வெள்ளி, 25 செப்டம்பர், 2009

காக்கரட்டை மல்லி [காட்டு மல்லி]

மூக்கிலே புல்லாக்கு...
முகம் நெறைய மேக்கப்பு...
கார்பாவும் தாண்டியாவும்
பாங்ராவும் ஆடிய நீ ....
கோலாட்டம் கும்மியிலே
என் மனசை சேர்த்தடிச்சே...

பள்ளிக்கூட ஆண்டு விழா...
கரகமா, காவடியா...
கதகளியா, மோகினி ஆட்டமா...
ஒடிஸியா, குச்சுப்புடியா,,,
எதையாடப்போறே நீ...?

சந்திரப்பிரபை, சூர்யப்பிரபை,
நெத்திச்சுட்டி, ஜடைபில்லை,
சுற்றித்தச்ச காக்கரட்டை...
சுழன்றாடும் சாட்டை ஜடை ...
செதுக்கி வச்ச தங்கச் செலை....

பரதத்துலே தில்லானா
பதம் பிடிச்சு நீ ஆட
பார்த்துருந்த என்னை
வாசமில்லா காக்கரட்ட
வாசமாகி சுத்துதடி...

13 கருத்துகள்:

  1. வணக்கம் தேனம்மை.உங்கள் பெயரைச் சரியாக உச்சரிக்கிறேனா ?உங்கள் தேனான பெயரை ஏன் ஆங்கிலத்தில்வைத்திருக்கிறீர்கள்.தமிழாக்குங்கள்.
    இன்னும் அழகாய் இருப்பீர்கள்.

    தேனு,உங்கள் கவிதைகளில் சில பார்த்தேன்.
    மனதில் அத்தனையும் ஆனந்தமாய் வந்து விழுந்த வார்த்தைகள் அற்புதமாய் கவிக்கோர்வையாகி விழுந்திருக்கின்றன.ரசித்தேன்.கிராமம்,கோவில் திருவிழா,வீடு ,நட்பு ,காதல்,இயற்கை என்று ஒரு சுற்றே சுற்றினேன்.என்னை மாற்றிக்கொள்ள இப்படியான அனுபவங்களுக்குள் இருப்பது எனக்குப் பிடித்த ஒன்று.

    தேனு,இன்று என் கவிதை உங்களைக் கொஞ்சம் கலக்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
    மன்னித்துக்கொள்ளுங்கள்.சிலசமயங்களில் நினைப்பதுண்டு.நடந்தவைகளை மறந்து இனி நடப்பவைக்காகத் தைரியமாக இருந்து தைரியமான வர்த்தைகளோடு எழுதவேணும்ன்னு.ஆனால் முடிவதில்லை.படும் வேதனையும் பட்ட வேதனைகளும் மறக்கமுடியாதவைகள்.இனி என்ன ஆகப்போகிறதோ என்கிற அவநம்பிக்கையும் கூட.அதோடு எங்களின் வேதனைகள் எம் பிற்காலத்திற்கான ஆவணப்பதிவுகளும் கூட.

    சகோதரி மனம் கலங்க வேண்டாம்.தமிழ்நாட்டு அரசியல்தான் எங்களைக் கைவிட்டதே தவிர தமிழ்நாட்டு மக்கள் என்றும் எங்களோடுதான்.
    அவர்களது உதவியோடு விடுகின்ற மூச்சை நின்மதியாக விட முயற்சி செய்து
    கொண்டிருக்கிறோம்.உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு மிக்க நன்றி தோழி.அமைதியாய் இருங்கள்.கலங்க வேண்டாம்.சோர்ந்துவிட்டால் எங்கள் மேல் ஏறிப்போவான் சிங்களவன்.எங்களை எழுப்பவேண்டிய நீங்களே சோர்ந்துவிடலாமா.
    துணிவோடு எம் மக்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வோம்.
    சந்திப்போம் தோழி.

    பதிலளிநீக்கு
  2. அன்புச் சகோதரி ஹேமா என்னைத் தேனு என்றுதான் என் அம்மா அப்பா தோழிகள் மற்றும் உறவினர்கள் விளிப்பார்கள் அதே போல் தாங்கள் விளித்ததும் சகோதரியில்லா எனக்கு ஒரு சகோதரி கிடைத்தது போல் இருந்தது விளையாடும் பொம்மைகள் மண்ணில் கிடந்தாலே பாய்ந்து எடுத்து அணைக்கும் நாம் நம் மக்கள் படும் துயரை எவ்வாறு தாங்குவது? அதுவும் உங்கள் இடுகையில் நீங்கள் உண்மையை ஊற்றி [தமிழனின் ரத்தம் ஊற்றி] எழுதுகிறீர்கள் பார்க்கும் போதும் கேட்கும் போதும் பதைக்கிறது சகோதரி உங்களிடம் இருக்கும் துணிவு எனக்கும் வரவேண்டும் என்று கொற்றவையிடம் பிரார்த்திக்கின்றேன்

    லேப்டாப்பில் இடுகை இட்டு [கவிதை நோட்டுப் போல] பதிவு செய்வது மற்றும் சில கேட்ஜெட்டுகளை இணைப்பது தவிர நான் ஒன்றுமே செய்வது இல்லை ஹேமா
    முன்பு அப்படிச் செய்து சிறிது நேரம் வலைத்தளமே காணாமல் போய் பின்பு கிடைத்தது
    உங்கள் வலைத்தளம் மிக அழகாக பார்த்தவுடனே படிக்கவேண்டும்போல் உள்ளது
    எல்லாவற்றிலும் மிகத்திறமைசாலியாகைருக்கின்றீர்கள் ஹேமா

    உரமூட்ட வருகை தந்ததற்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்குரிய ஹேமா
    உங்கள் கடிதம் வெளியாகி உள்ளதே
    இங்கு மின்சாரம் இல்லை அதனால் பதில் வெளிவரத்தாமதம் ஆகி விட்டது
    நான் இடுகையில் உங்கள் கருத்துரையும்
    என்னுடைய பதிலும் எழுதி இருக்கிறேன்
    என் மனம் நோகவா ----காலதாமதம் உங்களைஇவ்வாறு
    எண்ணமிட வைத்து விட்டது
    என்னை மன்னியுங்கள்
    உங்களிடம் இருந்து பதிலும் ஆதரவும் வரும் என நான் நினைக்கவே இல்லை
    எனக்கே அது இன்ப அதிர்ச்சி
    நன்றி ஹேமா
    அன்புடன் தேனு

    பதிலளிநீக்கு
  4. நன்றி,தேனு இதுக்கெல்லாம் மன்னிப்பு.எனக்கு இணையத்தில் 2 அண்ணா,ஒரு சித்தப்பா என்று உறவுகளின் பட்டியல் நீண்டபடி.இப்போ நீங்களும் கூட.மிகவும் சந்தோஷம் சகோதரி.

    என்னில்தான் தப்புன்னு நினைக்கிறேன்.
    பின்னூட்டம் மேலேயுள்ள கவிதைன்னு நினைச்சு 3 ஆவது கவிதையின் கீழே போட்டுவிட்டு,நான் ஏதாவது உணர்வின் வேகத்தில் தவறாக எழுதிவிட்டேனோ என்று பயந்துவிட்டேன்.நன்றி எனக்கு அறியத் தந்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  5. நிறைய தடவை உங்க தளத்துக்கு வந்திருக்கேன். கருத்து தெரிவிப்பது போனதடவை தான் முதல்ல....உங்க கவிதை எல்லாமே...ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடவே இருக்கு....ரொம்ப நல்லா இருக்குங்க....!

    - Dheva. S

    பதிலளிநீக்கு
  6. அனேகமா நிறய நேரம் மோட்டு வளய பாத்துட்டே இருப்பீங்களோ?(சிந்திக்கத்தான்) (தொட்டில இருக்கற மீனு வறுவலாகுமா? ஆனா எனக்கு 1 ப்ளேட்)

    பதிலளிநீக்கு
  7. கவிதையில் தலைப்பு சொல்லான காக்கரட்டை என்ற சொல் நான் தமிழில் கேள்விப்படாதது (செட்டிநாட்டில் சொல் வழக்கில் கூட இல்லை என நினைக்கறேன்). ; (இந்த வயதிலும் தமிழில் கேட்டிராத சொற்கள் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.)
    நல்ல புனைவு

    பதிலளிநீக்கு
  8. நன்றி தேவா உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  9. உண்மை அண்ணாமலையான் எப்படி இவ்வளவு சரியா சொல்லுறீங்க

    வறுக்கும் போது ரெண்டு ப்ளேட்டாவே கொடுத்து அனுப்புறேன் அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  10. நன்றி நெற்குப்பைத்தும்பி ரொம்ப சரியா சொன்னீங்க நெற்குப்பைத்தும்பி சகிப்புத்தன்மை தான் இப்போதைய தேவை

    பதிலளிநீக்கு
  11. ஆன்னு வாய தொறந்துட்டே இருக்கேன்....(மீனுக்குத்தான்)

    பதிலளிநீக்கு
  12. வரும் ஆனா வராது அண்ணாமலையான்
    :-))

    பதிலளிநீக்கு
  13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)