திங்கள், 28 செப்டம்பர், 2009

செண்பகப்பூ

காண்டாமணி ஒலிக்க
கலியுகத் தெய்வம்
ஐயனாரும் சாத்தையனும் ...

கருவிழி முறுக்கு
மீசையுடன் கருப்பரும்
எடுப்பான புரவிகளுடன்
அமர்ந்த கோயில்...

குலதெய்வம் கும்பிட
வருஷம் ஒருமுறை
விடுப்பெடுத்துக் குடும்பத்துடன்....

காதுகுத்து, மொட்டை,
பொங்கல் என்று
நீ வருவாய்...

நீ நன்றாக இருக்கின்றாயா
எனப் பார்க்கும் ஆவலில்
நானும் வருவேன்...

ஒருவரைப் பார்த்து
ஒருவர் மகிழ்ந்து கொள்ளும்
உன்னதத் தருணம் அது...

கிடா வெட்டு, படையல் ,
சாமி கும்பிட்டு முடித்து
நீ காரேறி சென்ற பின்னும்...

உடைந்த உன்
வளையல் துண்டும்
கூந்தலிலிருந்து உதிர்ந்து
காய்ந்த செண்பகப்பூவும்...

ட்ரங்குப் பெட்டி
திறக்கும் போதெல்லாம்
உன் மணமாய்...

6 கருத்துகள்:

  1. விஜய் வருக
    தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
    தங்கள் ஆத்திச்சூடி அருமை

    பதிலளிநீக்கு
  2. // ட்ரங்குப் பெட்டி
    திறக்கும் போதெல்லாம்
    உன் மணமாய்.. //

    வலைப்பூவை திறக்கும் போதெல்லாம் மணமாய் வீசும் உங்க கவிதையும்.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் பிஸியா இருக்குற மாதிரி இருக்குங்க ராகவன் உங்க வருகை
    வர்றீங்க பின்னூட்டம் போடுறீங்க கொஞ்சம் அவசரமா போயிடுறீங்க
    அலுவல்கள் அதிகம்னு நினைக்குறேன்

    நன்றீங்க ராகவன்

    பதிலளிநீக்கு
  4. 136 வலைத்தளங்களைப் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது ராஜாராம்

    விமர்சனத்துக்கு நன்றீங்க

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)