந்து....
அசரீரியைப் போல
அவ்வப்போது
வாய்ஸ் மெஸேஜிலும்...
ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் காதலை...
வாசமில்லாவிட்டாலும்
பாசமாய் விரித்துக்
கொண்டே இருக்கிறாய்
பூப்போன்ற உன் பார்வையை....
உன் கண் குடுவைக்குள்
அடர்த்தியான திரவமாய்
அயர்ந்தது மூளை....
சிலிக்கான் சில்லுகளில்
ஒவ்வொரு மெகாபைட்டிலும்
ஒவ்வொரு கிகாபைட்டிலும் நீ...
என் தவறையெல்லாம்
களைந்து எறியும்
நார்ட்டனும் சிமெண்டெக்கும் நீ...
கண்ணாடிக்குள் கண்ணும்
மீசைக்குள் உதடும் ஒளித்த
மேகத்துக்குள் நிலவா நீ....
மரத்துள் மலர்ந்த
மல்லியா நீ ...
என் மனத்து மல்லி ...
சென்னையில் பலத்த மழை.. வலைப்பூவில் காதல் மழை..வாவ்.. அருமை..
பதிலளிநீக்குநன்றி சூர்யா உங்கள் பாராட்டுக்கு..
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்குங்க
பதிலளிநீக்குஆனால் உங்களோட கவிதை போல இல்லை
ஏனொ தெரியலை
:)
எளிமை + அழகு. நல்லா இருக்குங்க சோதரி
பதிலளிநீக்குஅப்படியே உங்களை பின் தொடர்வதற்கு வழிவகை செய்யவும்
நன்றி நேசன்
பதிலளிநீக்குஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி எழுத முயற்சிக்கிறேன் நேசன்...
க. சீ. சிவகுமாரிடம் பாராட்டுக் கடிதம் நீங்கள் பெற்றது எனக்குப் பேருவகை நேசன்...
அவரின் பல படைப்புகளை குங்குமம் முதலான இதழ்களில் படித்து ரசித்து இருகிறேன் நேசன்...
நன்றி பாலா ...
பதிலளிநீக்குஉங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும்
சுருக்கமாகவும் "சுருக்" கென்றும் நல்லா எழுதுறீங்க பாலா...
மீசைக்குள் உதடும் ஒளித்த
பதிலளிநீக்குமேகத்துக்குள் நிலவா நீ....
நல்லா இருக்கு சகோதரி
ஆண்டிவைரசும் கவிதைக்குள் புகுத்திவிட்டீர்களே
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி விஜய்
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு
தொடர்ந்து ஊக்கமூட்டுவதற்கு நன்றி
pUkkaLil iththanai vahaiya? Unbelievable
பதிலளிநீக்குThanks MEY for ur comments
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!